இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில், நம் சின்னச் சின்னத் தேவைகளையும் பூர்த்திசெய்ய மொபைல் `ஆப்’கள் வந்துவிட்டன. எனில், ஆயிரம்காலத்துப் பயிரான திருமணத்துக்கு ஆப்ஸ் இல்லாமலா..? லிஸ்ட் இதோ...

வெடிங் பிளானர்

நிச்சயம் ஆன நாளிலிருந்து பெற்றோர்களுக்குத் திருமண வேலைகள் குறித்த டென்ஷன் அதிகரித்துக்கொண்டே போகும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான், ‘வெடிங் பிளானர்’ ஆப். இன்று யாரை எல்லாம் போனில் அழைக்க வேண்டும், யாரை எல்லாம் நேரில் அழைக்க வேண்டும், சாப்பாட்டுக்கு அட்வான்ஸ் கொடுப்பது, ஸ்டேஜ் டெகரேஷன் செலக்ட் செய்வது என அந்தந்த நாளுக்கு உரிய வேலைகளை எல்லாம் முன்கூட்டியே இந்த `ஆப்’பில் பதிவு செய்துவிட்டால், அந்த வேலைகளை எல்லாம் அன்று முடித்துவிட்டோமா என்று நினைவுபடுத்தி அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கும். ஹைலைட்... திருமணத்துக்கான மொத்த பட்ஜெட்டையும், செலவு விவரங்களையும் கொடுத்துவிட்டால், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கிறது இந்த பிளானர்.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.wepala.weddingplan&hl=en

வெடிங் கவுன்ட்டவுன்

தன் வருங்கால வாழ்க்கைத் துணை வரை கரம்பிடிக்கப்போகும் நேரத்துக்காகக் காத்திருப்பவர்களின் மொபைலில் நிச்சயம் இருக்க வேண்டிய ஆப்... ‘வெடிங் கவுன்ட்டவுன்’. முகூர்த்த தேதி, நேரத்தை இதில் என்டர் செய்துவிட்டால், ஒவ்வொரு நிமிடமும், இன்னும் எத்தனை மாதங்கள், நாட்கள், நிமிடங்கள், நொடிகள் இருக்கின்றன கணவராக/மனைவியாக பதவி உயர்வு பெறப்போகும் அந்த முகூர்த்தத் தருணத்துக்கு என்று, மொபைலை எடுக்கும்போது எல்லாம் காட்டிக்கொண்டே இருக்கும்.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.cg.android.weddingcountdown&hl=en

கப்பிள்

அமெரிக்காவில் இருக்கும் வருங்கால கணவருடன் மொபைலில் கொஞ்சும் நம்ம ஊர் பெண்கள் மத்தியில் வைரலாக இருக்கிறது, ‘கப்பிள்’ ஆப். மற்ற `ஆப்’கள் போல அல்லாமல், டார்லிங் உடன் மட்டும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் சாட் செய்யலாம். ஆம்... இந்த `ஆப்’பில் பார்ட்னருடன் மட்டும்தான் சாட் செய்யலாம், படங்கள் பரிமாறிக்கொள்ளலாம். பாஸ்வேர்ட் இருந்தால் மட்டும் நுழையும்படி உள்ள இந்த`ஆப்’பில், தம்பதிகள் ஒரே சமயம் மொபைல் ஸ்க்ரீனை கையால் தொடும்போது வைப்ரேஷன் ஏற்படும்.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.tenthbit.juliet&hl=en

வெட் பிக்ஸ்

சினிமாவுக்குச் சென்றாலே அன்லிமிட்டட் செல்ஃபிக்கள் எடுத்துக் குவிக்கும் இளசுகள், நிச்சயதார்த்தம், மெஹந்தி, முகூர்த்தம் என்று கல்யாணச் சடங்குகளின்போது சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு மொபைலிலும் குறைந்தது 500 செல்ஃபிகள் இருக்கும். ஆனால், இவற்றை ஒவ்வொன்றாக ஃப்ரெண்ட்ஸ் சர்கிளில் ஷேர் செய்வது, பொறுமையைச் சோதிக்கும் விஷயம். இதற்குத்தான், ‘வெட் பிக்ஸ்’ ஆப்! இதை டவுன்லோடு செய்தபின், எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் தனி ஆல்பம் ஒன்றில் சேவ் ஆகும். பின்னர் ‘இன்வைட் ஃப்ரெண்ட்ஸ்’ ஆப்ஷனை பயன்படுத்தி, விரும்பும் நண்பர்களை அழைத்தால், அவர்களும் நம் மொபைலின் அந்த ஆல்பத்தில் உள்ள போட்டோக்களை பார்த்துக்கொள்ளலாம். இதேபோல நம் நண்பர்களின் மொபைலில் உள்ள போட்டோக்களையும் நாம் பார்த்துக்கொள்ளலாம்.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.dejami.WedPics&hl=en

வெடிங் ஆல்பம் மேக்கர்

என்னதான் ஸ்டுடியோவிலிருந்து நம் கல்யாண ஆல்பம் தயாராகி வந்தாலும், நம் ரசனைக்கு ஏற்ப ஒவ்வொரு போட்டோவாகத் தேர்ந்தெடுத்து, அதுக்கு ஃப்ரேம் செலக்ட் செய்து, ஒன்றன் பின் ஒன்றாகக் கோப்பது தனி சந்தோஷம்தானே? அதற்குத்தான், ‘வெடிங் ஆல்பம் மேக்கர்’ ஆப். இனி உங்கள் வெடிங் ஆல்பம், உங்கள் சாய்ஸ்.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.effects.photoalbum.wedding&hl=en

காட் இட்?! உங்கள் ஃபியான்ஸ்/ஃபியான்ஸிக்கும் சஜஸ்ட் செய்யலாம் தானே!

- பி.நிர்மல்