உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

காலையில் கேட்கும் ஏதோ ஒரு பாடலை அந்த நாள் முழுக்க நாம் முணுமுணுத்துக்கொண்டிருப்போம். சில நேரங்களில் தெரியாத மொழியில் ஒலிக்கும் ஒரு பாடல் பிடித்துப்போய், என்ன பாட்டென்றே தெரியாமல் அதைத் திரும்பத் திரும்ப மனதுக்குள் பாடிக்கொண்டிருப்போம். எப்படித் தேடியும் அது என்ன பாட்டென்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

அந்த நாள் முழுக்க ‘ச்சே... என்ன பாட்டுனே தெரியலையே!’ என அந்த விஷயம் செருப்புக்குள் மணல் புகுந்த மாதிரி உறுத்திக்கிட்டே இருக்கும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போனும், நெட் கனெக்னும் இருந்தால் போதும் என்கிறார்கள் ஆண்ட்ராய்ட் விஞ்ஞானிகள். அப்படி என்ன தீர்வுனு பார்ப்போமா?

ஷசேம் (Shazam) என்கிற அப்ளிகேஷன்தான் அது. இதுவரை 10 கோடி பேருக்கும் மேல் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துள்ளனர். ஏதாவது ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்போது இந்த அப்ளிகேஷனில் உள்ள நீலநிற பட்டனை சில நொடிகள் அழுத்திப் பிடித்தால் போதும். இதை டேக்கிங் என்கிறார்கள். இப்படிச் செய்து முடித்த சில நொடிகளில், நீங்கள் கேட்டது என்ன பாடல், யார்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

எழுதியது, வீடியோ போன்ற பாடல் தொடர்பான அத்தனை விவரங்களையும் உங்கள் ஸ்க்ரீனில் கொண்டுவந்து கொட்டும் இந்த அப்ளிகேஷன்.

நெட் கனெக்‌ஷன் இல்லாத நேரத்தில் டேக்கிங் செய்து, அதன்பின் தானாகத் தேடவும் முடியும். இனி பாடல் கேட்கும்போதே அதன் வரிகளை இதன் மூலம் தேடியெடுத்து நாமும் சேர்ந்து பாடலாம். வீடியோ வடிவத்தில் அந்தப் பாடலை ரசிக்கலாம். ஒரு பாடலுக்குத் தொடர்புடைய வேறு பாடல் எதுவென்றும் கண்டுபிடிக்க முடிவதால், நமது ரசனைக்கேற்ற புதிய பாடல்களைக் கண்டுபிடிக்கவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. இது மட்டுமின்றி, நீங்கள் அடிக்கடி கேட்கும் பாடல் எது? உலகில் தற்போது ட்ரெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் பாடல்கள் எவை? புதிதாக வெளிவந்திருக்கும் ஆல்பம் எது? - போன்றவற்றை இந்த அப்ளிகேஷன் மூலம் கண்டறிய முடியும். இப்படிப் பல ஆப்ஷன்களும் இதில் இருப்பதால், இசையே மூச்சு என்று வாழும் இசைப்பிரியர்கள் இந்த அப்ளிகேஷனை மிஸ் செய்ய வேண்டாம் என்கிறார்கள் இதன் வடிவமைப்பாளர்கள்.

இனி, இது என்ன பாட்டு எனக் கண்டபடி யோசித்து மண்டை காயாமல், மண்டை காயும் நேரத்தில் எல்லாம் நல்ல பாடல்களைக் கேட்டு கூலாக இருக்கலாம் பாஸ். இன்னுமா டவுன்லோட் பண்ணலை?

டவுன்லோடு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.shazam.android&hl=en

- கூகுள்குமார்