Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

கற்றுக்கொள்ள, மூன்று ஆண்ட்ராய்டு செயலிகள் (Apps)...

விகடன் சாய்ஸ்

மூளையை பட்டைதீட்ட...

வெவ்வேறுவிதமான உடற்பயிற்சிகள் செய்து, உடலை உறுதியாக்க விரும்புகிறோம். அதுபோலவே `நம்முடைய மூளைக்கும் நிறையப் பயிற்சிகள் கொடுத்து, அதை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள முடியும்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படிப்பட்ட பயிற்சிகளைக் கொடுக்கக்கூடியது `Elevate Brain Training' என்கிற செயலி. இந்தப் பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் நம்முடைய கவனத்தை, பேச்சாற்றலை, நினைவாற்றலை, படைப்பாற்றலை, கணக்குபோடும் திறனை, நம் மூளையின் செயல் வேகத்தை அதிகரிக்க முடியும். எல்லாமே விளையாட்டுபோல இருப்பதால், கடினமான வேலைகளுக்கு நடுவில் சிறிய பிரேக் எடுக்க நினைப்பவர்களுக்கு இந்தச் செயலி உபயோகமானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் சாய்ஸ்

நட்சத்திரங்களின் பெயர் பட்டியல்

உங்களுக்கு நட்சத்திரம் பார்க்கத் தெரியுமா? உங்களால் எந்தெந்த நட்சத்திரக் கூட்டம் என்னென்ன குழுக்கள் என்றும், அதற்குரிய பெயர்களையும் சொல்ல முடியுமா? இதுபோன்ற விஷயங்களையும், விண்வெளியில் நடைபெறும் வியக்கத்தக்க நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு `STAR WALK 2’ செயலி நிச்சயம் கைகொடுக்கும். விண்மீன் குழுக்கள், துணைக்கோள்கள், வால்நட்சத்திரங்கள், நுண்கோள்கள், நம்மைச் சுற்றியுள்ள கிரகங்கள்... என அறிவியல் புத்தகத்தில் படித்ததை எல்லாம் வானத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நம்முடைய மொபைலை வானத்தை நோக்கிக் காட்டினால், அதுவாகவே பார்த்து நமக்கு அது என்ன நட்சத்திரக் கூட்டம் என்பதைச் சொல்லித்தரும். நம் குழந்தைகளின் விண்வெளி விஞ்ஞானத்துக்கு, இது நிச்சயம் உதவும்.

விகடன் சாய்ஸ்

லிங்கோவைக் கேளுங்கள்!

வெவ்வேறு மொழிகளின் அடிப்படைகளை மட்டும் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு `Duolingo'  ஒரு சூப்பர் செயலி. உலகம் முழுக்க ஒரு கோடிப் பேருக்குமேல் பயன்படுத்துகிற புகழ்பெற்ற செயலி. இதில் ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலியன், பிரெஞ்சு என ஐரோப்பிய மொழிகளையும், ஆசிய மொழிகளின் அடிப்படைகளையும் கற்றுக்கொள்ளலாம். ஒரு மொழியை எப்படிப் பேசுவது, எழுதுவது, உச்சரிப்பது, வாசிப்பது எனப் பல விஷயங்களையும் நமக்கு நாமே கற்கலாம். இதில் படங்களின் வழியே மொழியின் அடிப்படையான சொற்களையும், அதன் உச்சரிப்பையும், எளிய இலக்கணத்தையும் கற்றுக்கொடுக்கிறார்கள். அதையும் அழகான சின்னச்சின்ன விளையாட்டுகளின் வழியே கற்றுக்கொள்வது முற்றிலும் இலவசம்.

விகடன் சாய்ஸ்

உங்களுக்கு டை கட்ட தெரியுமா?

நம்மில் பலருக்கு, நேர்காணலுக்குச் செல்லும்போதுதான் `நமக்கு டை கட்டத் தெரியாது!’ என்பதே நினைவுக்கு வரும். அப்படியே தெரிந்தாலும் ஒரே மாதிரிதான் டை கட்ட வரும். ஆனால் வெளிநாடுகளில், நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப, அணிந்திருக்கிற உடைகளுக்கு ஏற்ப, செல்லும் இடங்களுக்கு ஏற்ப என, டை கட்டுவதில் பல வகை உண்டு. டை கட்டக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு, இந்த சார்ட் உதவும். பின்ட்ரெஸ்ட் சமூக வலைதளத்தில் வெளியான இந்த சார்ட்டில், 18 விதமான முறைகளை விளக்கியுள்ளனர். ஓய்வு நேரங்களில் இதைப் பார்த்து டை கட்டிப் பழகலாம். நாளைக்கே ஆபீஸர் ஆகிவிட்டால் அவசியம் தேவைப்படுமே!

விகடன் சாய்ஸ்

18 விதமான முறைகளைக் காண: https://in.pinterest.com/pin/443041682073882671/ -