
சம்மர் லீவில் நண்பர்களை அசத்த உதவும், Science Experiments With Water ஆப். இருட்டில் தண்ணீரை மின்னச் செய்வது, தண்ணீரை வேறு வேறு நிறங்களின் கலவையாக உருவாக்குவது எனத் தண்ணீரைக் கொண்டு செய்யக்கூடிய அனிமேஷன் சோதனைகளைச் செய்யலாம். http://bit.ly/ChuttiExperimentsWater


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மினியன்கள் செய்யும் அட்டகாசம் பார்த்திருப்பீர்கள். பல ஆயிரக்கணக்கான மினியன்ஸ் செல்லும் கப்பல் விபத்துக்கு உள்ளாகிறது. எந்த வசதியும் இல்லாத ஒரு தீவில் சிக்கிக்கொள்கிறார்கள். தங்களுக்கு ஏற்றவாறு தீவை உருவாக்க, மினியன்ஸுக்கு நீங்கள் உதவும் ஆப் Minions Paradise. நீங்க ரெடியா? http://bit.ly/ChuttiMinions

ஷெர்லக் ஹோம்ஸ் போல நீங்களும் துப்பறியும் புலியா? அப்படி என்றால், உங்களுக்கு ஏற்ற ஆப்தான் Science Detective. ஒரு செய்தியைப் படித்து நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்து, உங்களின் துப்பறியும் திறனைக் கூர் தீட்டிக்கொள்ளலாம். http://bit.ly/ChuttiScienceDetective

பூமி உருண்டை எனப் புத்தகத்தில் படித்ததை, பார்க்க உதவும் ஆப்தான் Simulator Earth Satellite VR. செயற்கைக்கோள் மூலமாக நீங்கள் பூமியில் இருந்து பூமியைச் சுற்றிப் பார்க்கலாம். வேறொரு கோணத்திலிருந்து பூமியைப் பார்க்க ஆசைப்பட்டால், மற்றொரு செயற்கைக் கோளுக்குத் தாவிச் சென்றும் பார்க்கலாம். http://bit.ly/ChuttiSimulatorEarth

மழை பெய்தால் ஸ்கூல் லீவு என்றுதான் தெரியும். ஆனால், மழைக்காலம், வெயில் காலம், குளிர் காலம் உள்ளிட்ட காலநிலைகளைக் கதை வழியாகத் தெரிந்துகொள்ளவே, Book of Seasons For Kids ஆப். அந்தக் கதைகளை பாண்டா கரடி சொல்லும்போது டபுள் சந்தோஷம். http://bit.ly/ChuttiBookSeasons

‘அம்மா கொடுத்த சாக்லேட்டை உங்கள் அண்ணன் சரிபாதி கொடுக்காமல், கொஞ்சமாகக் கொடுக்கிறாரா?’ உங்களுக்கு உதவ உருவாக்கப்பட்டதுதான் Slice It ஆப்.பல்வேறு வடிவங்களில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் சரிபாதியாகப் பிரிக்க வேண்டும் இதுதான் உங்கள் வேலை. உங்கள் வீட்டில் அடிக்கடி, நடக்கும் சண்டையை இனிமேல் நிறுத்திவிடலாம். http://bit.ly/ChuttiSliceIt

‘இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் இருக்கு, எங்களுக்குத் தேவையான வீடியோக்களைத் தேட முடியவில்லை’ என நீங்கள் வருந்தவே வேண்டாம். Kids Videos ஆப் யூ ட்யூப், டெய்லி மோசன், விமோ போன்ற வீடியோ தளங்களில் இருந்து சுட்டிகளுக்கு ஏற்ற வீடியோக்களை ஒரே இடத்தில் காட்டும். http://bit.ly/ChuttiKidsVidoes

‘மூளைக்கு வேலை கொடுக்க நீங்க ரெடியா?’ இனிமேல் உங்களின் மூளைப் பயிற்சிக்கூடம், Memorado ஆப்தான். 15 புத்திசாலித்தனமான விளையாட்டுகள் மூலமாக, 450-க்கும் மேற்பட்ட லெவல்களில் விளையாடும்போது, உங்களின் மூளை க்யூட்டாக வேலை செய்யும். எந்தெந்தத் திறன்களை வளர்த்துக்கொள்வது போன்ற தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். http://bit.ly/ChuttiMemorado

‘நானெல்லாம் ஓவியம் வரைய ஆரம்பித்தால்...’ என்று காலரைத் தூக்கி கெத்துகாட்டும் சுட்டிகளுக்கு, பெஸ்ட் ஃப்ரெண்டாகிவிடும் Kids Paint - Coloring Pages ஆப். இதில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவற்றின் 200-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. உங்கள் கற்பனைச் சிறகைப் பறக்கச்செய்து, பச்சைக் கிளியை ஆரஞ்சுக் கிளியாக்கலாம். எவ்வளவு காலம்தான் அது பச்சையாகவே இருப்பது? http://bit.ly/ChuttiKidsPaint

சயின்ஸ் சப்ஜெக்ட் தொடர்பாக ஒரு நியூஸ் படித்தேன். ஆனால், அந்த வெப்சைட் பெயர் மறந்துவிட்டது எனச் சொல்பவரா நீங்கள்? நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை Feedly ஆப்பில் இணைத்துவிட்டால், அந்த இணையதளங்களில் புதிதாக என்ன வந்தாலும் உங்கள் விரல் நுனிக்குக் கொண்டுவந்துவிடும் Feedly. http://bit.ly/ChuttiFeedly