Published:Updated:

நவீன மீன் கடை

 நவீன மீன் கடை
பிரீமியம் ஸ்டோரி
நவீன மீன் கடை

ஞா.சுதாகர்

நவீன மீன் கடை

ஞா.சுதாகர்

Published:Updated:
 நவீன மீன் கடை
பிரீமியம் ஸ்டோரி
நவீன மீன் கடை

STARTUP FISH CHAIN

ன்றைக்கு நான்-வெஜ் பிரியர்கள் அதிகம் விரும்புவது சிக்கனோ, மட்டனோ அல்ல; மீன்தான். காரணம், மீனில் கொழுப்புச் சத்துக் குறைவு என்பதால்தான். மீன் உண்ணும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடும், புரதக் குறைபாட்டை நீக்கும் எண்ணத்திலும் கோவையில் செயல்பட்டு வருகிறது ஃபிஷ்செயின்.

 நவீன மீன் கடை

கோவையைச் சுற்றியுள்ள பகுதிகள், பெங்களூரு என மொத்தம் 10 மீன் கடைகளை வைத்து, மீன் விற்பனை செய்து வருகிறார்  நவீன் சந்தர். அவருடன் பேசினோம்.

“இந்த ஃபிஷ்செயினைத் துவங்குமுன், ஆறு மாதங்கள் இந்த மீன் விற்பனை, மீன்கள் தொடர்பான விஷயங்களை எல்லாம் கற்றுக் கொண்டேன். துறைமுகங்கள், மீனவர்கள் என இருபக்கமும் சென்று இதில் இருக்கும் பிரச்னைகள் பற்றி அறிந்துகொண்டேன்.

ஒரு நகரத்தில் எந்த அளவு மீன்கள் விற்பனை ஆகிறது என்ற விவரம்கூட, நம்மிடம் இல்லை. ஆனால், வெளிநாடுகளில், எந்தெந்த நகரங்களில், எவ்வளவு மீன் விற்பனை ஆகிறது, எந்த மீனை அதிகம் உண்கின்றனர் போன்ற தகவல்கள் அனைத்தும் இருக்கும்.

 நவீன மீன் கடை

நம்மிடம்தான் மீன் வளம் நிறைய இருக்கிறது. புரதக் குறைபாடு அதிகம் உள்ள நாட்டில், புரதம் அதிகம் நிறைந்திருக்கும் உணவு சரியாகச் சென்று சேரவில்லை என்றால், நாம் விநியோகிக்கும் முறைகளில் தான் ஏதோ குறை இருக்கிறது. இதனை நீக்க விரும்பினேன். மேலும், எந்த மீனை சாப்பிட்டால், என்ன சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்ற எந்த விழிப்பு உணர்வும் நம்மிடம் இல்லை.

அதேபோல, நல்ல மீன்கள் அனைத்தும் ஏற்றுமதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் நம்மிடம் மீன்வளம் இருந்தும்கூட, சரியாக மக்களுக்கு கிடைப்பதில்லை. நாங்கள் சுமார் 30 வகையான மீன்களை விற்பனை செய்கிறோம். குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் எந்தெந்த மீன்கள் பொருத்தமானது என்பதையும் சொல்கிறோம். உதாரணத்துக்கு, ‘ட்யூனா’ என்ற மீன் உலகம் முழுக்க பிரபலமான மீன். இதனை பலர் விரும்பி உண்கின்றனர். ஆனால், நம்மூரில் யாரும் அதை  உண்பதில்லை. . எனவே, ஒவ்வொரு மீனின் சிறப்பையும் எடுத்துச் சொல்லி விற்பனை செய்கிறோம். மீன் விற்பனைக்காக, ஒரு முறையான நெட் வொர்க்கை உருவாக்கி இருக்கிறோம்.

 நவீன மீன் கடை

கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எட்டுக் கடைகள் வைத்திருக்கிறோம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மூலமாகவும் மக்களிடம் எங்கள் பிராண்டை கொண்டு செல்கிறோம். முதலில் நான் மென்பொருள் நிறுவனத்தில்தான் பணிபுரிந்து வந்தேன். பிறகு உணவுப் பிரச்னைகள் பற்றி தெரிந்தபிறகுதான் இதில் இறங்கினேன். இந்தியாவின் எல்லா மெட்ரோ நகரங்களிலும் எங்கள் நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’’ என்றார் நவீன்.

நீங்க ஜெயிப்பீங்க ப்ரோ!

படங்கள் : தி.விஜய்,  த.ஸ்ரீநிவாசன், தே.அசோக் குமார், பா.காளிமுத்து.

 நவீன மீன் கடை

இந்தியாவின் எல்லா மெட்ரோ நகரங்களிலும் எங்கள் நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்