உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

னைவி மட்டுமில்லை. ரூம்மேட் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். என்ன சொன்னாலும் தலையாட்ற ஒருத்தன், எதுக்கெடுத்தாலும் முரண்டுபிடிக்கிற ஒருத்தன், அட்டு சோம்பேறியா ஒருத்தன், எக்ஸ்ட்ரா ஸ்மார்ட்டா இன்னொருத்தன்... பேச்சுலர்ஸ் இருக்கிற வீட்டில் இதுதான் பெரும்பாலான நிலைமை. ‘அதுக்கு என்ன பாஸ் பண்றது? இவனுகளோடதான் வாழ்க்கையை ஓட்டணும்ங்கிறது நம்ம தலைவிதி’னு தலையில் கை வெச்சு உட்கார்ந்துடாதீங்க. உங்களுக்குப் பிடிச்ச, உங்க எதிர்பார்ப்புக்குத் தகுந்த மாதிரி நாலுபேர் சேர்ந்தா, அது ரூம் இல்லை. சொர்க்கம். இதோ, ‘ஃப்ளாட் சாட்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இப்பவே இன்ஸ்டால் பண்ணுங்க. அத்தனை லட்சணமும் பொருந்திப்போற பசங்களை மட்டும் ரூம்மேட்ஸா வெச்சுக்கோங்க!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

அப்ளிகேஷனைத் தரவிறக்கி, நமக்கான புரொஃபைல் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் ரூம்மேட் எப்படி இருக்க வேண்டும் என அப்ளிகேஷனில் பதிவு செய்தால் போதும். நீங்கள் எதிர்பார்க்கும் அதே தகுதிகளோடு இருக்கும் இன்னொரு நபர், உங்களைச் சாட்டிங்கில் தொடர்புகொள்வார். ‘சமைக்கத் தெரியுமா?’, ‘பாத்திரம் கழுவுவியா?’, ‘சரக்கு அடிக்கலைனாலும், கம்பெனி கொடுப்பியா?’ என உங்கள் இஷ்டத்திற்குக் கேள்விகளைத் தட்டலாம். ‘அட, நாம எதிர்பார்த்ததை அப்படியே கேட்கிறாரே?’னு சாட்டிங் பண்ணவருபவரும் ஃபீல் பண்ணா, ரூமுக்கு ஒரு அடிமை ரெடி! ‘தேய்க்காத பாத்திரத்தைப் பார்த்தாலே எனக்கு அலர்ஜி ஆயிடும்’, ‘சமையலை நீங்களே பார்த்துக்கோங்களேன் பாஸ்’, ‘ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் எனக்குத் தூக்கம் கண்ணைக் கட்டிடும்’ என உங்களோட அத்தனை கேள்விக்கும் ‘அது சரிப்பட்டு வராதே பாஸூ’ என இழுத்துக்கொண்டிருந்தால், நாம எஸ்கேப்! இப்படியாக, ஒவ்வொரு அடிமைகளாகத் தேடித் தேடி எடுத்தால், அட்டகாசமான ‘பேச்சுலர்ஸ்’ உங்களுக்குக் கிடைக்கலாம்! ரூம் மேட்ஸைத் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது சிரமங்கள் இருந்தால், அதற்கென ஒரு பிரத்யேக உதவியாளரையும் இலவச இணைப்பாக வழங்குகிறது இந்த அப்ளிகேஷன்.

இதுதவிர, வீடு தேடுவது, நமக்குப் பிடித்த வாடகை வீட்டை அப்ளிகேஷன் வழியாகவே டீல் பேசுவது போன்ற இன்னபிற வசதிகளும் இதில் அடக்கம். இப்போதைக்கு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் ‘ஃப்ளாட் சாட்’ அப்ளிகேஷன், கூடிய விரைவில் சென்னைக்கு அறிமுகம் ஆகவிருக்கிறதாம்! அப்புறமென்ன? நமக்கான ரூம் மேட்ஸைத் தேடுங்க பாஸ்!

டவுன்லோடு லின்க் : https://play.google.com/store/apps/details?id=in.flatchat

- கூகுள்குமார்