Published:Updated:

ஹலோ ஆப்ஸ் நண்பா!

ஹலோ ஆப்ஸ் நண்பா!
பிரீமியம் ஸ்டோரி
ஹலோ ஆப்ஸ் நண்பா!

ஹலோ ஆப்ஸ் நண்பா!

ஹலோ ஆப்ஸ் நண்பா!

ஹலோ ஆப்ஸ் நண்பா!

Published:Updated:
ஹலோ ஆப்ஸ் நண்பா!
பிரீமியம் ஸ்டோரி
ஹலோ ஆப்ஸ் நண்பா!
ஹலோ ஆப்ஸ் நண்பா!

காலை எழுந்ததும், பல் துலக்க ஞாபகப்படுத்துவது முதல் பாடங்களின் சந்தேகங்கள் வரை, அனைத்துக்கும் ஆப்ஸ் பயன்படுத்துவது தினசரி அங்கமாகிவிட்டது. நல்ல நண்பர்களைக் கண்டறிவது எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் நல்ல 'ஆப்ஸ்'களைக்  கண்டறிவதும். அதற்கு என்ன செய்யலாம்?

போடுங்க ஆன்டி வைரஸ்!

ஒரிஜினல் எது, போலி எது என்று புரியாதவண்ணம் ஏராளமான போலி ஆப்ஸ்கள், வைரஸோடு பின்னிப் பிணைந்தே உலவுவதால், நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போலி ஆப்ஸ், நம் அனுமதியின்றி ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை ‘அபேஸ்’ பண்ணிவிடும்.

அது மட்டுமா? வைரஸ் பாதித்த ஆப், உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அனுப்புவது போல, உங்கள் நண்பர்களுக்குத் தவறான செய்திகளையும் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கும். நீங்கள் அனுப்பவே இல்லை என ப்ராமிஸ் செய்யும் நிலையை உண்டாக்கும். எனவே, ஆப்ஸ் டவுண்லோடு செய்யும் முன் வைரஸ் இல்லாத, பாதுகாப்பான ஆப்ஸ் தானா எனக் கண்டறிவது முக்கியம்.

ஹலோ ஆப்ஸ் நண்பா!

எனவே, புது ஸ்மார்ட்போன் வாங்கியதும் முதலில் செய்யவேண்டியது, ஆன்டி வைரஸ் இன்ஸ்டால் செய்வதுதான். அப்புறம்தான் கேம்ஸ், வீடியோ எல்லாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் நம்பகமான ‘ஆன்டி வைரஸ்’ ஆப்ஸை இன்ஸ்டால் செய்யுங்கள். இவை, பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கும். உதாரணத்துக்கு சில மொபைல் ஆன்டி வைரஸ் ஆப்ஸ்: AVG, Clean Master, McAfee, Kaspersky, Norton Security and Antivirus, K7 Mobile Security.

டவுண்லோடு செய்யும் முன்...

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே ஆப்ஸை டவுண்லோடு செய்யுங்கள். ஏனெனில், அதில் உள்ளவைதான் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பானதாக இருக்கும். இன்டர்நெட்டில் உள்ள வெப்சைட்டுகள் மூலமோ, பிற ஸ்டோர்கள் மூலமோ எந்த டவுண்லோடும் செய்ய வேண்டாம். ஒருவேளை நம்மையும் அறியாமல் டவுண்லோடு செய்துவிட்டால்? அதைத் தடுக்க, நம் ஸ்மார்ட்போனில் Settings > Security > Unknown Resources சென்று ஆஃப் செய்யுங்கள்.

ஹலோ ஆப்ஸ் நண்பா!

ஒவ்வொரு அப்ளிகேஷனிலும், அப்ளிகேஷன் ஐகான், அப்ளிகேஷன் பெயர், அப்ளிகேஷனைத்   தயாரித்த நிறுவனத்தின் பெயர், எத்தனை நபர்களால் டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது, ஸ்டார் ரேட்டிங், தயாரித்த நிறுவனம் பற்றிய குறிப்பு, அப்ளிகேஷனின் மாதிரி ஸ்கிரீன் ஷாட்கள், விமர்சனங்கள் இருக்கும். இவற்றைப் பொறுமையாகப் படித்துப் பார்த்து, டவுண்லோடு செய்யுங்கள். நல்ல விமர்சனம் அதிகம் பெற்ற அப்ளிகேஷனாக இருந்தால், தைரியமாக இன்ஸ்டால் செய்யலாம்.

ஆப்ஸின் கீழேயே Free என இருந்தால், அவற்றை முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்தலாம். சில ஆப்ஸில், சில வசதிகளை மட்டும் இலவசமாகவும், மற்றவற்றைக் கட்டணம் செலுத்தியும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதையும் கவனியுங்கள்.

அனுமதி கொடுக்கும் முன்...

அப்ளிகேஷன்களை டவுண்லோடு செய்யும்போது, கீழ்க்காணும் விவரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாமா? என உங்களிடம் கேட்பார்கள்.

நம் இருப்பிட விவரத்தை வெளிப்படுத்தலாமா?

நம் போன் தொடர்பில் உள்ளவர்களின் எண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாமா?

ஹலோ ஆப்ஸ் நண்பா!

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உள்ள நண்பர்களின் தொடர்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாமா?  

உங்களை போட்டோ, வீடியோ எடுக்கலாமா?

இவை அனைத்துக்கும் நீங்கள் அனுமதி கொடுத்துவிட்டால், உங்கள் பாதுகாப்பு என்னவாகும்? உங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அனைவரும் பயன்படுத்தலாம் என்றாகிவிடும்.  எனவே, ஜாக்கிரதை சுட்டீஸ்.

ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்திருக்கும் ஆப்ஸ்களை அவ்வப்பொழுது அப்டேட் செய்துகொள்ள வலியுறுத்தும். அப்டேட் செய்யும்போதும், நம்மைப் பற்றிய தகவல்களில் எதை எல்லாம் பயன்படுத்தலாம் என்ற கேள்விகளை அடுக்குவார்கள்.

எனவே, கவனமாக டவுண்லோடு செய்து, ஆப்ஸ் நண்பர்களோடு  அசத்துங்கள்.

- காம்கேர் கே.புவனேஸ்வரி, படம்: வீ.சதீஷ்குமார்