Published:Updated:

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!
வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

ஞா.சுதாகர்

பிரீமியம் ஸ்டோரி
வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

“கையில் ஸ்மார்ட் போன் இன்றி, நாம் ஒருநாளும் இயங்குவதில்லை.  “நம்முடைய டிஜிட்டல் அசிஸ்ட்டென்ட்டாக இருக்கும், இந்த ஸ்மார்ட் போனை மட்டும் நாம் இன்னும் திறமையாக கையாண்டால் போதும். ஒரு பிஸினஸ்மேனுக்கு பாதி வேலை முடிந்துவிடும்” என்கிறார் கே.எஸ்.கமாலுதீன். வெற்றிகரமான ஏற்றுமதியாளராக இருக்கும் அவர், தான் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறார்.

“இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிறப்பாகச் செயல்பட, கண்டிப்பாக சில ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் இருக்கவேண்டும். அப்படித் தொழில் செய்பவர்களுக்கும், நேரத்தை மிச்சப் படுத்த நினைப்பவர்களுக்கும் நான் பரிந்துரை செய்யும் இந்த ஆப்ஸ்கள் நிச்சயம் உதவும்.

ட்ரூ காலர் (True Caller)

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!



உங்கள் போன் புக்கில் இல்லாத ஒரு நபர் உங்களை அழைக்கும்போது, அது யார் என இதன் மூலம் கண்டறிந்துவிடலாம். அத்துடன் ஸ்பேம் கால்களையும் இது காட்டி விடுவதால், தேவையற்ற கால்களை எடுத்துப் பேசவேண்டிய அவசியம் கிடையாது. இதனால் டெலி ஷாப்பிங் நிறுவனங்கள், விளம்பரங்கள் போன்ற அழைப்புகளை எடுத்துப் பேசவேண்டிய அவசியம் இருக்காது.

 ஸ்கைப் (Skype for Business)

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!



ஸ்கைப் என்னும் வீடியோ சாட்டிங் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அதே சேவையின் பிசினஸ் வடிவம்தான் இது. இதன் மூலம் பல்வேறு இடங்களில் இருக்கும் அலுவலகங்களில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் முறையிலேயே மீட்டிங் போட முடியும். நிறைய கிளை நிறுவனங்கள் இருக்கும் போது, அவற்றை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து பேச இது உதவுகிறது. ஸ்கைப் வீடியோ, காலிங் சேவைக்கு நல்ல சாய்ஸ் என்பதால், அலுவலக மீட்டிங்குகளை ஒருங்கிணைக்க சிறப்பான சாய்ஸ் இது.

 வைபர் (Viber)

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!



வாட்ஸ்அப் போலவேதான் இதுவும் செயல்படும். ஆனால், இதில் இருக்கும் வீடியோ காலிங் வசதி, வாட்ஸ்அப்பை விட சிறப்பாக இருக்கிறது. மேலும், சில நாடுகளில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதில்லை. அந்த இடங்களில் வைபர் பயன்படும். நான் ஏற்றுமதி தொழிலில் இருக்கிறேன். இதனால் நிறைய இன்டர்நேஷனல் காலிங் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்.

அந்த நேரங்களில் வைபர் எனக்கு உதவியாக இருக்கிறது. வாட்ஸ்அப் காலைவிட இதில் டிராபிக் குறைவு என்பது இதன் சிறப்பு. அடிக்கடி வெளிநாடு போகிறவர்கள் டாக்ரே (TalkRay) என்கிற ஆப்ஸையும் பயன்படுத்தலாம். இதுவும் வாட்ஸ்அப் போல இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப்தான். இந்த வாட்ஸ்அப்புக்கு பதிலாக இது நிறைய நாடுகளில் பிரபலமாக இருக்கிறது.

 டெலிகிராம் (Telegram)

இது நம்மூரில் ஏற்கெனவே கொஞ்சம் பிரபலமான ஆப்தான். இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்.

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

காலிங் வசதி இதில் இல்லை. அத்து டன் வாட்ஸ்அப்பில் நம்முடைய தகவல்கள் அனைத்தும், நமது மொபைல் மற்றும் கிளவுடில் பதிவாகும். ஆனால், டெலிகிராமில் நம்முடைய போன் மெமரி அப்படியே இருக்கும். தகவல்கள் மேகக்கணினி என்னும் கிளவுடில் மட்டுமே பதிவாவதால், எங்கிருந்து வேண்டுமானாலும், எத்தனை டிவைஸ்களில் வேண்டுமானாலும் நம்மால் இயக்க முடியும். நிறைய பேர் வாட்ஸ்அப்க்கு பதிலாக டெலிகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.

 டிங்டோன் (Dingtone - Free Phone Calls, Free Texting)

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!



வாய்ஸ்காலிங் போலவே இதுவும் பயன்படும். இதன் சிறப்பு, இரண்டு நபர்கள் வாக்கிடாக்கி போல இதனை உபயோகிக்க முடியும். இந்த ஆப் மூலம், ஒரு புஷ் பட்டன் உபயோகித்து பின்னர், நம் மொபைலை வாக்கிடாக்கி போல மாற்ற முடியும். இதனை 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த முடியும்.

 பிகோ லைவ் (Bigo Live)

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!



இதன் மூலம் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை லைவ்-ஆக ஒளிபரப்பு செய்ய முடியும். வெவ்வேறு இடங்களில் இருக்கும் சிலரிடம் ஒரே நேரத்தில் வீடியோ கால் போல பேசவேண்டுமென்றால், இது உங்களுக்கு ஏற்றது. ஃபேஸ்புக் லைவ் போல இது இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு என ரசிகர்களையும் உருவாக்க முடியும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் லைவ்-ஆக உரையாட இந்த ஆப் உதவும்.

 ஐமோ & சோமா (IMO and SOMA - free video call and chat)

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!



ஐமோ மிகவும் பிரபலமான வீடியோ காலிங் ஆப். இலவசமாக எப்போது வேண்டு மானாலும் வீடியோ கால்கள் செய்யலாம். இது பாதுகாப்பானது மற்றும் எளிமையானது. சமீபத்தில் கூகுள் நிறுவனமும் டுயோ என்ற ஆப்ஸை அறிமுகம் செய்திருந்தது. அதுவும் வீடியோ காலிங் ஆப்தான். சோமா ஆப்பும் இதேபோல வீடியோ காலிங் வசதிக்காக இருப்பதுதான். வணிக ரீதியான தொடர்புகளில் வீடியோ காலிங் மிக முக்கியமான விஷயம். அதற்கு இவை சிறந்த ஆப்ஷன்கள்.

 மைஆப்ரேட்டர் (MyOperator - CRM for Calls)

இது ஒரு பிசினஸ்மேனுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு ஆப். உங்களுக்கு வரும் கால்களை நிர்ணயிக்க உதவும். நீங்கள் மீட்டிங்கில் இருக்கும் போது, கால்களை எடுக்க

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

மாட்டீர்கள். மீட்டிங் முடித்துவிட்டு வந்து போனை எடுத்துப் பார்த்தால், நிறைய கால்கள் இருக்கும். அவற்றைப் பிரித்து அறிய இது உதவும். மேலும், உங்களுக்கு புது எண்களில் இருந்து நிறைய அழைப்புகள் வரும். அந்த எண்களை எல்லாம் சேமித்து வைக்கமாட்டோம். அந்த சமயத்தில், எந்த கால் எப்போது வந்தது என நோட் போட்டு வைத்து, சேமித்துக்கொள்ளலாம். கால்களை பிளாக் செய்யவும் முடியும். நமக்கு வரும் கால்களை நிர்வகிக்க இது சிறப்பாக உதவும்.

  கேம்கார்டு (Camcard)


விசிட்டிங் கார்டுகள் அனைத்தையும், மின் பதிப்பாக நம் மொபைலில் சேமித்துக்கொள்ள இது

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

உதவுகிறது. உங்கள் விசிட்டிங் கார்டை, மொபைல் கேமரா மூலம் போட்டோ எடுத்தால் போதும். அதில் இருக்கும் எண்கள், பெயர், போட்டோ அனைத்தும் உங்கள் மொபைலில் பதிவாகிவிடும். இதனால் ஒவ்வொரு எண்ணாக பதிவு செய்துகொள்ள வேண்டாம். இந்த மின்னணு கார்டுகளை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்ளவும் நம்மால் முடியும். இதனால் முக்கியமான நண்பர்கள், தொழில் தொடர்பான விசிட்டிங் கார்டுகளை சேமிப்பது எளிது.

 வாய்ஸ் அலவ்ட் ரீடர் (Voice Aloud Reader)


ஒரு நாளைக்கு பல மின் அஞ்சல்கள், டாக்குமென்ட்டுகள், குறுந்தகவல்கள் என நிறைய

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

விஷயங்களைப் படிக்கவேண்டியது வரும். நீண்ட நேரம் படிப்பதால், கண் எரிச்சல் எல்லாம் ஏற்படும். ரயில், பஸ் போன்றவற்றில் செல்லும்போது சரியாகப் படிக்க முடியாது. அந்த நேரங்களில் நாம் பார்க்கும் எழுத்துக்களை, காப்பி செய்து இதில் போட்டால் போதும். எழுத்துக்களை அப்படியே படித்துக் காட்டிவிடும். ஹெட்போன் போட்டு, பொறுமையாகக் கேட்கலாம். நமக்கு வேண்டிய அளவு ஒலியில், வேகத்தில் நம்மால் ஆங்கில எழுத்துக்களைப் படிக்க முடியும்.

வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

இந்த ஆப்ஸ்கள் அனைத்தையும், அந்தந்த பயன்பாடுகள் எனக்கு வந்தபோதுதான் ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டேன். இதில் நமக்குத் தேவையானதை மட்டும் நாம் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். இதனால் நமக்கு நேர விரயம் குறையும்’’ என்று முடித்தார் கமாலுதீன்.

பிசினஸ்மேன்கள் இந்த கேட்ஜெட்களை பயன்படுத்தி ஜெயிக்கலாமே!

படம்: பா.காளிமுத்து.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு