Published:Updated:

ரியல் எஸ்டேட் பிளான்

ரியல் எஸ்டேட் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
ரியல் எஸ்டேட் பிளான்

ஞா.சுதாகர்

ரியல் எஸ்டேட் பிளான்

ஞா.சுதாகர்

Published:Updated:
ரியல் எஸ்டேட் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
ரியல் எஸ்டேட் பிளான்

STARTUP VR NEXT

ரியல் எஸ்டேட்ஸ், ஃபிளாட் போன்றவைகளுக்கு பிளானிங் போடும்போது 3D ப்ளூ பிரின்டைப் பார்த்திருப்போம். அதனை அப்படியே விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் செய்து அசத்துகின்றனர் கோவையைச் சேர்ந்த விஆர் நெக்ஸ்ட் நிறுவனத்தின் கார்த்திக், ராஜு மற்றும் செந்தில் வேலவன். முதலில் கார்த்திக் பேசத் தொடங்கினார்.

ரியல் எஸ்டேட் பிளான்

“நாங்கள் மூன்று பேருமே இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி துறையில் அனுபவம் பெற்றவர்கள்தான். ஆனால், வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தோம். பிறகு ஃபோர்ஜ் ஏக்ஜிலரேஷன் என்னும் ஸ்டார்ட்அப்-கான இன்குபேஷன் சென்டர் மூலமாகத்தான் ஒன்றாக இணைந்தோம். பிறகுதான் இந்த ஐடியாவை யோசித்து, பிசினஸாக மாற்றி, களத்தில் இறங்கினோம்.

ரியல் எஸ்டேட் பிளான்

பொதுவாக, வீட்டு உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் வீட்டைப் பற்றி விளக்கும்போது, வீடியோ, படங்கள் ஆகியவற்றைக் கொண்டு விளக்குவார்கள். அதில் பார்க்கும்போது, வீடு சூப்பராக இருக்கும். ஆனால், வீட்டை வாங்கியபின், அது வேறுமாதிரியாக  இருக்கும். அதற்காக நாங்கள் கொண்டு வந்ததுதான் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி” என நிறுத்த, ராஜூ தொடர்ந்தார்.

“இதன் மூலம் வீடுகள், அலுவலகங்கள், ஷோரூம்கள் போன்றவற்றை எல்லாம், நிஜத்தில் இருப்பது போன்றே ரியலாக பார்க்க முடியும். உதாரணமாக, ஒரு வீட்டை நீங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி உதவியுடன் பார்க்கும்போது, உள்ளே இருக்கும் சுவரின் வண்ணம், டைல்ஸ், அறையின் நீள, அகலம் என அனைத்தையுமே, நேராக சென்று வீட்டைப் பார்ப்பதுபோல பார்க்க முடியும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பே, அதில் வாழ்ந்து பார்த்ததுபோல இருக்கும். அதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி.

நாங்கள் ரியல் எஸ்டேட்ஸ் பிரிவினரை மனதில் வைத்துத்தான் முதலில் இறங்கினோம். நல்ல வரவேற்பு இருக்கிறது.  இந்தத் தொழில்நுட்பம் நமது ஊரில் மிகவும் புதிது என்பதால், மிகவும் ஆர்வத்துடன் மக்கள் வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் பிளான்

இந்த  தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தினாலும் அவற்றின் விலை அதிகம். நாங்கள் அதே தொழில் நுட்பத்தை, நம்மூருக்கு ஏற்ற விலையில் வழங்குகிறோம். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகளையும் வழங்கிவிடுவோம்” என்றவரை கார்த்திக் பின்தொடர்ந்தார்.

“இதற்குக் கிடைத்த வரவேற்பை ஒட்டி, குழந்தைகளுக்காக பாடம் நடத்துவதற்கு உதவும் வகையில், சில புராஜெக்ட்கள் செய்து வருகிறோம். மேலும், ஷோரூம், அலுவலகங்கள், கட்டடங்கள் போன்றவற்றுக்கும் நாங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி வடிவம் செய்து தருகிறோம். ரியல் எஸ்டேட்ஸ் துறையில் மாதந்தோறும் எப்படியும் ஒரு புராஜெக்ட் வரும் என்பதால், அதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

இந்த விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஒரு தொழிலை துவங்குவதற்கு முன்பு நிறைய சிந்தனைகள் இருக்கும். ஆனால், நல்ல ஐடியா, தரமான சேவை இருந்தாலே போதும். வாடிக்கையாளர்களை நாம் விரைவில் ஈர்க்கலாம்” என்கிறார்கள் இந்த இளைஞர்கள். கங்கிராட்ஸ் கைஸ்!

ரியல் எஸ்டேட் பிளான்

நாங்கள் ரியல் எஸ்டேட்ஸ் பிரிவினரை மனதில் வைத்துத்தான் முதலில் இறங்கினோம். நல்ல வரவேற்பு இருக்கிறது.