Published:Updated:

கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

ள்ளிக்கூடம் ஆரம்பிச்சு ரெண்டு மாசம் நெருங்குது. டெஸ்ட், ரிவிஷன் என பிஸி ஆகிட்டீங்களா? இதோ, உங்களுக்காகவே படிப்புக்கு உதவும் சில கூலான ஸ்கூல் ஆப்ஸ்...  

கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

‘ஸ்கூல் திறந்ததுல இருந்து எக்கச்சக்கமான ஹோம்வொர்க். இதையெல்லாம் எப்போ முடிக்கப் போறோமோ’னு கவலையா இருக்கீங்களா? வீட்டுக்கு வந்ததும் Homework Planner ஆப்ல, எந்தப் பாடத்துல அசைன்மென்ட் இருக்கு, எந்தத் தேதிக்குள்ள முடிக்கணும்னு குறிச்சுவெச்சுட்டா போதும். உங்களை அதுக்கேத்த மாதிரி ஞாபகப்படுத்தித் தயார்படுத்தும். நீங்களும் நேரத்துல எல்லாத்தையும் முடிச்சிடலாம். http://bit.ly/ChuttiHomework

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

‘டெஸ்ட், ரிவிஷன் எல்லாம் லைன் கட்டிட்டு வந்து நிற்குதே’னு உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொல்றாங்களா? ‘அதுக்கெல்லாம் நான்  அசர மாட்டேன்’னு உங்க காலரைத் தூக்கிவிட்டு கெத்து காட்டலாம் என்கிறது, School Assistant என்கிற ஆப். இந்த ஆப்பில், தேர்வுத் தேதிகளைக்  குறித்துவிட்டால் போதும். அதற்கேற்றபடி தயாராவதற்கு இந்த ஆப் உங்களுக்கு அடிக்கடி  நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். http://bit.ly/ChuttiSchoolAssistant

கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

புத்தகப் பை, நோட்டுகள், ஜியோமெட்ரிபாக்ஸ், லன்ச் பாக்ஸ், யூனிஃபார்ம், காலணிகள் எனப் புதிதாக வாங்கி இருப்பீங்க. இன்னும் ஏதாவது மிஸ் ஆகுதா? அடுத்து ஏதாவது வாங்கணுமா? இந்த Backpack School Checklist ஆப் டவுண்லோடு பண்ணுங்க.  என்னென்ன பொருட்களை வாங்கி இருக்கீங்க, எதையெல்லாம் வாங்கணும்னு செக் பண்ணிக்க இந்த ஆப் உதவும்.  http://bit.ly/ChuttiChecklist

கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

இதுவும் உங்களுக்கு ஸ்கூல் அலாரம் போல உதவும் ஆப். ஹோம்வொர்க், அசைன்மென்ட், எக்ஸாம் டைம் என குறிச்சுவெச்சுட்டா போதும், My Study Life ஆப், ‘பிரதர், எக்ஸாம் பக்கத்துல வந்தாச்சு. படிக்க ஆரம்பி’னு உங்களைச் செல்லமா ஞாபகப்படுத்தும். நீங்க இதுவரைக்கும் எக்ஸாமில் எடுத்த மதிப்பெண்களையும் பதிவுசெய்யலாம். எப்படி எல்லாம் உங்க மதிப்பெண் கூடி இருக்கு அல்லது குறைஞ்சு இருக்கு என்பதைப் பார்த்துக்கலாம். http://bit.ly/ChuttiStudyLife

கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

மே மாசம் முழுக்க ஜாலியா  விளையாடிட்டு, ஸ்கூல் மூடுக்கு வர்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க? இன்னமும் லீவ் மூடு எட்டிப் பார்க்குதா? Back to School Theme ஆப்பைப் பயன்படுத்துங்க. உங்க ஸ்மார்ட்போனில் வால்பேப்பர், ஐகான் என எல்லாத்தையும் ஸ்கூலுக்குப் போகும் மூடுக்கு மாற்றி அசரவைக்கும்.   http://bit.ly/ChuttiSchoolTheme

கூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்!

புது கிளாஸ் சவால்களில் ஒண்ணு, டைம் டேபிள். ஒரு மாசம் ஓடிட்டாலும், டைம்டேபிள்  தெளிவா ஞாபகம் இருக்காது. புத்தகங்களை மாத்தி மாத்தி எடுத்துட்டுப் போய் குழப்பம் ஆகும். அதைத் தவிர்க்கத்தான் School Timetable ஆப். டைம்டேபிளை நீங்க போட்டுவைக்கிறது மட்டும் இல்லாம, மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டும் இருக்கு. அதையும் விளையாடி உங்க ஞாபகசக்தியை வளர்த்துக்கலாம்.  http://bit.ly/ChuttiTimetable

- இனியன்