Published:Updated:

இருள் படர்ந்த சிசிடிவி ஃபுட்டேஜை வைத்து பெரிய நெட்வொர்க்கையே பிடித்த தமிழக போலீஸ்! #GadgetTippedCrimes அத்தியாயம் 11

இருள் படர்ந்த சிசிடிவி ஃபுட்டேஜை வைத்து பெரிய நெட்வொர்க்கையே பிடித்த தமிழக போலீஸ்! #GadgetTippedCrimes அத்தியாயம் 11
இருள் படர்ந்த சிசிடிவி ஃபுட்டேஜை வைத்து பெரிய நெட்வொர்க்கையே பிடித்த தமிழக போலீஸ்! #GadgetTippedCrimes அத்தியாயம் 11


2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு தஞ்சாவூர் பகுதியில் நடந்த சம்பவம் இது. பரிசுப்பொருள்களை விற்கும் கடை வைத்திருக்கிறார் ராஜா. தனது தொழிலுக்காக ஒரு மாருதி ஆம்னி வண்டியைப் பயன்படுத்தி வந்தார். ஒருநாள் இரவு 2 மணிக்கு மேல் வண்டியை வீட்டுக்கு முன்னால் நிறுத்திவிட்டு தூங்கப் போயிருக்கிறார். காலையில் ஆம்னியைக் காணவில்லை. காவல்துறையில் புகார் அளிக்கிறார் ராஜா. இதே போன்று வாகனங்கள் காணாமல் போகும் சம்பவம் அந்தக் காவல் நிலைய எல்லையில் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. அதனால் இந்தத் திருட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தது தமிழக போலீஸ். எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்க வேண்டுமென நம் காவல்துறை நினைத்துவிட்டால் அதை நிகழ்த்திவிடுவார்கள். இந்தக் கார் கடத்தலும் அப்படித்தான்.

சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தனர் போலீஸார். வரும் வழியிலேயே அந்தத் தெருவுக்கு முந்தைய தெருவில் ஒரு சிசிடிவி கேமரா இருப்பதைக் கவனித்தனர். இரவு 2 மணிக்கு மேல்தான் வாகனம் திருடுபோனது என்பதால் அந்த நேரத்துக்குப் பின்னர் இருக்கும் ஃபுட்டேஜைப் பார்த்தனர். அதில் ஒரு ஸ்விஃப்ட் கார் மூன்று முறை திரும்பித் திரும்பி வட்டமடிக்கிறது. பின் சிறிது நேரத்தில் ஆம்னி காரும் செல்ல, ஸ்விஃப்ட் கார் பின்னாடியே சென்றிருக்கிறது. இருட்டான இடம். வீடியோவில் வண்டியின் நம்பர் ப்ளேட்கூடத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், காருக்குள் இருந்தவன் போன் பேசுவது தெரிகிறது. உடனே, அந்த ஏரியா செல்ஃபோன் டவரில் அந்த நேரத்தில் பேசியவர்களின் பட்டியல் எடுக்கப்படுகிறது. எப்படியும் அந்த எண் ஒரிஜினல் ஐடி ப்ரூஃப் தந்து எடுக்கப்பட்டிருக்காது என முடிவு செய்கிறது போலீஸ். அதேபோல அந்தப் பட்டியலில் ஒரு மொபைல் மட்டும் போலி ஐடி என தெரிய வருகிறது. அந்த எண் இப்போது எங்கே இருக்கிறது என டிராக் செய்கிறது போலீஸ்.

நாடாளுமன்றத் தேர்தல் காலம் என்பதால் செக்கிங் வழக்கத்தைவிடக் கடுமையாக இருக்கிறது. அந்தச் சோதனை என நினைத்து வந்தவன் காவல்துறையின் வித்தியாசமான சோதனையைப் பார்த்து வண்டியை விட்டுவிட்டு ஓடி விடுகிறான். அந்த வண்டி ஆம்னி. ஆனால், நம்பர் ப்ளேட் வேறு. வண்டிக்குள் தேடியதில் ஆர்சி புத்தகம் கிடைக்கிறது. அது அந்த வண்டியின் நம்பரிலே இருக்கும் ஒரிஜினல் ஆர்சி. ஆனால், வண்டியைப் பார்த்த ராஜா “நிச்சயமா இது என் வண்டிதாங்க” என்கிறார். இன்ஜினில் சேஸிஸ் நம்பரைப் பார்த்தால், forge செய்தது போலி இருந்திருக்கிறது. ஆனால், அந்த எண் ஆர்சியில் இருந்த எண்தான். போலிஸுக்கு ஏதோ பெரிய விவகாரம் எனப் புரிகிறது. விசாரணையைத் தீவிரமாக்குகிறார்கள். ஒரு பெரிய நெட்வொர்க்கையே பிடிக்கிறார்கள்.

விபத்துக்குள்ளாகும் வாகனங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எடுத்துச் செல்லும். க்ளைம் செட்டில் ஆனதும் அந்த வாகனங்களை ஏலத்தில் விடுவார்கள். எதற்கும் பயனில்லாத அந்த வாகனங்களை வாங்கிச் சென்று காயலாங்கடையில்தான் போட வேண்டும். விஷயம் என்னவென்றால், அந்த வண்டியின் ஒரிஜினல் ஆர்.சி. புத்தகமும் அதோடு தரப்படும். அதிலிருந்துதான் இந்தத் திருடர்கள் தங்கள் திரைக்கதையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏலத்தில் கிடைக்கும் வாகனங்களை இந்த குரூப் வாங்கிவிடும். அதே மாடல், அதே கலர் வாகனங்கள் வேறு எங்கிருக்கிறது என நோட்டமிடுவார்கள். வாகனங்கள் கண்ணில்பட்டதும் சில நாள்கள் அதைப் பின்தொடர்வார்கள். சரியான நேரம் குறித்து, அதைத் திருடிவிடுவார்கள். திருடிய வண்டியை ஏலத்தில் எடுத்த வண்டியின் ஆர்.சி.க்கு ஏற்றதுபோலத் தயார் செய்துவிடுவார்கள். எல்லாம் முடிந்ததும் திருடிய வண்டியையும் ஏலத்தில் எடுத்த ஆர்.சியையும் சேர்த்து நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள். அந்த வருடம் மட்டும் தஞ்சைப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வண்டிகளை விற்றிருக்கிறார்கள்.

தஞ்சையில் ஒரு சின்னத் தெருவில் ஆரம்பித்த விசாரணை, போலீஸை திருச்சி வரை கொண்டு சென்றது. கார் திருட்டுக் குற்றம், கோடிகளில் புரளும் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கைக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

தமிழகப் போலீஸும் திறமையில் குறைந்தவர்களில்லை. அவர்களைச் செயல்பட அனுமதிக்கிறார்களா இல்லையா என்பதுதான் கேள்வி.

_________

ட்விட்டரில் டமூராவிடம் பேசிய பலரில் ஒரு ஹேண்டில்(Handle) மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன் பயோவில் “hanging pro” என்றிருந்தது. பயமுறுத்தும் படத்துடன் இருந்த அந்த அக்கவுன்ட் சொன்னது இதுதான் “கஷ்டப்படும் மக்களுக்கு நான் உதவ விரும்புகிறேன். எனக்கு தனி மெசேஜ் அனுப்புங்கள்”. (I want to help people who are really in pain. Please DM me anytime”.)

.