Published:Updated:

``ஐபோன் வேண்டாம்... ஒன் ப்ளஸ் 6 போதும்!” - சொல்லியடிக்கும் #OnePlus6

``ஐபோன் வேண்டாம்... ஒன் ப்ளஸ் 6 போதும்!” - சொல்லியடிக்கும் #OnePlus6

``ஐபோன் வேண்டாம்... ஒன் ப்ளஸ் 6 போதும்!” - சொல்லியடிக்கும் #OnePlus6

``ஐபோன் வேண்டாம்... ஒன் ப்ளஸ் 6 போதும்!” - சொல்லியடிக்கும் #OnePlus6

``ஐபோன் வேண்டாம்... ஒன் ப்ளஸ் 6 போதும்!” - சொல்லியடிக்கும் #OnePlus6

Published:Updated:
``ஐபோன் வேண்டாம்... ஒன் ப்ளஸ் 6 போதும்!” - சொல்லியடிக்கும் #OnePlus6

ஐபோனா வருது? ஒன்ப்ளஸ் தான பாஸ் என்றெல்லாம் விடுவதில்லை கேட்ஜெட் லவ்வர்ஸ். ஒரு லட்ச ரூபாய்க்கு ஐபோன் என்னவெல்லாம் தருமோ அதையெல்லாம் அதன் பாதி விலைக்கும் குறைவாகத் தருகிறது ஒன்ப்ளஸ். அப்புறம் அதற்கு எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும். அதைப் போலவே பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது ஒன்ப்ளஸ் 6.

ஏற்கெனவே இதன் வடிவமைப்பு முதல் ப்ராஸசர் வரை பெரும்பாலான தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில் ஒன்று கூட மிஸ் ஆகாமல் அப்படியே இதிலிருக்கிறது. நேற்று நடந்த நிகழ்வில் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனுக்கு முன்னர் முதலாவதாக ப்ளூடூத் இயர்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்ப்ளஸ் நிறுவனம் வெளியிடும் முதல் ப்ளூடூத் இயர்போன் இது. Bluetooth v4.1-ல் செயல்படும் இதன் மூலமாக தரமான இசையைக் கேட்க முடியும். ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்படுத்தலாம்.

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது. இதை வெறும் பத்து  நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் ஐந்து மணி நேரத்திற்கான ப்ளேபேக் டைம் பெற  முடியும்.  USB-C கேபிள் மூலமாக இதை சார்ஜ் செய்துகொள்ளலாம். மற்ற நிறுவனங்களிலும் இதைப் போல இயர்போன்கள் இருந்தாலும் இதில் மேக்னெட்டை வைத்து மேஜிக் காட்டுகிறது. இயர்போனின் இடது, வலது என இரண்டு பகுதிகளுமே மேக்னெட்டால் செய்யப்பட்டவை. காந்தம் என்பதால் இதைச் சேர்த்து வைத்தால் ஒட்டிக்கொள்வதோடு மட்டுமன்றி ஆப் மோடுக்குச் சென்று விடும். ஆன் செய்ய வேண்டுமென்றால் ஒட்டியிருப்பதைப் பிரித்தால் போதுமானது. கூகுள் அசிஸ்டன்ட் வசதியும் இதில் இருக்கிறது. வாட்டர், மற்றும் வெதர் ரெசிஸ்டன்ட்டாகவும் இதை ஒன்ப்ளஸ் வடிவமைத்திருக்கிறது.

அடுத்ததாக ஒன்ப்ளஸ் 6, நாட்ச் வடிவமைப்பில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் இது. அப்படியென்றால் இதுவும் ஐபோன் காப்பிதானா என்பவர்கள் கவனத்துக்கு ஆப்பிளுக்கு முன்னரே நாட்ச் என்ற விஷயத்தைக் கொண்டு வந்தது Essential ஸ்மார்ட்போன்தான். அது வெளியாகி பல மாதங்கள் கழித்துதான் ஐபோன் x வெளியானது. இதற்கு முன்பு நாட்ச் வசதி கொண்ட ஆண்ட்ராய்டு மொபைல்களில் மென்பொருள் சிக்கல் இருந்து வந்தது. ஆனால், இதில் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு P இயங்குதளம் (தற்பொழுது ஓரியோ தான் இருக்கிறது) வரவிருப்பதால் அந்தச் சிக்கல்கள் குறைவாகவே இருக்கும். 6.3 இன்ச் 19:9 OLED டிஸ்ப்ளேவுடன் பின்புறம் கிளாஸைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல வருடமாகப் பயன்படுத்தி வந்த மெட்டல் வடிவமைப்பை இதன் மூலமாக அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். கேமராவில் ஒன்ப்ளஸ் எப்பொழுதுமே சொல்லி அடிக்கும் கில்லி. அப்படியே இந்த முறையும் அப்படியொரு கேமராவைக் கொடுத்து அசத்தியிருக்கிறது.

16 MP + 20MP கேமரா எடுத்த சாம்பிள் புகைப்படங்களைப் பார்த்தால்  DSLR2 கேமராவே தோற்றுவிடும் அளவுக்குத் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு கேமராக்களில் 16 MP கேமராவில் OIS, EIS வசதி இருக்கிறது. 16 MP முன்புற கேமராவும் சிறப்பாக இருக்கிறது. வேகம்தான் இதில் முக்கியமாக இருக்கப்போவதாக விளம்பரப்படுத்தியிருந்தது ஒன்ப்ளஸ். அதனால் எதிர்பார்த்ததைப் போலவே Snapdragon 845 பிராசஸரும் கூடவே கிராபிக்ஸ் பெர்ஃபாமன்ஸை அதிகரிப்பதற்காக Adreno 630-வும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்ப்ளஸின் கஸ்டமைஸ்டு இயங்குதளமான  OxygenOS (ஆண்ட்ராய்டு  P) வேகமான செயல்திறனுக்கு உதவியாக இருக்கும். 6 GB+64GB, 8GB RAM + 128GB மற்றும் 8 GB RAM + 256GB என மூன்று வேரியன்ட்களிலும்  Mirror Black, Midnight Black, மற்றும்  Silk White என மூன்று நிறங்களிலும் ஒன்ப்ளஸ் 6 கிடைக்கும். இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது அதன் பின்னரே இங்கே என்ன விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது தெரிய வரும். ஒன்ப்ளஸ் 6-ன் அனைத்து வேரியன்ட்களும் வரும் 22-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன.

எல்லாம் சரிதான். ஆனால், அடுத்த மாடல் வரும் முன்பே முந்தைய மாடல்களை கிடைக்காமல் செய்வது, புது மாடல் வந்ததும் பழைய மாடல்களை அம்போ என விடுவது எல்லாம் சரியில்லையே பாஸ். அவர்களும் ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்கள்தானே?