Published:Updated:

கைகளில் சுழலுது பூமி!

கைகளில் சுழலுது பூமி!
பிரீமியம் ஸ்டோரி
News
கைகளில் சுழலுது பூமி!

-தொடரும் ஆப்ஸ் அசத்தல்

கைகளில் சுழலுது பூமி!

"எங்க அப்பா, வழக்கமா சுட்டி விகடன் வாங்கிட்டு வருவாங்க. அதுபோல இந்த இதழை வாங்கித் தந்ததும், அட்டையில் இருந்த யானையையும் 4D ஆப் பற்றியும் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே அந்த ஆப்ஸை டவுண்லோடு செய்து, அட்டைப் படத்தில் காண்பிச்சேன். தும்பிக்கையை உயர்த்திப் பிளிறிக்கிட்டே வந்த யானையைப் பார்த்ததும்
செம குஷி. பக்கத்துத் தெருவில் இருக்கிற என் ஃப்ரெண்டுகிட்டே ஓடிப்போய் காட்டினேன். அன்னிக்கு முழுக்க எல்லா விலங்குகளையும் 4D-ல  வரவெச்சு விளையாடினோம். விதவிதமா போட்டோ எடுத்துக்கிட்டோம்'' என உற்சாகமாகச் சொல்கிறார் திவிஷா.

சென்ற இதழ் சுட்டி விகடனில் வெளியான 4D ஆப், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுட்டி வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது அவர்களிடம்  இருந்து வந்த கடிதங்கள் மற்றும் மெயிலில் வந்த புகைப்படங்கள் மூலம் தெரிந்தது.

கைகளில் சுழலுது பூமி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘என் வகுப்புக்கு சுட்டி விகடனை எடுத்துட்டு போய், 4D ஆப் மூலம் விலங்குகளைக் காட்டினேன். மாணவர்கள் உற்சாகம் ஆகிட்டாங்க'' என்கிறார் தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் குணசேகரன்.

‘‘என் ஃப்ரெண்டு ஹீனா ஷெர்லினோடு விளையாடிட்டு இருந்தப்ப, ‘ஒரு சர்ப்ரைஸ் இங்கே வா'னு அம்மா கூப்பிட்டாங்க. சுட்டி விகடனில் இருந்த ஒட்டகச்சிவிங்கி, ஆமையை எல்லாம் போன் வழியா பார்க்கச் சொன்னாங்க. வாவ்! ஒட்டகச்சிவிங்கி தலையை நீட்டுது; ஆமை மிதந்து கைக்கு வருது. அடுத்த சுட்டி விகடனிலும் இந்த மாதிரி கொடுப்பீங்களா?'' எனக் கேட்டிருக்கிறார்  ஐந்தாம் வகுப்பு படிக்கும் தீக்‌ஷிதா.

கைகளில் சுழலுது பூமி!

இதோ, இந்த முறை Space 4D+ என்கிற ஆப் பற்றியும், அதில் உள்ள சில படங்களும்...

கைகளில் சுழலுது பூமி!

விண்வெளியையும், சூரியக் குடும்பத்தை அறிந்துகொள்ளவும் பார்த்து மகிழவும் Space 4D+ என்ற ஆப் உதவும். பூமி படத்தை இந்த அப்ளிகேஷனின் கேமரா வழியாகப் பார்த்தால், பூமி தனியாக மேலெழும்பிச் சுழலும். சூரியக் குடும்பம் படத்தில், (அட்டையில் இருக்கும்), சூரியனையும் அதைச் சுற்றி வரும் கோள்களையும் வரிசையாகப் பார்க்கலாம். அவை எப்படிச் சுழல்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

கைகளில் சுழலுது பூமி!

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் எது பெரியது எனத் தெரிந்துகொள்ளலாம். ஒரு கோளைப் பற்றிப் பார்க்கும்போது, அந்தக் கோளை உங்கள் விரல்களால் சுழலவிட்டு, மேல் பக்கம் எப்படி இருக்கும் அல்லது கீழ்ப்பக்கம் எப்படி இருக்கும் என்றும் பார்க்கலாம்.

கைகளில் சுழலுது பூமி!

கோள்களைப் பற்றி மட்டுமா? கருந்துளைகள், வால் நட்சத்திரம், எரிகல், நாம் அனுப்பிய விண்கலங்கள், விண்வெளி ஆய்வு நிலையங்கள், செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் போன்றவற்றின் செயல்பாட்டையும் அட்டகாசமான ஒலி ஒளி அமைப்போடு பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

கைகளில் சுழலுது பூமி!

உங்கள் கைகளில் பூமி சுழல வேண்டுமா? இந்த அப்ளிகேஷனுக்குரிய அட்டைகளை அச்செடுத்து, கையில் பிடித்துக்கொள்ளுங்கள். உங்கள் அண்ணனையோ, அக்காவையோ, அப்பாவையோ, அம்மாவையோ இந்த அப்ளிகேஷன் வழியாகப் படம் எடுக்கச் சொல்லுங்கள். உங்கள் கைகளில் பூமி சுழன்றுகொண்டு இருக்கும். சுட்டெரிக்கும் சூரியனை கையில் பிடிக்க ஆசையா? அதையும் செய்யலாம். பூமி மற்றும் சூரியன் உள்ள இரண்டு படங்களை அருகருகே வைத்துவிட்டால், சூரியக் குடும்பத்தில் இரண்டு பூமிகள் வந்துவிடும்.   சூரியக் குடும்பத்தையே உங்கள் கற்பனையைப் பயன்படுத்தி இடம் மாற்றி விளையாடலாம்.

Space 4D+ அப்ளிகேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுண்லோடு செய்யுங்கள். இங்குள்ள படங்களைப் பாருங்கள். ஆச்சர்யத்தில் நீங்களும் அண்டவெளியில் மிதப்பீர்கள்.

- வி.எஸ்.சரவணன், சுப.தமிழினியன்