Published:Updated:

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

Published:Updated:
கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!
கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

ர்ப்பகாலம்தான் ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். இந்தக் காலத்தில், குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், என்ன உணவு எடுக்கலாம், என்ன பயிற்சி செய்யலாம் என்று பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் வரும். அவர்களுக்கு உதவும் விதமாக பல ஸ்மார்ட்ஃபோன் ஆப்ஸ் உள்ளன. அவற்றி்ல் சிறந்த சில ஆப்ஸ்...

வெப் எம்டி ப்ரெக்னன்ஸி (Web MD Pregnancy)

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்ப்பிணிகளுக்கான சிறந்த ஆலோசனைகளை வழங்கும் இந்த ஆப், ஆப்பிளின் ஐ-ஓஎஸ் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடியது. இந்த ஆப்பில் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் தலைசிறந்த மருத்துவர்களிடமிருந்து பெறப்படுபவை. இந்த ஆப்பின் சிறப்பம்சம், பிரசவக் காலத்தில் பெண்களின் உடல்நிலை, குழந்தையின் வளர்ச்சி, உணவுகள், உடற்பயிற்சி என அனைத்தைப் பற்றியும் அறிவுரை வழங்கும் ‘பிரெக்னன்ஸி 101’ ஆப்ஷன். அப்பாக்களுக்கு அறிவுரை வழங்கும் ‘ஜஸ்ட் ஃபார் டேட்’ ஆப்ஷனும் இருக்கிறது.

நர்ச்சர் பை க்ளோ (Nurture by Glow)

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

மருத்துவ செக்அப் தேதிகளைச் சிறப்பாகக் கையாளக் கைகொடுக்கும் ஆப் இது. வாட்ஸ்அப் குரூப்போல, இதிலிருக்கும் ‘கம்யூனிட்டி’யின் மூலம் பிற கர்ப்பிணிகளோடு கலந்துரையாடவும், ஆலோசனைகள் பெறவும் இந்த செயலி உதவுகிறது.

பேபி பம்ப் பிரெக்னன்ஸி ப்ரோ (Baby Bump Pregnancy Pro)

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

‘ப்ரோ வெர்ஷன்’ என்று குறிப்பிட்டிருந்தாலும் முழு வெர்ஷனையும் இலவசமாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு மொபைல்களி்ல் இதைப் பயன்படுத்த முடியும். இந்த ஆப், பிரசவம் என்னும் பெருநிகழ்வுக்கு கர்ப்பிணிகளை மனதளவில் தயார்செய்யும் பொருட்டு, பல பிரசவ வீடியோக்களைத் தொகுத்து வழங்குகிறது.

ஸ்ப்ரௌட் (Sprout)

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

பெண்களுக்குக் கர்ப்பகாலத்தின் பேரின்பமே, குழந்தையின் அசைவுகளை உணர்வதுதான். குழந்தையின் வளர்ச்சி, எடை, அசைவுகள் என அனைத்தையும் கண்காணிக்கும் இந்த ஆப், கர்ப்பிணிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் பற்றியும் தெரியப்படுத்துகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில்  இயங்கும்.

மை பேபிஸ் பீட் (My Baby’s Beat)

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

கர்ப்பப்பையில் குழந்தை அசையும் அதிர்வலைகளை ஓசையாக உணர, டாக்டரின் ஸ்டெத் தேவையில்லை. மொபைல் ஸ்கேனராக மாற, அல்ட்ரா சவுண்ட் மூலம் இந்த ஆப்  மூலமாகவே உணர முடியும். அலைபேசியை வயிற்றுப் பகுதியில் வைத்தவுடன், இந்த ஆப் குழந்தையின் அசைவுகளைப் பதிவு செய்யும் (செயலியைப் பயன்படுத்தும்போது மொபைலை ஃப்ளைட் மோடில் வைக்க வேண்டும்). குறிப்பாக, கரு வளர்ச்சியின் 30 வாரங்களுக்குப் பிறகு, அந்த ஓசையைத் துல்லியமாகக் கேட்க முடியும். இந்த ஆப்பின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 1.99 அமெரிக்க டாலர்களுக்கும் ஐ-போன் வெர்ஷன் 4.99 டாலர்களுக்கும் கிடைக்கிறது.

பேபி நேம்ஸ் (Baby Names)

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

கர்ப்பம் உறுதிசெய்யப்பட்ட நாளில் இருந்தே கணவன், மனைவி இருவரும் பிறக்கப்போகும் தங்கள் குழந்தைக்கான பெயர் வேட்டையில் இறங்கிவிடுவார்கள். பெரியவர்களின் ஆலோசனை, நியூமராலஜி, கூகுள் தேடல் எனப் பல திசைகளிலும் தேடுவார்கள். அவர்களுக்கான மற்றுமொரு திசை, இந்த ஆப். ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளுக்குத் தனித்தனிப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கில் பெயர்கள், அர்த்தத்துடன் இதில் கிடைக்கும். கணவன், மனைவி இருவரது பெயரையும் டைப் செய்தால், அதற்குப் பொருத்தமான பெயர் பரிந்துரைக்கப்படுவது சிறப்பான வடிவமைப்பு.

ஹூ’ஸ் யுவர் டேடி (Who’s Your Daddy)

கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!

பெண்கள் கருவில் ஓர் உயிரைச் சுமந்தால், ஆண்கள் மனதில் அந்த இரு உயிரையும் சுமப்பவர்கள். அவர்களுக்கான ஆப் இது. தன் மனைவி மற்றும் பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அந்த ஆண் செய்யவேண்டிய விஷயங்கள் அனைத்தையும் இந்தச் செயலி பட்டியலிடும். குறிப்பாக, முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் அப்பாக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

- மு.பிரதீப் கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism