பணத்தை நிர்வகிக்கும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

மொபைல்கள் அற்ற ஒரு உலகத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பெரிதும் அவற்றைப் பயன்படுத்தி னாலும், பணப் பரிவர்த்தனைகளுக்கு மொபைலில் இருக்கும் ஆப்களைத்தான் பயன்படுத்துகிறோம். சேமிப்பு விஷயங்கள் சார்ந்தும், வங்கிக் கணக்குகளுக்காகவும் நாம் பயன்படுத்த வேண்டிய சில அப்ளிகேஷன்கள் இதோ...

ப்ராஸ்பர் டெய்லி (Prosper Daily)

டெபிட் கார்டுகளை விடவும், கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்தும் காலமிது. இந்த ஆப்பின் மூலம், நம்மிடம் இருக்கும் பல்வேறு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளின் கணக்குகளைப் பார்க்க முடியும். அதே போல், வங்கி நம்மிடம் ஏதோவொரு காரணத்துக்காக, பணத்தை எடுத்தாலும், இதில் அலெர்ட் வந்துவிடும். ஆப்பின் வழியாக சம்பந்தப்பட்ட வங்கிகளை தொடர்பு கொள்ளவும் முடியும். தவறுதலாக யாரேனும், நம் கார்டிலிருந்து பணம் எடுத்திருந்தால், எங்கு அந்த கார்டு கடைசியாக பயன்படுத்தப்பட்டது என்பது போன்ற செய்திகளையும் பெற முடியும்.

மின்ட் பில்ஸ் (Mint Bills)

வங்கிக் கணக்குகள், லோன் விவரங்கள், ரிட்டையர்மென்ட் ஃபண்டிங் போன்றவை பற்றி இதில் பதிவு செய்து கொள்ளலாம். நாம் வைத்திருக்கும் அக்கவுன்ட்டுகளின் பரிவர்த்தனைகளை, தானாகவே ஒரு பதிவாக தொகுத்து தருகிறது இந்த ஆப். நாம் செலவு செய்யும் தொகைக்கு ஏற்றவாறு , நமக்கான பட்ஜெட்டையும் தந்து அறிவுறுத்துகிறது.நீங்கள் செலவு செய்யும் விவரங்கள், பட்ஜெட் விவரங்கள், சேமிப்பு போன்றவற்றை ஒரே இடத்தில் காட்டுகிறது மின்ட் பில்ஸ்.

பர்சனல் கேப்பிட்டல் ஃபைனான்ஸ் (Personal Capital Finance)

முதலீடுகளை சரியான பாதையில் அமைத்துத் தரக்கூடிய சிறந்த ஐந்து அப்ளிகேஷன்களில் பர்சனல் கேப்பிட்டலும் ஒன்று என சி.என்.என். கருத்து தெரிவித்திருக்கிறது. சார்ட், கிராஃப் போன்றவற்றோடு நமது பட்ஜெட்டை விளக்குகிறது இந்த ஆப். வங்கிகளில் இருப்பது போன்ற சிறப்பான பாதுகாப்பு வசதிகளை இந்த அப்ளிகேஷன் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

லெவல் மணி (Level Money)

நாம் தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைக் கணக்கிட்டு, நம் செலவுகளைக் குறைத்து பயனுள்ளதாக மாற்ற உதவுகிறது இந்த ஆப். நாம் செலவு செய்யும் தொகை, கட்டும் மாதாந்திர பில், சேமிப்பு சதவிகிதம் போன்றவற்றை வைத்து, இந்த ஆப் தாமாகவே, மாதத்தின் முதல் நாளில் ஒரு பட்ஜெட்டை நமக்கு வழங்குகிறது. அந்தக் குறிப்பிட்ட தொகையை வைத்துதான் , நாம் செலவு செய்ய வேண்டும். தினசரி, வாரத் தொகை, மாதத் தொகை என பல்வேறு கட்டங்களில், இது நமக்கு ஆலோசனைகள் தருகிறது.