நியூஸிலாந்தைச் சேர்ந்த ஹூயா எனும் பறவை இனம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டது. 12 சிறிய படக் கதைகள் மூலம், இந்தப் பறவையைப் பற்றி விளக்கும் ஆப், 12 Huia Birds. அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு பறவைகள் பற்றியும், ஏன் அவற்றை நாம் காக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆப் நமக்கு விளக்குகிறது. http://bit.ly/top10biex



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் கைரேகைகள் ஒரு விலங்காக மாறினால் எவ்வளவு ஜாலியாக இருக்கும்? அப்படியான அழகான த்ரில் ஆப், Magic Finger-Kids Paints. இதில், உங்கள் கை விரல்களைப் பதித்தால் வரும் விலங்குகளுக்கு எழுத்துக்களை உணவாகக் கொடுத்தால், வார்த்தைகளாக மாற்றி விளையாட்டுக் காட்டும். இப்படி எழுத்துக்களைக் கோத்து சுட்டிகளுக்கு வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்கலாம். http://bit.ly/top100magicfingers

கணிதத்தில் ஜியோமெட்ரி வடிவங்களையும், அந்த வடிவங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதையும் புதிர்கள் மூலமாகக் கற்றுக்கொடுக்கிறது, DragonBox Elements. கிரேக்க கணித அறிஞர், யூக்ளிட் கோட்பாட்டின் அடிப்படையில் வடிவமைத்து, கணிதத்தின் வடிவியலைத் தெளிவாகவும் ஆழமாகவும் புரியவைக்கிறது. http://bit.ly/top10dbel

‘எனக்கு இந்தச் சாப்பாடு பிடிக்காது, அந்தக் கறி பிடிக்காது’ என அடம்பிடிக்கும் சுட்டிகளுக்கான ஆப், This is my Food-Nutrition for kids. உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள், அந்தச் சத்துகள் உடலுக்கு ஏன் முக்கியமாகத் தேவைப்படுகிறது என்கிற தகவல்களை அனிமேஷன் மற்றும் படங்களுடன் விளக்குகிறது. http://bit.ly/top10nutfood

சுட்டியான குட்டிக் குழந்தை, உங்கள் வீட்டில் இருக்கிறதா? அதற்கு நீங்கள் விளையாட்டாகக் கணிதம் கற்றுக்கொடுக்க உதவும் ஆப், Gozoa Play&Learn Math. ‘கோஸோ’ என்ற வேற்றுக் கிரக உயிரினத்தின் துணையுடன் பெரிய எண்கள், சிறிய எண்களை வரிசைப்படி அடுக்குதல், எளிய கூட்டல் கணிதங்கள், பொருட்களின் உருவங்கள் மற்றும் நிறத்தைவைத்து அடுக்குதல் போன்றவற்றை விளையாட்டு மூலமே கற்றுக்கொள்ள உதவுகிறது. http://bit.ly/top10gozoa

சைக்கிளை கண்டுபிடித்தவர் யார், என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியும் என்றாலும் சரி, தெரியாது என்றாலும் சரி, The Great Inventors எல்லோருக்கும் ஏற்றதுதான். பொருட்களைக் கண்டுபிடித்தவர்கள் யார் என்றும், அவர்களைப் பற்றிய தகவல்களையும் சின்னச்சின்ன படங்கள் மூலம் மனதில் பதியவைக்கிறது. http://bit.ly/top10grtinventors

மேக்ஸ் என்ற சுட்டிக்கு ஒரு மாயாஜாலக் கண்ணாடி கிடைக்கிறது. அந்தக் கண்ணாடி வழியே பார்த்தால், சுற்றியுள்ள உலகமே வண்ணமயமாக மாறிவிடுகிறது. தெருவில் எப்போதும் ஒரே மாதிரி நின்றிருக்கும் சிலைக்கு உயிர் வந்து, நடனமாடுகிறது. உயரமான கட்டடங்கள், ராக்கெட்டுகளாகப் பறக்கின்றன. இந்த அற்புதங்களை நீங்களும் ரசிக்க The Wunderglasses- ஐ டவுண்லோடு செய்யுங்கள். http://bit.ly/top10wunder

40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வரும் ‘ஸ்டார் வார்ஸ்’ கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது LEGO Star Wars: The New Yoda Chronicles. யோதா போன்ற நல்லவர்களுடனோ, சித் மற்றும் வேடர் போன்ற தீய சக்திகளுடனோ இணைந்து போர் புரியலாம். ஒட்டுமொத்த ஸ்டார் வார்ஸ் குறித்த சின்னச் சின்ன விளையாட்டுகள் அடங்கிய ஆப் இது. bit.ly/top10sw

ரயிலைப் பிடிக்காதவர்கள் உண்டா? அந்த ரயிலை ஓட்டிப் பார்க்க அழைக்கிறது, Toca Train. பார்க்க பொம்மைபோல இருந்தாலும், ஒரு ரயிலை ஓட்டத் தேவைப்படும் அனைத்தும் இருக்கிறது. கியரை மாற்றி வேகமாக ஓட்டுவது, ரயில் நிலையங்களில் நிறுத்துவது, பல கோணங்களில் பார்ப்பது என அனிமேஷன் அட்டகாசம் உள்ள ஆப். http://bit.ly/top10train

அம்மாவைத் தேடும் குட்டி விலங்குகளை அவற்றின் அம்மாவிடம் சேர்ப்பது, வழியை மறந்துவிட்ட விலங்குகளுக்கு வீட்டுக்கு வழிகாட்டுவது, விலங்குகளுக்குப் பிடித்த உணவைக் கொடுப்பது என அழகான உதவிகளைச் செய்ய உதவும் ஆப், Wood Puzzle Maze HD. விலங்குகளின் சப்தம், ஒரு மரப்பலகை போல இருக்கும் அனிமேஷன் என கலக்கலான ஆப் இத.http://bit.ly/top10WP
- இனியன்