Published:Updated:

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!
பிரீமியம் ஸ்டோரி
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

Published:Updated:
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!
பிரீமியம் ஸ்டோரி
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

மக்கு மறதி தேசிய வியாதி ஆச்சே!. ஏற்கெனவே சந்தித்த நபரை மீண்டும் சந்திக்கும்போது அவரது பெயர் நமக்கு அரைகுறையாகத்தான் நினைவில் வரும். இது பலருக்கும் இருக்கின்ற சாதாரண பிரச்னை. வலைதளங்களில் பாஸ்வேர்ட் உருவாக்கும்போது ஞாபகமறப் பிரச்னையைத் தவிர்க்க, எல்லாவற்றிற்கும் ஒரே பாஸ்வேர்ட் தர முடிவெடுத்திருப்போம். ஆனால் ஒரு நம்பர், ஸ்பெஷல் கேரக்டராவது இருக்க வேண்டும் என்று பல வலைதளங்கள் நம்மை நிர்பந்திப்பதால் அந்நேரத்திற்கு மட்டும் ஏதாவது ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்னாட்களில் அதை மறந்திருப்போம். ஃபர்கெட் பாஸ்வேர்ட் என்ற ஆப்சன் மட்டும் இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் புதிதாக அக்கவுன்ட் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்திருப்போம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகத்தான் பாஸ்வேர்ட் மேனேஜர் என்ற அப்ளிகேசன் பயன்படுகிறது.

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

இந்த அப்ளிகேசனில் அனைத்து பாஸ்வேர்ட்களையும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இனி எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ளாமல், இந்த அப்ளிகேசனுக்குரிய ஒரேயொரு பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்தால் போதுமானது. என்க்ரிப்ட் முறையில் அனைத்தும் சேமிக்கப்படுவதால், இது மிகவும் பாதுகாப்பானது. யாராலும் உங்கள் தகவல்களைத் திருட முடியாது. வலிமையான பாஸ்வேர்ட் உருவாக்கவும் இது உங்களுக்கு வழிகாட்டும். இதில் சேமித்து வைத்த தகவல்களை நீங்கள் ஒரேயொரு ஃபைலாக மாற்றி சேமித்து வைக்கவும் முடியும். மேலும் இது முழுக்க இலவசமானது. நீங்கள் விருப்பப்பட்டால் மட்டும் சிறிய தொகையை டொனேசனாக அளிக்கலாம்.

அழகான மற்றும் எளிமையான வடிவமைப்பு, எந்தக் கட்டணமும் இல்லை, பாதுகாப்பானது, இவையெல்லாம் இதைப்போன்ற மற்ற அப்ளிகேசன்களிலிருந்து இது வேறுபடும் காரணிகள். சரி. இந்த அப்ளிகேசனுக்குரிய பாஸ்வேர்டை வழக்கம்போல் மறந்துவிட்டால் என்னாகும் என உங்களுக்குக் கேள்வி எழலாம். அப்படி நேர்ந்தால் இதைத் திறக்கவே முடியாது என்பது மட்டும் இதிலுள்ள ஒரே சிக்கல். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இதற்குரிய பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடக் கூடாது!

டவுன்லோடு லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.mirsoft.passwordmemory&hl=en

- கூகுள் குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism