Published:Updated:

வீட்டு பட்ஜெட்... இனி `செயலி'யில்!

வீட்டு பட்ஜெட்...  இனி `செயலி'யில்!
பிரீமியம் ஸ்டோரி
வீட்டு பட்ஜெட்... இனி `செயலி'யில்!

வீட்டு பட்ஜெட்... இனி `செயலி'யில்!

வீட்டு பட்ஜெட்... இனி `செயலி'யில்!

வீட்டு பட்ஜெட்... இனி `செயலி'யில்!

Published:Updated:
வீட்டு பட்ஜெட்...  இனி `செயலி'யில்!
பிரீமியம் ஸ்டோரி
வீட்டு பட்ஜெட்... இனி `செயலி'யில்!

ஸ்மார்ட் `ஆப்’ஸ்

கேம்ஸில் இருந்து ஹெல்த் வரை எல்லா தேவைகளுக்கும் `ஆப்'கள் வந்துவிட்டன. அந்த வரிசையில் கவனிக்க வைக்கின்றன, பெண்களுக்கான பட்ஜெட் `ஆப்'கள் (`செயலி'கள்). தேதி 1-ல் இருந்து 30 வரை தோழிகள் இனி வரவு - செலவு கணக்கு எழுத சிரமப்பட வேண்டாம். அதைச் சுலபமாக்கும் `ஸ்மார்ட் ஆப்'கள் இரண்டின் அறிமுகம் இங்கே...

வீட்டு பட்ஜெட்...  இனி `செயலி'யில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெய்லி எக்ஸ்பென்சஸ் 3 (Daily Expenses 3)

வீட்டு பட்ஜெட்...  இனி `செயலி'யில்!

இந்தச் செயலி, குழந்தைகள்கூட மாதக்கணக்கு வழக்குகளை குறித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சுலபமான வழிமுறை களைக் கொண்டதாக உள்ளது. இதன் இடைமுகப்பில் (Interface), (+) குறியீடு போட்டு ‘ஆட் இன்கம்’ (add income) , (-) குறியீடு போட்டு ‘ஆட் எக்ஸ்பன்ஸ்’ (add expense) என இரண்டே ஆப்ஷன்கள்தான். அதுவும் பச்சை, சிவப்பு நிறங்களில். கையில் காசு வந்தால்... பச்சை ப்ளஸ். செலவு செய்தால்... சிவப்பு மைனஸ். எந்த விஷயத்துக்குச் செலவு செய்கிறோம் என்பதைக் குறித்துவைக்கப் பல பிரிவுகள் உள்ளன. சாப்பாடு, பெட்ரோல், ஹோட்டல், மளிகை சாமான், பர்சனல், மற்றவை என கேட்டகிரி போட்டுத் தந்துள்ளார்கள். எனவே, இனி கையில் பேனா, டைரியுடன் பரபரக்க வேண்டிய அவசியமில்லை. நாம் ஸ்கூலில் படித்த, மிகவும் ஈஸியான பார் கிராஃப், பை-சார்ட் போட்டுக் காட்டுகிறார்கள் நம் வரவு, செலவுகளை! இரண்டு நிமிடங்களில் நூடுல்ஸ் ரெடி ஆகிறதோ இல்லையோ, உங்களுடைய மாதக்கணக்கு ரெடி ஆகிவிடும்!

மணி வியூ (Money View)

வீட்டு பட்ஜெட்...  இனி `செயலி'யில்!

இந்தச் செயலி கொஞ்சம் மெச்சூர்டு டைப். நாம் நம் இ-மெயில் ஐ.டி கொடுத்தவுடன், நம் பேங்க் பேலன்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அக்கவுன்ட் நம்பரோடு காட்டிவிடும். கட்ட வேண்டிய பில்,கணக்கெழுதி வைக்கும் பில், கணக்கில் சேர்க்க மறந்துவிட்ட பில் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கேட்டகிரிஉள்ளது. வரவு-செலவு கணக்கு மட்டுமல் லாமல், நம் குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு இதிலேயே ட்ரான்ஸாக்‌ஷனும் வைத்துக் கொள்ளலாம். நம் வரவு பற்றி நாம் ரெஃபர் செய்துகொள்ள, நம் பெயர், மொபைல் எண் கேட்டு, பின்னர் ஒரு ஒன்-டைம் பாஸ்வேர்டு அனுப்பி, ‘சிவாஜி’ ரஜினியின் லேப்டாப்போல டாப் செக்யூரிட்டி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தச் செயலியை நாம் ஓப்பன் செய்தவுடனேயே, அது ஒரு அலர்ட் ஆறுமுகமாகி, ‘இன்னும் இவ்ளோதான்ப்பா உன் அக்கவுன்ட்ல இருக்கு’ என்று எச்சரித்துக் காட்டுகிறது. இதன் மூலம், மாதக் கடைசி அல்லது டைட் சிச்சுவேஷன் வந்தால், கொஞ்சம் உஷாராக அடக்கி வாசிக்கலாம்.

இனி நிதி நிர்வாகம், `ஆப்'பில் அடக்கம்!

மு.சித்தார்த்