பிரீமியம் ஸ்டோரி

வெடிங் ஃபேவர் ஐடியாஸ்

எவ்வளவு பெரிய கல்யாணமா இருந்தாலும் வந்தவங்களுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கலைனா நல்லாவா இருக்கும்? அதிலும், அந்த கிஃப்ட்டை அழகா, க்யூட்டா நம்ம கையாலயே செஞ்சு குடுக்க முடிஞ்சா இன்னும் சிறப்பா இருக்கும்ல? நம்ம விருந்தினர்களுக்கு உபயோகமாக இருக்குற மாதிரி சிம்பிளான கிஃப்ட்டுகள், அழகழகான கிஃப்ட் பாக்ஸ் ரெடி செய்வது மற்றும் தீம் வெடிங், பீச் வெடிங்குக்கு ஏற்றவாறு நிறைய ஐடியாஸ் கொட்டி கிடக்குது. ஆப்ஸை டவுன்லோடு செய்து உங்கள் திருமணத்தை இன்னும் சிறப்பாக்க வாழ்த்துகள்.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.zalebox.wedding.favor.ideas.d1

ஐடியாஸ் தரும் ஆப்ஸ்!

போட்டோ ஷூட் ஐடியாஸ்

தற்போதைய ஹாட் ட்ரெண்டிங்கான பிரீ வெடிங் போட்டோ ஷூட் எடுக்க விரும்பும் மணமக்களுக்கான பயனுள்ள ஆப் இது. சிலர் தாங்கள் முதன் முதலில் சந்தித்த இடம் அல்லது காதலை புரொபோஸ் செய்த இடம் என மணமக்கள் தாங்கள் மனதுக்கு மிக நெருக்கமான இடங்களில் போட்டோ ஷூட் வைத்துக்கொள்ளலாம். அதிலும் புதுமையான கான்செப்ட் வேண்டும் என விரும்புபவர்கள், இந்த ஆப்ஸில் இருக்கும் போட்டோ கேலரியை ஒருமுறை பார்த்தாலே போதும். இதில் டஜன் டஜனாக ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கின்றன. உங்களுக்குப் பொருத்தமான ஐடியாக்களை தேர்ந்தெடுத்து, உங்களை ஷூட் செய்யவிருக்கும் போட்டோகிராஃபருக்கும், இந்த ஐடியாக்களை ஷேர் செய்து, கலக்கலான ஒரு போட்டோ ஆல்பம் தயாரிக்கலாமே!

 லிங்க்:  https://play.google.com/store/apps/details?id=com.preweddingphotoconcepts.dedenurulkomaria

வெட் மி குட்

திருமண நிகழ்வுக்கான ஏ டு இசட் தகவல்களும் இந்த ஒரே ஆப்ஸில் கிடைக்கும். புதுப்புது ஐடியாக்கள், திருமண உடைகள், புகைப்படக்காரர்கள், மேக்கப் நிபுணர்கள் என அனைத்தும்  எக்கச்சக்க சாயஸுடன் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும். உங்க பார்ட்னரையும் இந்த ஆப்ஸில் சேர்த்துக்கொண்டு, திருமணத்துக்கான அனைத்து பிளான்களையும் இருவரும் சேர்ந்தே முடிவு செய்யலாம். நிறைய க்ரியேட்டிவ் ஐடியாஸ் கிடைக்கும். உங்களின் அனைத்து திருமணத் தேவைகளுக்கும் வெடிங் பிளானரை நாடுவதை விட்டு உங்கள் கைக்குள்ளேயே ஒரு பிளானர் ரெடி செய்துகொள்ளுங்களேன்!

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.wedmegood.planner&hl=en

வெடிங் டெகரேஷன்ஸ்

திருமணத்துக்கு வரும் விருந்தினர்களை முதலில் கவர்வது, திருமண மண்டபத்தின் அலங்காரம்தான்.  மண்டபத்தில் பிரதானமாக விளங்கும் மணமக்களின் மேடை முதல் பிரமாண்ட மண்டப அலங்காரம் வரை, அனைத்துக்கும் தனித்தனியாக பலதரப்பட்ட ஐடியாக்களை அதுவும் புகைப்படங்களாகவே இந்த ஆப்ஸில் பார்த்துக்கொள்ளலாம். நூற்றுக்கணக்கான படங்கள் இந்த ஆப்ஸில் இருக்கின்றன. முழுக்க முழுக்க இந்தியக் கலாசாரத்துக்கு ஏற்ற வகையிலான அலங்காரங்கள் உள்ள இந்த ஆப்ஸ் உங்கள் கனவு திருமணத்துக்காக பல வித்தியாசமான ஐடியாக்களை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்து, இன்டர்நெட் இல்லாமலேயே எப்போது வேண்டுமானலும் யூஸ் பண்ணமுடியும்.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.mehndidecorationideas.qimtir

வெடிங் இன்விடேஷன்

உலகமே ஆண்ட்ராய்ட் மயமாகிவிட்டதால், விருந்தினர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை கொடுத்து வரவேற்பது ஓல்ட் ஃபேஷன்னு நினைக்கறவங்க. இந்த ட்ரெண்டியான ஆன்லைன் ஆப்ஸ் மூலம் ‘பேப்பர் ஃப்ரீ’ கான்செப்ட்டில் விருந்தினர்களை அழைத்து ஆச்சர்யப்படுத்தலாம். இந்த ஆப்ஸில் உங்கள் திருமண அழைப்பிதழை நீங்களே டிசைனும் செய்யலாம். மண்டப  லொகேஷனைக்கூட மேப்பில் ஷேர் பண்ற வசதியும் இருக்கும். அதனால விருந்தினர்கள் திருமண மண்டபத்துக்கு வழி தெரியாமல் கஷ்டப்படுவதில் இருந்து தப்ப முடியும். அதேபோல் உங்கள் அழைப்பிதழை எல்லா சோஷியல் நெட் வொர்க் மூலமாவும் பகிரமுடியும். அதோட கல்யாணத்துக்குப் பிறகு உங்கள் திருமண புகைப்படங்களைக்கூட இதில் அப்லோட் செய்து உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிரமுடியும்.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.invitesu.invitation

- சுகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு