Published:Updated:

இந்தியா, இணைய வர்த்தகம் & ​தள்ளுபடிகள்...

இந்தியா, இணைய வர்த்தகம் & ​தள்ளுபடிகள்...
இந்தியா, இணைய வர்த்தகம் & ​தள்ளுபடிகள்...

இணையதள சேவைகள் மூலமாக பொருள்களை வாங்குவதையும் விற்பதையும் ​'​இ-காமர்ஸ்​'​ அல்லது​ 'மின் வணிகம்​'​ என அழைக்கிறோம். குண்டூசி தொடங்கி ராக்கெட் செய்யத் தேவையான பொருள்கள் வரை அனைத்தையும் இன்று நாம் இணையம் மூலம் வாங்க முடியும். கால, இட தடங்கல்களைத் தாண்டி, உலகத்தின் எந்த மூலையில் இருந்​து​ எந்த பகுதிக்கும் பலதரப்பட்ட பொருள்களை மக்களுக்கு கொண்டுசேர்ப்பதுதான் இணையவணிகத்தின் பிளஸ். நம் வீட்டுக்கு அருகிலுள்ள கடைகளில் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்த நம்மை, இன்டர்நெட் உலகச் சந்தையின் வாடிக்கையாளர்களாக மாற்றியிருக்கிறது.​ இன்று தென்காசியில் ஒரு கடைக்கோடியில் உட்கார்ந்துகொண்டு ஐரோப்பிய பொருள்களை வாங்கிவிடலாம், அதுதான் இ-காமர்ஸின் சக்தி! இவ்வாறு,​ மேற்கத்திய நாடுகளில் ஹாட் டாப்பிக்காக 20ஆம் நூற்றாண்டின் இறு​திகளில் ​திகழ்ந்த​ இ-காமர்ஸ் தளங்கள் இன்று உலகத்தின் வியாபார முறையையே புரட்டிப்போட்டுவிட்டன. இன்று அனைத்து துறைகளிலும் அதிவேக வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்தியாவும் சீனாவும்தான் இத்தளங்களின் முக்கிய பயனாளிகள். 

இந்தியா, இணைய வர்த்தகம் & ​தள்ளுபடிகள்...

இந்தியாவில் இ-காமர்ஸ் தளங்கள் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன, இதற்கு மூன்று முக்கிய  காரணங்கள் உண்டு - நடுத்தர குடும்பங்களின் வருமானத்தில் முன்னேற்றம், இணையத்தின் அபரிவிதமான பரவல் மற்றும் அதிகரித்துள்ள ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு. கடந்த 19 வருடங்களாக இந்தியாவின் ஐ.டி. மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமோக வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜூலை, 2017 வரை இந்தியாவில் 45 கோடி மக்கள் இணையத்தைப்  பயன்படுத்தியிருக்கின்றனர் எனும் தகவலே இதற்குச் சான்று. தற்போது இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இணையம் மூலம் இந்தியாவில் வர்த்தகம் நடைபெற்றுவரும் நிலையில், இந்த இலக்கம் 2021-இல் மூன்று மடங்காக பெருக வாய்ப்புள்ளது என இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இ-காமர்ஸ் நடத்தியுள்ள ஆய்வொன்று தெரிவிக்கிறது. இதில் 35% விற்பனை பேஷன் சார்ந்த ஆடை, அணிகலன் மற்றும் பொருள்களாக இருக்கும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

இ-காமர்ஸ் இந்தியாவில் 'ஹிட்' தானா?

உலகளவில் ஒப்பிடும்போது மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவைக் காட்டிலும் இந்தியாவின் இணையவழி வர்த்தகம் ஜோராக இல்லை. இணையத்தில் பொருள் வாங்கிய பின் திருப்தியில்லாமல் திருப்பிக்கொடுப்பது, ஆர்டரை கேன்சல் செய்வது, கேஷ் ஆன் டெலிவரி முறை, பணப் பரிமாற்றத்தின்போது இன்டர்நெட் பேமென்ட் கேட்வேக்கள் பல காரணங்களால் செயல் இழப்பது, இந்தியாவின் மொழி பேதங்ககள், போக்குவரத்து சார்ந்த இடையூறுகள், முகவரிப் பிழைகள் மற்றும் ஆயிரக்கணக்கான வியாபாரப் போட்டிகள் என பலவகை சவால்களைத் தாண்டி இந்திய சந்தையில் சேவையை வழங்கிவருகின்றன இந்த தளங்கள். எனவே, முட்டியும் மோதியுமே இ-காமர்ஸ் நாட்டின் பெருவாரியான மக்களைச் சென்றடையப்போகிறது. பெரும் நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த பாகங்களிலும் கால் பதிக்க சில ஆண்டுகள் ஆகும் என்பதே நிதர்சனம். ஆனால், நிச்சயம் இந்த வளர்ச்சி அசுரவேகம் எடுக்கும் என்பதும் உண்மை.

இந்தியா, இணைய வர்த்தகம் & ​தள்ளுபடிகள்...

இ-காமர்ஸ் பயன்கள்

பயனாளிகளைப் பொறுத்தவரை, உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு எதையும் வாங்கலாம் என்ற சொகுசுதான் இ-காமர்ஸின் விசேஷமே! இதைத் தாண்டி, வாங்கும் தயாரிப்புகளின் அம்சங்கங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவது, வாரன்டி குறித்த அறிவிப்பு, வாடிக்கையாளர் தேடல்களுக்கு ஏற்றவாறு பொருள்களைக் காண்பிக்கும் முறை, முந்தைய வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள், உலகமயமாக்கப்பட்ட விற்பனை, பலதரப்பட்ட பிராண்டுகளின் இருப்பு, எந்நேரத்திலும் வாங்கும் வசதி போன்ற பல காரணங்கள் சராசரி ஷாப்பிங்கை விட இ-காமர்ஸை பலரும் நாடக் காரணாமாக ஆக்கியிருக்கிறது. முக்கியமாக ஆன்லைன் சைட்டுகள் பலதரப்பட்ட பொருள்களை குறைந்த விலையில் அளிப்பதும் தள்ளுபடி வழங்குவதும், வாடிக்கையாளர்களை கட்டியிழுக்கும் காந்த உத்திகளாகும்.

தள்ளுபடி... தள்ளுபடி...

தள்ளுபடி எனச் சொல்லும்போது செலக்ட் ஆபர்ஸ், பிளாஷ் சேல், ஆண்டுக் கழிவு தள்ளுபடி, கேஷ் பேக், விசேஷ டிஸ்கவுன்ட் கூப்பன் வழங்குவது எனப் பலவகைகளில் கஸ்டமர்களைத் தங்கள் பால் ஈர்க்கின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள். இப்படி ஆன்லைனில் எங்கெல்லாம் தள்ளுபடி கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து, சலுகைகளுக்கு பிரேத்தியேகமான டிஸ்கவுண்ட் கூப்பன் நம்பரை உருவாக்கி வெளியிடும் கூப்பன் தளங்களும் இன்று மும்முரமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. 

இந்தவரிசையில், 40 நாடுகளில் செயல்பட்டுவரும், மத்திய ஐரோப்பாவைச் மையமாகக்கொண்டு செயலாற்றும் சர்வதேச டிஸ்கவுண்ட் கூப்பன் நிறுவனமான "பிக்கோடி -  https://www.picodi.com/in/ " தற்போது இந்தியாவில் தங்களது சேவையைத் துவங்கியுள்ளது. நாம் நம் மனம் விரும்பிய இ-காமர்ஸ் சைட்டுகளுக்குச் சென்று பிடித்த பொருள்களை வாங்கும்போது, அந்த இ-காமர்ஸ் தளத்தைச் சார்ந்த பிக்கோடியின் டிஸ்கவுன்ட் கோட்-ஐ பயன்படுத்தி தள்ளுபடிகளைப் பெறலாம். ஆன்லைன் ஷாப்பிங் ரசிகர்களுக்கு இச்செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பிக்கோடியின் சிறப்பம்சங்கள்: 

* ஸ்பெஷல் சேல் டீல்களையும் கூப்பன் கோட்களையும் இலவசமாக வழங்குகிறது.
* இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் டீல்கள், இரண்டுமே இங்கு கிடைக்கின்றன.
* பிக்கோடியில் காணப்படும் அனைத்து டிஸ்கவுண்ட்களும் பலதரப்பட்ட சரிபார்ப்புக்குப் பின்னரே அவர்களது தளத்தில் இடம்பெறுகின்றன.
*  சந்தையில் என்னென்ன புதுப்புது டீல்கள் வந்திருக்கின்றன என்பதை உடனுக்குடன் தெரிவிக்கிறது பிக்கோடி.
*  பிக்கோடியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் 35% வரை ஷாப்பிங்கில் மிச்சப்படுத்துகின்றனர்!​ 
*  ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்முன்,  https://www.picodi.com/in/  தளத்துக்குச் சென்று, கூப்பன் கோட்களைப் பெற்று பொருள் வாங்கும்போது சில நூறு முதல் பல ஆயிரம் ருபாய் வரை சேமிக்கலாம்!