Published:Updated:

‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!

‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!
பிரீமியம் ஸ்டோரி
‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!

தொழில்நுட்ப பூதம்

‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!

தொழில்நுட்ப பூதம்

Published:Updated:
‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!
பிரீமியம் ஸ்டோரி
‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!
‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!

‘‘சார், உங்களை நான் எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கே... நீங்க என் ஃபேஸ்புக் ஃப்ரெண்டா?’’

‘‘இல்ல சார்... நான் ரொம்ப நாளா உங்க பக்கத்து வீட்லதான் இருக்கேன்!’’

- இதற்கு முன்பாக இந்த நகைச்சுவையை நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம். அது சிரிக்க அல்ல, சிந்திக்கவே என்பதை உணர்த்தும் வகையில் நம் அருகில் உள்ளவர்களைக்கூட அந்நியப்படுத்திக்கொண்டிருக்கிறது இந்த டெக்னாலஜி யுகம்.

அடிக்கடி செல்போன் மணி காதுக்குள் ஒலிக்கிறதா? வாட்ஸ்அப் நோட்டிஃபி கேஷன் வருவதைப்போல உணர்ந்து உங்கள் செல் போனை அடிக்கடி சோதித்துப்பார்க்கிறீர்களா? காலையில் செல்போனைப் பார்த்துக்கொண்டே எழுந்து, இரவு செல்போனைப் பார்த்துக் கொண்டே தூங்குகிறீர்களா? அப்படி என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது.

பேசவும், குறுஞ்செய்தி அனுப்பவும் பயன்பட்டு வந்த செல்போன்கள், தற்போது இணையத்தில் இணைந்து காதல் முதல் மார்க்கெட்டில் கத்திரிக்காய் வாங்குவது வரை பல வேலைகளை செய்துகொண்டிருக்கின்றன. தகவல் அனுப்ப எஸ்.எம்.எஸ், தகவலுடன் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்ப வாட்ஸ்அப், சொந்த அனுபவங்கள் மற்றும் சமூகப்பார்வையை பதிவுசெய்ய ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் என கையடக்க செல்போனில் அடங்கியும் விரிந்தும் கிடக்கிறது இவ்வுலகம்.

காதலிக்காக கால்கடுக்கக் காத்திருந்து, அவள் பின்னால் தொடர்ந்து சென்று கடிதம் கொடுக்கும் காலம் இப்போது காணாமலே போனது. ஃபேஸ்புக்கில் ஃபாலோ செய்கிறார்கள். `வாட்ஸ்அப்'பில் காதல் செய்கிறார்கள். இதயங்களைத் தொடாமல் வெறும் விழிகளையும் காதுகளையும் மட்டுமே தொட்டுவிட்டு உடைந்துபோகின்றன பல காதல்கள்.

‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதல் கவிதைகள்கூட சொந்தமாக எழுத நேரமில்லை பலருக்கும். டெம்ப்ளேட்டாக இருக்கும் வசனங்களே பல நேரங்களில் நமக்காகப் பேசுகின்றன. வாசமற்ற வாட்ஸ்அப் மலர்க்கொத்துகளில் வாழ்த்தையும், `RIP' என்னும் மூன்றெழுத்து வார்த்தையில் துக்கத்தையும் பகிரப் பழகிவிட்டோம். ஒரே வீட்டில் இருப்பவர்கள்கூட ஆளுக்கொரு மொபைலில் மூழ்கி `வாட்ஸ்அப்'பில் பேசிக்கொள்கிறார்கள். ஒரு குடும்பம் இணைந்திருப்பதை செல்போன்கள் எடுக்கும் செல்ஃபிக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. நம்மைச் சுற்றியிருப்பவர்களை அந்நியப்படுத்திவிட்டு நம் நேரத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது டெக்னாலஜி வளர்ச்சி.

முன்பு திருமணங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டால், அவர்கள் பேசிக்கொள்ள தீராத பல விஷயங்கள் இருக்கும். ஆனால், இப்போது திருமணங்களுக்குச் செல்லும் பொழுதுகளிலும், செல் திரையிலேயே தலைகவிழ்ந்து கிடக்கிறார்கள், அல்லது அலை பேசியை காதோடு அணைத்தபடி ஏதோ உலகின் மிக முக்கியமான விஷயம்போல பேசியபடியே இருக்கிறார்கள். ‘வீட்டுக்குப் போயிட்டு போன் பண்றேங்க’ என விடைபெறுகிறார்கள். செவிக்கும் வாய்க்கும் இடையே செல்போன் பாலமாக தொங்கிக் கிடக்கிறார்கள் நம் உறவுகள்.

எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்வது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும், எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாத நிலையும் இப்போது சகஜமாகிவிட்டது. உறவுகளை, நண்பர்களை நம் கையடக்கத்தில் கவனிக்க வைத்திருந்தாலும் தொடர் கண்காணிப்பு என்கிற பெயரில் நமக்கான தனிமையையும் சுதந்திரத்தையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!

டெக்னாலஜியின் வளர்ச்சி எந்த அளவுக்குப் பயன் தருகிறதோ அதே அளவுக்கு மனதளவிலும் உடல்ரீதியாகவும் பல பாதிப்புகளைச் செய்கிறது. இந்தப் பிரச்னை குறித்து பேராசிரியரும் மனநல மருத்துவருமான பி.வி.அசோகனிடம் பேசினோம்.

‘‘சென்னையில் மழை வந்த சமயம் 4 நாட்கள் மின்சாரம் இல்லாமல், செல்போன்கள் இல்லாமல் இருந்தார்கள் மக்கள். அந்த சமயத்தில்தான் பலரும் புத்தகங்கள் வாசித்தும், குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டுப் பேசியும், குழந்தைகளுக்கு கதைசொல்லியும் வாழ்ந்திருக்கிறார்கள். சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போலதான் நாம் காசு கொடுத்து டெக்னாலஜியில் விழுவதும். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையை நிர்ணயித்துக்கொண்டால் பிரச்னை இல்லை.

இன்று இணையத்தில் வரும் பெரும்பாலான தகவல்கள் உண்மை என்ன என்பது தெரியாமல் பதற்றத்துக்காகவே பரப்பப் படுகின்றன. வீடு எரிந்தால் தீயணைப்புநிலையத்தை அழைக்கலாம். சின்னதாய் விறகு எரிந்தால் அதற்கும் பதற்றம் என்பது போலதான் சமயங்களில் இணையத்தின் சூழல் ஒருவித பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. வாசிப்பும் விளையாட்டும் குறைந்து உலக உருண்டை செல் போன் என்னும் செவ்வகப் பெட்டிக்குள் ஒளிந்து கொண் டிருக்கிறது. நம் பக்கத்தில் இருப்பவரைக்கூட செல்போன் திரையில் தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் நினைத்த மாத்திரத்தில் நமக்கான அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ வராமல் போனால் தேவையற்ற பயமும், பதற்றமும் உருவாகிறது. இப்படி அந்த டெக்னாலஜிக்கு அடிமை ஆகும் நோய்க்கு `TEXTAPHRENIA' என்று பெயர்...’’ என்றவர், அதில் இருந்து மீள்வதற்கான தீர்வுகளை முன்வைத்தார்.

‘செல்’லிலே விழித்து... ‘செல்’லிலே தூங்கி!

* ‘‘அநாவசியமாக செல்போன் மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

* தேவையான தகவல்களை மட்டும் தேடுவதைப் போலவே, தேவையற்ற தகவல்களை பகிராமல் இருப்பதும் நல்லது.

* முகநூலில் இருக்கும் 2 ஆயிரம் நண்பர்களைவிட அருகில் இருக்கும் 2 நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

* இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை இயன்றவரை உருவாக்குங்கள். டெக்னாலஜிக்கு ஒதுக்கும் நேரத்தை உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்கு ஒதுக்க முயன்றால் இந்த நோயில் இருந்து மீள முடியும்.

* ஃபேஸ்புக் லைக்குகளைவிட நம் குடும்பத்தினர் நம்மை லைக் செய்வது அவசியம். அதனால் குடும்பத்துடன் கூடிப்பேசும் தருணங்களைத் தவறவிடாதீர்கள்.

* படிப்படியாக `செல்போன்' பயன் பாட்டைக் குறைத்து. வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினால்... நோயில் இருந்து மீளலாம்!’’

`செல்'லில் இருந்து விடுதலை பெறுவோம், உலகத்தை உள்ளங்கை, கட்டைவிரல், கீபேடு, ஸ்மைலிகள் தாண்டியும் பார்ப்போம்!

 பொன்.விமலா