Published:Updated:

ஆடைகள்... `ஆப்'கள்... ஆனந்தம்!

ஆடைகள்...  `ஆப்'கள்... ஆனந்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடைகள்... `ஆப்'கள்... ஆனந்தம்!

அவள் 16

‘இந்த டிரெஸ் எனக்கு நல்லாயிருக்குமா?’ - பெண்களுக்குத் தினம் தினம் தோன்றும் தீராத கேள்வி இது. வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இதற்குப் பதிலளித்து ஓய்ந்துபோயிருப்பார்கள். அல்லது அவர்களின் பதில்கள் கேர்ள்ஸுக்கு திருப்தியில்லாமல் இருந்திருக்கும். இனி, அந்தப் பிரச்னை இல்லை. உங்களுக்குப் பொருத்தமான ஆடைகளைத் தேர்வுசெய்து கொடுக்கும் `ஆப்'கள் இப்போது நிறைய வந்துவிட்டன. அவற்றில் சில இங்கே...

ஆடைகள்...  `ஆப்'கள்... ஆனந்தம்!

`ஆப்'ஸை பயன்படுத்துவதற்கு முன்...

உங்கள் டாப்ஸ், பேன்ட், சுடிதார் உள்ளிட்ட உடைகள், காலணிகள் அனைத்தையும் தனித்தனியாக போட்டோ எடுத்து, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஃபோல்டரில் சேமிக்கவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆடைகள்...  `ஆப்'கள்... ஆனந்தம்!

My Dressing - Fashion closet

இந்த `ஆப்'பை ஓபன் செய்து, தனித்தனியாக ஃபோல்டர்களில் சேமிக்கப்பட்டுள்ள உடைகளில் பிடித்தவற்றை தேர்வுசெய்து, அதன் பின்புல நிறத்தை மாற்றி மேட்சிங் பார்க்கலாம். ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் என தோழிகளின் அக்கவுன்ட்களுக்குப் பகிர்ந்து கருத்துக் கேட்கும் வசதியும் உள்ளது.

ஆடைகள்...  `ஆப்'கள்... ஆனந்தம்!

Cluise - wardrobe assistant

ஒரு பக்கா ‘பெர்சனல் ஸ்டைலிஸ்ட் அசிஸ்டன்ட்’ என்று இந்த `ஆப்'பை சொல்லலாம். ஏனெனில், இது உங்கள் ஆடைகளை வகைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காலநிலைக்கு ஏற்ற உடை எது என்று தினமும் தெரிவிக்கும். மேலும் உலகளவிலான ட்ரெண்டிங் ஆடைகள் மற்றும் டிசைனர்களின் அப்டேட்களையும் அறியலாம். இதில் ஆடைகளின் செகண்ட் ஹேண்ட் சேல் ஆப்ஷனும் உள்ளது. அதாவது, நீங்கள் ஓரிருமுறை பயன்படுத்திய அல்லது பர்ச்சேஸ் செய்துவிட்டு சைஸ், கலர் போன்றவை பொருந்தாததால் மீண்டும் விற்க நினைக்கும் ஆடைகளை, இந்த `ஆப்'பின் வாடிக்கையாளர்களிடையே விற்கலாம், மற்றும் நீங்களும் அதுபோல் மற்றவர்களிடமிருந்து வாங்கலாம் (பேமென்ட் வசதி, இந்தியாவில் விரைவில் செயல்படுத்தப்படவிருக்கிறது)!

ஆடைகள்...  `ஆப்'கள்... ஆனந்தம்!

Chicisimo outfit ideas planner

‘நாளைக்குக் காலேஜ்ல/ஆபீஸ்ல முக்கியமான நிகழ்ச்சி. ட்ரெண்டியா டிரெஸ் தேர்ந்தெடுக்கணுமே..!’ என்று குழப்பமா? விடுங்கள் கவலையை! பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், இதைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து உங்களுக்குப் பல்வேறு ஃபேஷன் ஐடியாக்களைப் பெற்றுத் தரும். நீங்களும் உங்கள் ஆடைப் பரிந்துரைகள் மற்றும் ஆல்பம்களை மற்ற பெண்களுடன் ஷேர் செய்து கமென்ட்ஸ் பெறலாம்!

ஆடைகள்...  `ஆப்'கள்... ஆனந்தம்!

Smart Closet - My Style Book

ஆடைகளை மேட்ச் செய்து பார்ப்பது மட்டுமல்லாமல், கல்ச்சுரல்ஸ், செமினார், அவுட்டிங் என எந்தெந்த ஆடையை எப்போது அணியலாம் என்று இந்த `ஆப்'பில் உள்ள பிரத்யேகக் கேலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளலாம்; நண்பர்களுக்கும் பகிரலாம்.

ஆடைகள்...  `ஆப்'கள்... ஆனந்தம்!

Polyvore Style: Fashion to Buy

இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம்போல செயல்படுகிறது. அதாவது இதில் உங்கள் ஆடைகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுவதோடு, மார்க்கெட்டில் உள்ள ட்ரெண்டிங் ஆடைகளைப் பார்க்கலாம், வாங்கலாம் மற்றும் அதற்கான பிறரின் கமென்ட்ஸையும் பெறலாம். மேலும், இதில் உள்ள ஆயிரக்கணக்கான பிராண்டட் மற்றும் டிசைனர் ஆடைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து, பிறகு வாங்குவதற்கென அந்தப் புகைப்படங்களை சேமித்துவைக்கலாம். இதே ஆப் லிங்க்கில் உள்ள உங்கள் நண்பர்கள் யாராவது அதைப் பார்க்க நேர்ந்தால், அதை உங்களுக்குப் பரிசளிக்கும் வாய்ப்பும் உண்டுதானே?!

ங்கள் மொபைலில் உள்ள ப்ளே ஸ்டோரில் (Play Store) ஆப்களின் பெயரை டைப் செய்து தரவிறக்கம் (Dowunload) செய்து அவற்றைப் பயன்படுத்தலாம்.

- ஜெ.சாய்ராம்