Published:Updated:

மேனேஜர் ஆப்ஸ்

மேனேஜர் ஆப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மேனேஜர் ஆப்ஸ்

ஞா.சுதாகர்

மேனேஜர் ஆப்ஸ்

ஞா.சுதாகர்

Published:Updated:
மேனேஜர் ஆப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மேனேஜர் ஆப்ஸ்

STARTUP ZUPER

ஸ்டார்ட் அப் - இன்றைக்கு பல இளைஞர்கள் கனவு இதுதான். சமூகத்தின்  பல்வேறு சிக்கல்களுக்கு, புதுமையான தீர்வுகளைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தருவதில்தான் ஸ்டார்ட் அப்களின் வெற்றி ரகசியம் இருக்கிறது. அப்படிப் புதுமையாக தொடங்கப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ள சில ஸ்டார்-அப்கள் இதோ:

மேனேஜர் ஆப்ஸ்

ஒரு அலுவலகத்தின் பணியாளர் களைக் கண்காணிக்கவும், பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்கவும் உதவும் ஆப்ஸ்தான் இந்த  ஜூபர். இதை மொபைல் ஆப் மூலமாகவே பயன்படுத்த முடியும். இது குறித்து இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திக்கிடம் பேசினோம்.

“நிறைய மார்க்கெட்டிங் மற்றும் சர்வீஸ் கம்பெனிகள் தங்களது அலுவலக தகவல் களைச் சேமிப்பது, வாடிக்கையாளர்களைத்  தொடர்புகொள்வது, பணியாளர்களை சரியான பணிக்கு அனுப்புவது என பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்ய, ஒவ்வொரு நபரை வேலைக்கு வைத்திருப்பார்கள். இதனால் சம்பளச் செலவும் அதிகரிக்கிறது. அத்துடன், தகவல்களை ஒருங்கிணைத்து நிர்வகிப்பதும் கடினமான ஒன்று. இதற்கு உதவ பல மென்பொருட்கள் இருந்தாலும், எல்லா வேலைகளையும் ஒருங்கிணைத்து நிர்வகிக்க எந்த மென்பொருளும் இல்லை.

மேனேஜர் ஆப்ஸ்

சிறிய நிறுவனங்கள்கூட, எங்கள் சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிது. எங்கள் ஆப்பை இன்ஸ்டால் செய்து, நிறுவனம் தொடர்பான அனைத்து விவரங்களையும் பதிவு செய்துகொண்டாலே போதும்.  உதாரணமாக, உங்களிடம் 20 ஊழியர்கள் இருக்கலாம். ஏ.சி-யை ரிப்பேர் செய்யச் சொல்லி, உங்கள் கம்பெனிக்கு 20 அழைப்புகள், வந்திருக்கலாம். இந்த வேலையை 20 ஊழியர் களுக்கு எப்படிப் பிரித்துக் கொடுப்பது, யார் எந்த வீட்டுக்கு சர்வீஸ் செய்ய செல்கிறார்கள் என்பதை எல்லாம் இதில் பார்க்க முடியும். உங்கள் ஊழியர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பதைக்கூட, ஜி.பி.எஸ் மூலமாகக் கண்டுபிடிக்க முடியும்.

ஒரு மாதத்தில், உங்கள் நிறுவனம் செய்த புராஜெக்டுகள், பணியாளர்களின் செயல்பாடுகள் அனைத்துமே, கிளவுட்டில் சேமித்து வைக்கப்படும் என்பதால், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்க முடியும். வாடிக்கையாளர்களும் இந்த ஆப் மூலம், உங்களைத் தொடர்புகொள்ள முடியும். அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும் முடியும். இந்த டேட்டாக்களை ஆராய்வதன் மூலம், உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி, சறுக்கல்கள் போன்றவற்றை கணிக்க முடியும். 

மேனேஜர் ஆப்ஸ்

20 பேர் கொண்ட நிறுவனத்துக்கு மாதம் 2,000 ரூபாய் வரை கட்டணமாக வாங்குகிறோம். அதற்கு மேல், அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்துக் கட்டணம் நிர்ணயிக்கிறோம்” என்றார். இந்த மேனேஜர் ஆப்ஸ் இருந்தால், அலுவலக வேலைகளை இன்னும் திறமையாக செய்யலாமே!

மேனேஜர் ஆப்ஸ்

சிறிய நிறுவனங்கள்கூட, எங்கள் சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிது. எங்கள் ஆப்பை இன்ஸ்டால் செய்து, அனைத்து விவரங்களையும் பதிவு செய்துகொண்டாலே போதும்.