Published:Updated:

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!
பிரீமியம் ஸ்டோரி
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

Published:Updated:
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!
பிரீமியம் ஸ்டோரி
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ம்ப்யூட்டர்ல உட்கார்ந்தாலே ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்னு ஆயிரெத்தெட்டு சமூக வலைதளங்களைத் திறந்து மேய்ஞ்சுட்டுதான் அடுத்த வேலையை ஆரம்பிப்போம். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட்டுக்காக நாலு, அஞ்சு ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பிச்சு அட்ராசிட்டி பண்ற ஆட்களும் அதிகம். உண்மையாகவே ‘நல்லவர்’ மெடல் வாங்கி, 5000 நண்பர்களுக்கும் அதிகமான நண்பர்களைப் பெற்று, இன்னொரு கணக்கைத் தொடங்குறவங்களும் அதிகம். ஆனால்... ஒரு மொபைல் போனில் ஒரு ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தைதான் பார்க்க முடியும். இன்னொரு பக்கத்துக்குப் போகணும்னா, முதல் கணக்கில் இருந்து வெளியேறி, அடுத்த அக்கவுன்ட்டுக்கு வரணும். இந்த டென்ஷனுக்கு நோ சொல்லத்தான், ஆண்ட்ராய்டு வழங்குகிறது ‘பேரலல் ஸ்பேஸ்’ என்ற அப்ளிகேஷன்!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

‘மல்டி அக்கவுன்ட்ஸ் இன் சிங்கிள் செல்போன்!’ என்பதுதான் இந்தச் செயலியின் அடிப்படை. அதாவது, இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் ஒரே நேரத்தில் இரு வேறு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் கணக்குகளை மேற்பார்வையிட முடியும். ‘பேரலல் ஸ்பேஸ்’ அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, திறக்க வேண்டும். உதாரணமாக, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என நமக்கு எந்தெந்த அப்ளிகேஷன்களுக்கு இரண்டு கணக்குகள் தேவையோ, அதைத் திரையில் விரியும் ‘விண்வெளி’ செட்டப்பில் இழுத்துப் போட வேண்டியதுதான். மொபைலில் ஏற்கெனவே இருக்கும் ஃபேஸ்புக் அப்ளிகேஷனுக்குப் பக்கத்திலேயே ‘ஃபேஸ்புக்+’ என்ற மற்றொரு அப்ளிகேஷன் உருவாகிவிடும். வாட்ஸ் அப்பிற்கும் அதேதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

இப்போது இரண்டு ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் பக்கங்களையும் அடுத்தடுத்து ஓப்பன் செய்து, விதவிதமாக சாட்டிங் செய்யலாம், ஸ்டேட்டஸ் தட்டலாம், நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு  குதூகலக் கும்மியடிக்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்குச் செல்வதற்கான ‘லாக்-இன்/ லாக்-அவுட்’ தொந்தரவுகள் இருக்காது!

அப்புறமென்ன? ஃபேக் ஐடி வைத்திருப்பவர்களுக்குக் கொண்டாட்டம்தான்!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.lbe.parallel.intl

- கூகுள்குமார்