கோலம் போன்ற வட்டமான ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டி, அதன் மூலம் நமது கோபம், எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியும். அதை, விலங்குகள் கோட்டு ஓவியங்களாகக் கொடுத்திருக்கும் சிறப்பான ஆப், ColorTherapy. உங்கள் டென்ஷனைக் குறைத்து கூலாக்கும். http://bit.ly/ChuttiColorTherapy.

எந்த நாடு எங்கே இருக்கு? நாடுகளின் தலைநகரங்கள், தேசியக்கொடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் ஆப், Geography Learning Quiz Game. கேட்கும் கேள்விகளுக்கு இதில் வரும் மேப்பில் விடையைக் குறிக்க, விளையாட்டாக புவியியல் கற்கலாம். http://bit.ly/ChuttiGeography

இசையின் அடிப்படைகளான ரிதம், தாளம், ராகம் போன்றவற்றை சுட்டிகள் சுலபமாகப் புரிந்துகொள்ளவும், புரிந்துகொண்டதைக் கொண்டு, தாங்களே இசையை உருவாக்கவும் Easy Music for kids ஆப் உதவுகிறது. http://bit.ly/ChuttiEasyMusic

நேரத்துக்கு சாப்பிட, தேவையான அளவு தண்ணீர் குடிக்க, உடற்பயிற்சிசெய்து ஆரோக்கியமாக இருக்க உதவும் ஆப், Healthy Habits. ஒரு நாளில் செய்யவேண்டிய ஆரோக்கிய விஷயங்களைக் குறித்து வைத்துவிட்டால், உங்களுக்கு ஞாபகப்படுத்தும். குறித்த நேரத்தில் அவற்றை ஒழுங்காகச் செய்தால், விருதுகள் கொடுத்து உற்சாகப்படுத்தும். http://bit.ly/ChuttiHealthyHabits

உங்கள் ஓவியத் திறமையை டிஜிட்டலிலும் சிறப்பாக வளர்த்துக்கொள்ள உதவும் ஆப், MediBang Paint. பென்சில், பேனா, பிரஷ், வாட்டர் கலர் என ஒரு ஓவியருக்குத் தேவையான அத்தனையும் இந்த ஆப்பில் இருக்கின்றன. உங்கள் போனில் வரைந்ததை அப்படியே கணினிக்கு மாற்றிக்கொள்ளலாம். http://bit.ly/ChuttiMedibang

நம் பூமியில் உள்ள இயற்கை வளங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஆப், Save Your Planet Kids. சின்னச்சின்ன விளையாட்டுகள், ஓவியங்கள் மூலமாக சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. http://bit.ly/ChuttiSavePlanet.

சின்னச்சின்ன துண்டுகளாகக் கலைத்துப் போட்ட ஒரு படத்தைச் சரியான வகையில் அடுக்கி, முழுப்படமாக்குவது போன்ற பல ஆப்கள் இருந்தாலும், இந்த Puzzles for Adults & Kids ஆப் வித்தியாசமானது. நீங்களே எடுக்கும் ஒரு படத்தை, புதிராக மாற்றித் தந்துவிடும். http://bit.ly/ChuttiPuzzlesKids.

காட்டில் அலைந்துதிரியும் நரிக்கு, நீங்கள் CREATIVE ADVENTURES: JUNGLE ஆப்பில் உதவ வேண்டும். இதில் உள்ள படங்களில் ஒன்றை பிரின்ட் அவுட் எடுத்து, வண்ணம் தீட்டி, ஆப்பின் கேமராவில் படம் பிடித்தால், ஓவியம் பறக்க ஆரம்பிக்கும். லியோவையும் கூட்டிக்கொண்டு, காட்டைப் பறந்தே சுற்றி வரலாம்.  http://bit.ly/ChuttiCreativeAdventures

நீங்கள் யாரென்று உங்களுக்கு மறந்துவிட்டது, ஏதோ ஒரு வீட்டில் இருக்கிறீர்கள். அது எந்த இடம் எனத் தெரியவில்லை. அந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டும். அங்கே இருக்கும் சில பொருட்களை வைத்து எப்படிப் பயன்படுத்தலாம் என யோசித்துப் புதிர்களைத் தீர்த்தால், தப்பிக்கலாம். இதுதான் Spotlight:Room Escape ஆப். http://bit.ly/ChuttiRoomEscape

‘மிஸ்டர் பீன்’ சேட்டைகள் பிடிக்காதவங்க உண்டா? பீன் கையில் வைத்திருக்கும் டெடி பொம்மையை, பல முறை அலங்கோலமாக்கிவிடுவார். Mr Bean-Flying Teddy ஆப்பில் அந்தப் பொம்மையை பீன் கையிலிருந்து பத்திரமாகக் காப்பாற்றவேண்டிய ஜாலி பொறுப்பு உங்களுக்கு. http://bit.ly/ChuttiMrBean