காலை எழுந்தவுடன் படிப்பு - இது அந்தக் காலம். காலை எழுந்தவுடன் செல்ஃபி - இது இந்தக் காலம். அந்த செல்ஃபியில் சில பல `டச் அப்'கள் செய்து, நம்மை இன்னும் அழகாக்க கைகொடுக்கும் அசத்தல் செல்ஃபி ஆப்ஸ்களின் அறிமுகம் இங்கே...
இன்ஸ்டா பியூட்டி (instabeauty)

இது ஒரு மேக்கப் செயலி. செல்ஃபி போட்டோவை இதில் அப்லோடு செய்துவிட்டால் போதும்... முகத்தை பளிச் ஆக்கி, காஜல் பூசி, லிப்ஸ்டிக் போட்டு, முகத்தில் இருக்கும் பிளாக் மார்க்ஸை எடுத்து என, ஒரு பியூட்டிஷியனின் வேலைகளை எல்லாம் செய்து, உங்களை ஒரு ஹீரோயின் லுக்குக்கு கொண்டுவந்துவிடும்... 10 நொடிகளில்.
(டி.பி பார்க்கிறவங்க ‘இது யாரு?’னு கேட்டா, கம்பெனி பொறுப்பில்ல!)
பி6 12 ( b6 12)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ஒரு வித்தியாசமான போட்டோ ஆப். 3 - 6 விநாடிகளுக்கு இது வீடியோ எடுக்கும். அந்த வீடியோவில் எந்த க்ளிப்பிங் சிறப்பாக இருக்கிறது என்று செயலியே தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். மேலும், ஷட்டர் க்ளிக் ஆப்ஷன் கொடுத்தால், சட்சட்டென போட்டோ கொலாஜ் செய்து கொடுத்துவிடும்.
(ஸ்மார்ட் செல்லம்!)
ஏர்பிரஷ் (airbrush)

25,000 ரூபாய் `டிஎஸ்எல்ஆர்' கேமரா செய்யக்கூடிய வேலையை, இந்தச் செயலி செய்துவிடும். உங்கள் செல்ஃபியை ஃபோக்கஸ், டெப்த் என்று ஒரு ஹை டெக் பிக்சராக மாற்றிக்கொடுக்கும் ஆப் இது. மேக்கப், பிம்பிள் நீக்குதல் உள்ளிட்ட பல சிறப்பம்சம்களும் உண்டு. மேலும், உங்கள் பற்களையும் போட்டோவுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து அழகாக்கும்.
(அதுக்காக சாம்பிளுக்கு ‘சின்ன கவுண்டர்’ மனோரமா போட்டோவைப் போட்டுப் பார்த்து குறும்பு பண்ணக் கூடாது... ஆமா!)
கேண்டி கேமரா (candy camera)

இதில் பல அம்சங்கள் உள்ளன. செல்ஃபி போட்டோவில் விரும்பிய பேக்கிரவுண்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். செல்ஃபி ஸ்டார், ஹார்டின் என்று விதவிதமாக ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொள்ளலாம். இதில் இருக்கும் சைலன்ட் கேமரா ஆப்ஷன், செல்ஃபி எடுக்கும்போது கேமராவில் இருந்து வரும் சத்தத்தை மியூட் செய்யும்.
(க்ளாஸ் ரூமிலும்கூட சீக்ரெட் செல்ஃபி எடுத்துக்கலாம் என்ற டிப்ஸை நாங்க கொடுக்கவே இல்லை... நோட் இட்!)
ரெட்ரிகா (retrica)

இது இளசுகளிடம் பிரபலமான ஆப். இதில் நூற்றுக்கணக் கான லைட்டிங் செட்டிங்ஸ் உள்ளன. தொப்பி, கூலர்ஸ் என க்ளிப் ஆர்ட் படங்களால் உங்கள் போனை ஒரு மினி போட்டோ பூத் ஆக்கிவிடும் ரெட்ரிகா. மேலும் இந்த செயலியில் இருந்து நேரடியாக `வாட்ஸ்அப்'பிலோ, ஃபேஸ்புக்கிலோ, பிற சமூக வலைதளங்களிலோ உங்கள் போட்டோவை அப்லோடு செய்துகொள்ளலாம்!
(அதான் அதான் அதேதான்!)
தா.நந்திதா