பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!
பிரீமியம் ஸ்டோரி
News
டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

பு.விவேக் ஆனந்த்

மொபைல் ஆப்ஸ்களின் பயன்பாடு `அதுக்கும் மேல... அதுக்கும் மேல' எனத் தடாலடியாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. கற்பனைக்கே எட்டாத அளவுக்கு கான்செப்ட் பிடித்து, அதற்கு புரோகிராம் ரூட் போட்டு ஹிட் அடிக்கிறார்கள் ஆப் டெவலப்பர்ஸ். தினம் தினம் ஆயிரம் அப்ளிக்கேஷன் உருவாகும் ஆப் ஸ்டோரில் இருந்து, உங்கள் போனுக்கு டௌன்லோட சில ஸ்மார்ட் ஆப்ஸ்களின் அறிமுகம் இங்கே...

தமிழ் ஃப்ளாஷ் நியூஸ்

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

30 வார்த்தைகளில், ரியல் டைம் அப்டேட் செய்திகளால் லைக்ஸ் அள்ளுகிறது தமிழ் ஃப்ளாஷ் நியூஸ். பிரபல நாளிதழ்கள், உள்ளூர் நாளிதழ்கள், சமூக வலைதளங்களின் வைரல் விஷயங்கள்... என அத்தனையையும் அழகு தமிழில் படிக்கலாம். பிடித்த செய்திகளை சமூக வலைதளங்களில் எளிதாக ஷேர் செய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், யூத்களிடம் இதற்கு செம வரவேற்பு!

தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிக்கேஷனை இன்ஸ்டால் செய்ய bit.ly/TFNCA என்ற லிங்கில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது 044 - 66808066 என்ற நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும்.

 ஃபேபுலஸ் - மோட்டிவேட் மீ 

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

`இந்த உலகத்தில் என்னைக் கவனிக்க யாருமே இல்லையே' எனப் புலம்பும் பேச்சுலர்கள், வெளி ஊரில் வேலைசெய்பவர்களுக்கான செயலிதான் இது. கிட்டத்தட்ட உங்கள் பெர்சனல் செக்ரெட்டரிபோல இந்த ஆப் இயங்கும். தினமும் தூக்கத்தில் இருந்து நீங்கள் எந்த நேரத்துக்கு எழ வேண்டும், எப்போது உணவு உண்ண வேண்டும், எப்போது வீட்டில் உள்ளவர்களுடன் பேச வேண்டும்... என நீங்களே இந்த அப்ளிக்கேஷனில் செட் செய்யலாம். `மணி 7... குளித்துவிட்டீர்களா?’, `இது மருந்து சாப்பிடும் நேரம்’, `மணி 11... அம்மாவிடம் பேசவேண்டும்...’ என அலார்ம் அடித்து இந்த ஆப் உங்களுக்கு நினைவூட்டும்!

பீடோமீட்டர்

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

`ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடங்க’ என்கிறார்கள் மருத்துவர்கள். `இதை  எப்படிக் கணக்கிடுவது?. ஒருமுறை பீடோமீட்டர் ஆப்பைத் தரவிறக்கி, ஆன்-மோடில் வைத்துவிட்டால் போதும்... அந்த நொடியில் இருந்து நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியையும் கணக்கிட ஆரம்பித்துவிடும். பலர் பாத்ரூமுக்குக்கூட மொபைலை எடுத்துச்செல்வதால், நடக்கும் ஒவ்வோர் அடியுமே கணக்கெடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு நாளும் வாரமும் மாதமும் எத்தனை அடி, எத்தனை கிலோ மீட்டர் நடந்திருக்கிறீர்கள், உங்கள் உடலில் எவ்வளவு கலோரி எரிக்கப்பட்டது போன்றவற்றை இந்த ஆப் புள்ளிவிவரங்களோடு காட்டும்!

குவாலிட்டி டைம்

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

``எந்த நேரமும் நீங்க மொபைலில்தான் இருக்கீங்க’ என யாராவது சொன்னால் எல்லோரிடம் இருந்தும் உடனடியாக வரும் பதில் `அப்படி எல்லாம் இல்லையே' என்பதுதான். உண்மையிலேயே தினமும் எவ்வளவு மணி நேரம் நீங்கள் மொபைலில் செலவிடுகிறீர்கள், ஃபேஸ்புக், யூ-டியூபில் என ஒவ்வொரு செயலியிலும் எவ்வளவு நேரம் செலவுசெய்கிறீர்கள் என்பதை இந்த ஆப் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும். இதன் மூலம் மொபைல் பயன்பாட்டை நாம் மாற்றிக்கொள்ள முடியும்.

டி.என்.பி.எஸ்.சி

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

கூகுள் ப்ளேஸ்டாரில் 5-க்கு 4.6 ஸ்டார் வாங்கிவைத்திருக்கும் தமிழ்நாட்டின் டாப் அப்ளிகேஷன். வி.ஏ.ஓ., எஸ்.ஐ., குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான  டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அனைத்துக்கும் தயாராகுபவர்களுக்குப் பயன்படக்கூடிய ஆப்.  ஒவ்வொரு வகைத் தேர்வுக்கும் என்ன பாடத்திட்டம்... எப்போது தேர்வு நடக்கும் என விவரங்கள் அத்தனையும் அப்டேட்டாக இருக்கிறது. தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடங்களும், ஒவ்வொரு பிரிவுக்கும் மாதிரி மொபைல் தேர்வுகளும் இருக்கின்றன. மாதிரி வினாத்தாள்களும்  உள்ளதால், நேரடியாக நீங்களே மொபைலில் தேர்வு எழுதி முடிவைத் தெரிந்துகொள்ளவும் முடியும்!

வூடு (Voodoo)

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேஸான், மிந்த்ரா... என பல இணையதள ஷாப்பிங் நிறுவனங்களும், ஆப் ஷாப்பிங் நிறுவனங்களாக மாறுகின்றன. கணினியில் அடுத்தடுத்த ஸ்கிரீன்களில் போட்டியாளர் களின் பேஜையும் திறந்துவைத்து விலையை ஒப்பிடலாம்.  மொபைலில் அப்படி ஒப்பீடுசெய்ய உதவும் ஆப்தான் `வூடு’. இதை இன்ஸ்டால் செய்துவிட்டால், ஃப்ளிப்கார்ட்டில் நீங்கள் ஒரு பொருளைப் பார்த்தாலும் அமேஸான், இ-பே உள்ளிட்ட மற்ற ஆப்களில் அந்தப் பொருளின் விலை என்ன என்பது அங்கேயே வந்துவிடும்!

பீரியட் டிராக்கர் :

டௌன்லோட் பண்ணுங்க ப்ரோ!

உலக அளவில் ஐந்து கோடிக்கும் அதிகமான பெண்கள், பீரியட் டிராக்கர் அப்ளிக்கேஷனைப் பயன்படுத்துகிறார்கள். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு உதவும். ஒவ்வொரு மாதவிடாய் நாட்களையும் இந்தச் செயலியில் பதிவுசெய்துகொண்டால், அதற்கு ஏற்ப அடுத்த மாதவிடாய் வரும் மூன்று நாட்களுக்கு முன்னர் அலெர்ட் மெசேஜ் தரும். குழந்தைப்பேறுக்கு, எந்த நாளில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் என்பதால், திட்டமிடவும் முடியும்!