Published:Updated:

"இப்படியும் ஒரு போனா?" - ஸ்மார்ட்போன் தொல்லையின்றி வாழ உதவும் புதிய கேட்ஜெட்! #LightPhone2

"இப்படியும் ஒரு போனா?" - ஸ்மார்ட்போன் தொல்லையின்றி வாழ உதவும் புதிய கேட்ஜெட்! #LightPhone2
"இப்படியும் ஒரு போனா?" - ஸ்மார்ட்போன் தொல்லையின்றி வாழ உதவும் புதிய கேட்ஜெட்! #LightPhone2

"இப்படியும் ஒரு போனா?" - ஸ்மார்ட்போன் தொல்லையின்றி வாழ உதவும் புதிய கேட்ஜெட்! #LightPhone2

தொடர்ந்து ஒரு செயலை செய்து கொண்டே வந்தால் அது உங்களுக்குப் பழக்கம் என்றாகிறது. அந்தப் பழக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அதுவே பின்னர் உங்களை அடிமையாக்கிக் கொண்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

"உங்களால்  கட்டுப்படுத்த முடியாத யாவும், உங்களைக் கட்டுப்படுத்த தொடங்கிவிடும் ". 

இது மதுபானம் அருந்துதல், புகைபிடித்தல் போன்றவற்றுக்கு  மட்டுமல்ல,  உங்கள் கைகளில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கும் சேர்த்துத்தான். சில நபர்களுக்குக் காலை கண்விழித்து கை தொடும்  முதல் பொருள் தொலைபேசியாகத்தான் இருக்க வேண்டும். இரவு தூங்கும் பொழுது தலையணை தலையின் அடியில் இருக்கிறதோ இல்லையோ, செல்போன் இருக்கும். தேவைக்கதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் எந்த விஷயமும் விஷம்தானே? அளவுக்கு மிஞ்சினால் அலைபேசியும் நஞ்சு. 

அதுவும், தற்போதெல்லாம், இந்த ஸ்மார்ட்போன் அடிக்சன் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்குப் பதிலடியாக, ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் அடிமையாகி வருவதைத் தடுக்க ஒரு நிறுவனம் லைட் போன் (Light Phone) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. வசதிகளை எல்லாம் பார்த்தால், ஒரு சாதாரண போன் போல இருக்கும். ஆனால், இது உங்களின் ஸ்மார்ட்போனிற்கு ஓர் இரண்டாம் ஆப்ஷன் போலத்தான். இதற்கு என்று நீங்கள் தனியாக சிம் கார்டு வாங்கத் தேவையில்லை. உங்கள் பழைய நம்பரையே இது பயன்படுத்தி கொள்ளும். அதாவது உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைப்பிலேயே (Sync) இருக்கும். சொல்லப்போனால் இது உங்கள் ஸ்மார்ட்போனின் minimalistic வெர்ஷன் போலத்தான். இதில் எந்த ஆப் வசதிகளும் கிடையாது. அந்த நொடி என்ன செய்கிறோம் என்று புகைப்படம் எடுக்கும் கேமராகூட கிடையாது. சுருக்கமாகச் சொல்லப்போனால், ஒரு நவீன தொலைப்பேசியில்  நாம் எதிர்பார்க்கும் எந்தச் சிறப்பம்சங்களும் அந்தத் தொலைபேசியில் இல்லை. 

Photo Courtesy: indiegogo.com

இப்போது அதே நிறுவனம், அதன் தொடர்ச்சியாக லைட் போன் 2 (Light phone 2) என்ற கேட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இது எப்படி நம் ஸ்மார்ட்போனிற்கு மாற்று என்று பார்த்தால், இந்தப் போனின் முக்கியச் சிறப்பம்ங்கள் வரிசைகட்டி நின்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. முதல் போன் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதைப் பரிணாம வளர்ச்சி அடையச் செய்து இந்த லைட் போன் 2-வை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொலைபேசியின் மூலம் உங்களால் பிறரை தொடர்பு கொண்டு பேச முடியும்; குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்; உங்களை விழிப்படைய வைக்கும் அலாரங்களையும் பயன்படுத்த முடியும். 

லைட் போன் -2 வின் அம்சங்கள்

இ-மை (Electronic Ink) கொண்ட ஒரு கறுப்பு மற்றும் வெள்ளை நிற மேற்திரை; சிறிய எழுத்துருக்கள் கொண்ட வெள்ளை பின்னணி; அளவில் ஒரு கடன் அட்டையை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஆனால், இது ஒரு 4G - LTE தொலைப்பேசி.  WiFi, GPS வசதிகளுடன், 1 GB ரேம், 8 GB மெமரி என்று கொஞ்சம் தாராளமான வசதிகளைக் கொண்டுள்ளது. 5 நாட்கள் ஸ்டேன்ட்பை டைம், ஒரு சில மணி நேரங்கள் டாக்டைம் என்ற ரீதியில் 500mAh பேட்டரியுடன் வருகிறது. லைட் போன் 1-லிருந்து மாறுபட்டு, இதற்கு என்று தனி சிம் கார்டு போடும் வசதி கொடுத்திருக்கிறார்கள். உங்கள் ஸ்மார்ட்போனை முற்றிலும் தலைமுழுகிவிட்டு இதை லைட் போனை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். 

Photo Courtesy: indiegogo.com

இந்தத் தொலைபேசியை குறித்து அந்நிறுவனம் கூறுகையில், "இது மனிதர்களுக்கான தொலைபேசி" என்றுள்ளனர். மேலும் "இது உங்களை ஆட்சி செய்யும் தொலைபேசியாக இல்லாமல் உங்களை மதிக்கும் தொலைபேசியாக இருக்கும். சட்டைப் பைக்குள்  உலகம் என்று ஒரே இடத்தில் அமைந்திருக்காமல், உங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடலாம்.  சுமுகமான முறையில் வாழ்க்கையை நடத்த ஒளியில் வழிநடத்தும் தொலைபேசிதான் லைட் போன் - 2" என்கின்றனர், இந்த நிறுவனத்தினர். 

இந்த லைட்போன் 2-வின் விலை ($400 ) இந்திய மதிப்பில் 26,000 ரூபாய்!       

அத்தியாவசத்திற்காக உருவாக்கப்பட்ட கைப்பேசி, இன்று ஆடம்பரமாகி அடிமையாக்கத் தொடங்கிய பிறகு, மீண்டும் எளிமையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். மாற்றாக வந்த ஒன்றிற்கே மாற்று கண்டுபிடித்து, நாம் ஒன்றும் டெக்னாலஜிக்கு அடிமை இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு