Published:Updated:

ஈஸியா கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

ஈஸியா  கத்துக்கலாம் இங்கிலீஷ்..!
பிரீமியம் ஸ்டோரி
ஈஸியா கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

ஈஸியா கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

ஈஸியா கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

ஈஸியா கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

Published:Updated:
ஈஸியா  கத்துக்கலாம் இங்கிலீஷ்..!
பிரீமியம் ஸ்டோரி
ஈஸியா கத்துக்கலாம் இங்கிலீஷ்..!
ஈஸியா  கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

வெளியிடங்களில் பலருடன் பேசுவது தொடங்கி, சமூக வலைதளங்களில் இயங்குவது வரை, அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். அதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ், கிராமர் வகுப்புகளுக்கு எல்லாம் செல்லாமல்...  நேரம் கிடைக்கும்போது போனிலேயே தமிழ் வழியாக ஆங்கிலம் கற்கலாம் என்றால் வசதிதானே?! இதோ, அதற்கான `ஆப்’கள் சில...

Spoken English 360 Tamil

ஈஸியா  கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

தொடக்க நிலை, அட்வான்ஸ்டு நிலை என இரண்டு நிலைகளில், இலக்கணத்துடன், தமிழ் வழியாக ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறது இந்த ஆப். இதில் சொற்கள் மற்றும் அலுவலகம், பயணம், ஷாப்பிங் என ஒவ்வொரு சூழ்நிலையிலும் பேசக்கூடிய வாக்கியங்கள் (situational conversation) பல இருக்கின்றன. இதன் மற்றொரு சிறப்பம்சம், கொடுக்கப்பட்டிருக்கும் சொற்கள் மற்றும் தொடர்களையும் இந்த `ஆப்’பே பேசிக்காட்டும். ஆகையால் உச்சரிப்பையும் தெளிவாகக் கற்க முடியும்.

Hello English

ஈஸியா  கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற வெவ்வேறு இந்திய மொழிகளின் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பிரபல ஆப் இது. இதைப் பதிவிறக்கம் செய்தவுடன் எந்த மொழியிலிருந்து ஆங்கிலம் கற்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் பெயரை பதிவுசெய்ய வேண்டும். தினமும் நீங்கள் எவ்வளவு கற்றுக்கொள்கிறீர்கள் மற்றும் உங்களது மொழியறிவு வளர்ச்சியை மதிப்பிட்டுக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆங்கிலத்தில் கேட்டல், படித்தல், பேசுதல், கவனித்தல் என நான்கு திறன்களையும் வித்தியாசமான கிராஃபிக்ஸ் மற்றும் விளையாட்டுக்கள் மூலம் தமிழ் வழியில் கற்றுக்கொள்ளச் செய்கிறது இந்த ஆப்.

Learn English with EnglishLeap

ஈஸியா  கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

மற்றவர்களிடம் நம்மை அறிமுகம் செய்துகொள்வது தொடங்கி ஆங்கில வினைச்சொற்கள், மரபு சொற்கள் வரை படிப்படியாக ஆறு நிலைகளில் ஹையர் லெவல் ஆங்கிலத்தையே தமிழ் வழியில் கற்றுக்கொடுக்கும் ஆப் இது. இதைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் முன்னர் ஓர் அறிமுக டெஸ்ட்டின் மூலம் உங்கள் தற்போதைய ஆங்கில அறிவை சோதித்துக்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் அடிப்படையில் எந்த லெவலில் இருந்து தொடங்கலாம் என `ஆப்’பே பரிந்துரைக்கும். ஒவ்வொரு லெவலையும் படித்து டெஸ்ட்டை முடித்தால்தான், அடுத்த லெவல் ஓபன் ஆகும்.

Pronounciation  King UK English

ஈஸியா  கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

பிரிட்டிஷ் ஆக்சன்ட் (உச்சரிப்பு) உடன் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கும் ஆப் இது. உச்சரிப்பு கற்க விரும்பும் குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்தால், அதன் துல்லியமான பிரிட்டன் ஆங்கில உச்சரிப்போடு அதைச் சொல்லிக்காட்டும். மீண்டும் மீண்டும் கேட்டு பயிற்சி எடுக்கலாம். இந்த `ஆப்’பின் அளவும் மிகக் குறைவு என்பதால், மொபைலில் எப்போதும் வைத்துக்கொள்ளலாம்.

Tamil English Dictionary

ஈஸியா  கத்துக்கலாம் இங்கிலீஷ்..!

இது ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் மாடர்ன் ஆன்லைன் அகராதி. ஒரே ஒருமுறை இந்த `ஆப்’பை பதிவிறக்கம் செய்துகொண்டால், அதன் பிறகு இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனிலும் அகராதியைப் பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளது! இந்த `ஆப்’பில் `இன்பில்ட்’டாக (inbuilt) கொடுக்கப்பட்டுள்ள தமிழ் தட்டச்சு கொண்டு மொபைலில் தேவைப்படும் தமிழ் வார்த்தைகளை டைப்செய்து `enter’ 

செய்தால் போதும்... அதன் ஆங்கில இணைச் சொற்களும், அதற்கான தமிழ் விளக்கங்களும் கிடைக்கும். அதேபோல ஆங்கில வார்த்தை களுக்கும் தமிழ் விளக்கங்களைப் பெறலாம்.

இந்த `ஆப்’பின் சிறப்பம்சம், வீடியோக்கள் மூலமும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்.

கோ.இராகவிஜயா