Published:Updated:

புது 'சிரி’, பக்கா ஃபேஸ் டைம், க்ரூப் நோட்டிஃபிகேஷன்ஸ்... ஆண்ட்ராய்டை ஓவர்டேக் செய்யுமா #iOS12

புது 'சிரி’, பக்கா ஃபேஸ் டைம், க்ரூப் நோட்டிஃபிகேஷன்ஸ்... ஆண்ட்ராய்டை ஓவர்டேக் செய்யுமா #iOS12
புது 'சிரி’, பக்கா ஃபேஸ் டைம், க்ரூப் நோட்டிஃபிகேஷன்ஸ்... ஆண்ட்ராய்டை ஓவர்டேக் செய்யுமா #iOS12

ரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. ஆப்பிளும் கூகுளும் முட்டி மோதி நமக்குப் புது வசதிகள அள்ளி தந்தா யூசர்ஸ் நமக்குதான கொண்டாட்டம்? போன மே மாசம் 8 ந்தேதிதான் கூகுள் I/O ல புது புது வசதிகள அள்ளித்தந்தாங்க. அதுக்குப் போட்டியா களம் இறங்கியிருக்கும் iOS12 ல அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கலாம்.

1)  Measure APP

இது ஐ போன் கேமராவைப் பயன்படுத்தியே வீட்டிலோ அல்லது வெளியிலோ உள்ள பொருள்களின், நீளம், அகலம், உயரம் போன்றவற்றைத் துல்லியமாக அளக்க உதவும். இந்த வசதியைத் தரும் தனியார் செயலிகள் பயன்பாட்டில் இருக்கும் போது, தன்னுடைய  iOS - 12 ல் ஓர் அங்கமாக ஆக்கிக்கொண்டது ஆப்பிளின் புத்திசாலித்தனம் என்றே சொல்லலாம்.

2)  Photo APP

புகைப்படங்களைக் காண்பதற்காக மட்டுமே பயன்பட்டு வந்த இந்தச் செயலி, மிகவும் போர் ஆனது. கடந்த சில வருடங்களாக இந்தச் செயலியில் பெரிய மாறுதல் ஏதும் செய்யாத ஆப்பிள், இந்த வருடம் இளசுகளைக் கவரும் வகையில் பல புதிய வசதிகளை சேர்த்துள்ளது. இந்தச் செயலி கூகுளின் போட்டோ ஆப் ஆன கூகுள் போட்டோஸை பின்னுக்குத் தள்ளும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. புதிதாகச் சேர்க்கபட்டுள்ள வசதிகள். 

Search Suggestions :- நீங்கள் போட்டோ எடுக்கும் இடத்தைப் பொறுத்து, அதன் அருகில் உள்ள மால்கள், ஹோட்டல்கள், பார்குகள், அருகில் நடக்கும் நிகழ்வுகளை உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம்.

Search Refinements :- நீங்கள் வழக்கமாக இணையத்தில் ஒன்றைத் தேடும் போது பயன்படுத்தும் வார்த்தைக்கு "Search Term” என்று பெயர். இது நாள் வரையில் ஒரு "Search Term” கொண்டே தேடும் நிலை இருந்தது, இப்போது பல "Search Term” களை உள்ளிட்டு தேடும் வசதியை அளித்துள்ளது ஆப்பிள். இதனால உங்கள் தேடும் திறன் மேம்படுவதுடன், நேரமும் மிச்சமாகிறது.

For you :-  இது ஆப்பிளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் ஆகும், இது உங்களுக்கான தனிப்பட்ட தகவல்கள், உங்களுக்குப் பிடித்த நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், சினிமா, மற்றும் ஃபேஸ்புக்கில் வருவது போல போனவருடம் இந்த நாளில் எடுத்த புகைப்படங்கள் அது தொடர்பான நிகழ்வுகளை அசை போட தருகிறது.

Sharing Suggestions :- இந்த வசதி உங்கள் புகைப்படத்தில் இருக்கும் நபருடன் உங்களது புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள வசதியைத் தருகிறது மேலும். நீங்கள் அவருக்கு ஒரு போட்டோ அனுப்பும் பட்சத்தில் அவருக்கும் உங்களுக்கு ஒரு நல்ல போட்டோவை அனுப்ப கோரிக்கை விடுக்கிறது. இது முழுக்க முழுக்க என்கிரிப்ட் செய்யப்பட்ட வசதி என்பதால் எந்த ஒரு தயக்கமும் இன்றி நாம் நம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம், இந்த வசதியானது  iMessage வழியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

3)  SIRI Updates :-

இந்த முறை ஆப்பிள்  SIRI யில் பல மாற்றங்களைச் செய்ததுடன், நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளிலும் கூட SIRI ஐ ஒருங்கிணைத்துள்ளது. இதனால் உங்கள் SIRI உங்களுக்கான பெர்சனல் அசிஸ்டென்டாக திறம்பட வேலை செய்கிறது. நீங்கள் உங்கள் போனில் உள்ள மற்ற செயலிகளை பயன்படுத்துவதை நினைவில் கொண்டு SIRI தன்னைத் தானே தினம் கட்டமைத்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலியைக் கொண்டு தினமும் காபி ஆர்டர் செய்தீர்கள் என்றால், மறுநாள் அந்த நேரம் வரும் போது SIRI ஆட்டோமெட்டிக்காக நான் காபி ஆர்டர் செய்யட்டுமா என உங்களைக் கேட்கும், இது மட்டுமல்லாது VERBAL SHORTCUTS எனும் வசதியையும் SIRI கொண்டுள்ளது. நீங்கள் SIRI யிடம் நான் இப்ப நல்லமூட்ல இல்ல "HELP Me Relax “, இளையராஜா பாட்ட போடுன்னு சொன்னா,  SIRI உடனே செஞ்சிடும். 

4)  APPLE Stocks and News:-

ஐபோன்ல பெரிய முக்கியத்துவம் பெறாத செயலிகளில் இதுவும் ஒண்ணு, ஆனா இந்தத் தடவ இந்தச் செயலியைப் பல மடங்கு மெருகேத்திருக்கு ஆப்பிள். முன்பு போல சாதாரணமா இல்லாம இப்போ உங்க ஸ்டாக்ஸ் ஏறும் போதும் ஏறங்கும் போதும் கண்ணைக் கவரும் வண்ணம் வடிவமைச்சிருக்காங்க, முன்பை விட இது துல்லியமா இயங்கும்ன்னு சொல்றாங்க. மேலும் முதல் முறையா இந்த வசதிய iPad க்கும் கொண்டுவந்திருக்காங்க. இது ஒருபக்கம் இருந்தா, APPLE News இன்னும் புது பொலிவோட வந்திருக்கு, உங்களுக்குப் தேவையான செய்தி எது, தேவையில்லா செய்தி எதுன்னு அதுவே உங்க விருப்பத்த கணிச்சி முன்னாடி கொண்டுவந்து குடுக்குது. உங்களோடு வசதிக்காகச் செய்தியை ஈசியா படிக்க ஒரு SIDE BAR ஐயும் சேத்திருக்கு ஆப்பிள், 

5)  The Voice Memo :-

நம்மள்ல பல பேரு இந்த Voice Memo வசதியை பல இடங்கள்ள நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி பயன்படுத்தியிருப்போம், இப்போ இந்தச் செயலி iCloud Support ஐ பயன்படுத்துகிற மாதிரி வடிவமைச்சிருக்காங்க. முன்பை விட ரொம்ப ஈசியா பழைய Voice Memoகளை தேடும் வசதியையும் இதுல இருக்கு. இதுனால நீங்க உங்க ஐபோன் மட்டுமல்ல; வேற எந்த ஒரு கருவியையும் பயன்படுத்தி, உங்க  iCloud அக்கவுன்ட் வழியா Voice Memo களை கேக்க முடியும்.

6)  iBooks to Apple Books :-

இந்த வசதி புத்தகப் பிரியர்களால பெரிதும் வரவேற்கப்படும் ஒரு வசதி. இந்தச் செயலியில் ஆப்பிள் செய்துள்ள புது வசதிகளால உங்க BOOK Store சும்மா தகதகன்னு தங்கம் போல ஜொலிக்கும் பாருங்க. உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி புதுசா எந்தப் புத்தகம் இப்போ வந்திருக்கு, எந்தப் புத்தகம் இப்போ டிரெண்டிங்கல இருக்குன்னு ஏகப்பட்ட தகவல்களை அள்ளித் தெளிக்குது இந்தச் செயலி. உங்களுக்குப் புடிச்ச புத்தகத்தைப் படக்குனு வாங்கவும் இந்தச் செயலியில வழி செஞ்சிருக்கு ஆப்பிள்.

 
7)  Apple Car Play :-

ரொம்ப ஸ்டிரிக்டா ஸ்கூல் வார்டன் மாதிரி இருந்த ஆப்பிள், இப்போ கொஞ்சம் கூல் டூட் ஆகி தன்னோட  Apple Car Play செயலியில கூகுளோட கூகுள் மேப் வசதியையும், மேலும் சில தனியார் நிறுவனங்களின் செயலிகளையும் நிறுவிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது, இதனால் Apple Car Play பயனர்களின் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8)  DO NOT DISTURB :-

யாருமே எதிர்பார்க்காத வகையில் கூகுள் வெளியிட்ட மாதிரியே ஆனால் இன்னும் கொஞ்சம் கூடுதல் வசதிகளோட வந்திருக்கு இந்தச் சேவை. நீங்க தூங்கும் போது எந்திரிக்கும் டைம் செட் பண்ணி வெச்சிடீங்கன்னா, அதுவரைக்கும் உங்களுக்கு எந்த ஒரு நோட்டிஃபிகேஷனும் கேக்காது, ஸ்கிரின்ல காட்டவும் காட்டாது. நீங்கள் மறுநாள் எழுந்த உடன்தான் எல்லாத்தையும் பாக்க முடியும், வேனும்னா பாதியில் கூட இந்த வசதிய ஆப் பண்ணி வெச்சிக்கலாம்.

9)  SCREEN TIME ;-

நீங்க எவ்வளவு தூரம் போனுக்கு அடிமையா இருக்கீங்க அல்லது உங்க போன்ல ஒவ்வொரு செயலியிலும் ஒரு வாரத்துக்கு எவ்வளவு நேரம் செலவு பண்றீங்கன்னு காட்டக்கூடியது இது, இதுனால நம்மளோட பயன்பாட்டைத் தேவையைப் பொறுத்து கூட்டிக்கவும் குறைச்சிக்கவும் முடியும்.

10)  APP LIMITS :-

மிகவும் வரவேற்க தகுந்த ஒரு மாற்றம் இது. ஏற்கெனவே இந்த வசதி ஆண்ட்ராய்ட்ல இருந்தாலும் இது ஆப்பிள் ஏரியாவுக்குப் புதுசு. இந்த வசதியினால நாம எந்த எந்தச் செயலிகள் கேமரா, மைக், லொக்கேஷன், ஸ்டோரேஜ், மேலும் சென்சார்களைப் பயன்படுத்தலாமென்று நாமே முடிவு பண்ணிக்கலாம். ஆப்பிள் அதனோட செக்யூரிட்டி சிஸ்டம்க்குப் பேர் போனது. இருந்தாலும் அதையும் தாண்டி இப்ப பயனர்களையும் தங்களுக்கு ஏத்த மாதிரி பயன்படுத்திக்க விட்டது வேற லெவெல்.

11)  NEW PARENTAL CONTROL :-

இப்போ வீட்டுல எல்லார் கையிலையும் ஸ்மார்ட் போன்ஸ் இருக்கு, நம்ம குழந்தைகள் என்ன செயலிகள்ல தங்களோட நேரத்த அதிகமா செலவிடுறாங்கன்னு பெற்றோர்கள் கண்காணிக்கும் வசதிதான் இது. பெத்தவங்க வயித்துல ஆப்பிள் ஜீஸ் வார்த்திருக்கு நம்ம  iOS - 12 அப்டேட்.

12)  APP NOTIFICATION BY GROUP:-

ரொம்ப நாளா ஐபோன் யூசர்ஸ் ஆப்பிளிடம் கெஞ்சி முறையிட்டதுக்குப் பலனா, ஆப்பிள் அதிரடியா நோட்டிஃபிகேஷன்ல செஞ்சிருக்க மாற்றம்தான் இது. ஐபோன் யூஸரா இருந்தாதான் தெரியும் இது எவ்வளவு பெரிய வரம்னு. இதுனால நமக்கு வர்ற நோட்டிஃபிகேஷன்ஸ் எல்லாம் செயலி வகையில் பிரிக்கப்பட்டு நமக்கு ஒரே குழுவா காட்டப்படும். உதாரணத்துக்கு ஃபேஸ்புக்கிலிருந்து10 நோட்டிஃபிகேஷன் வந்தா, பெரிய வால் மாதிரி எல்லாத்தையும் அடுக்கி காமிக்காம, ஒரே நோட்டிஃபிகேஷன்லையே காட்டுறதுதான் இந்த வசதி.

13)  STUDENT ID CARDS :-

இந்த வசதி இன்னும் பல இடங்கள்ல வர்ல. இருந்தாலும் கூடிய சீக்கிரம் பயன்பாட்டுக்கு வரும்ன்னு நம்பலாம். இந்த வசதி மூலமா நாம பயன்படுத்துற அடையாள அட்டைகளை உங்க  Apple Walletல டிஜிட்டலா இணைச்சிக்கலாம், உங்க கிரெடிட் கார்டு மாதிரி. இந்த வசதியை நீங்க  Apple Watch லையும் பயன்படுத்திக்கலாம்.

14)  FACE TIME :-

இதுதான் எல்லா வயதினருக்கும் புடிச்ச வசதி, ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் பார்த்துப் பேசும் வசதி, இப்போ புதுசா 32 பேரு வரைக்கும் கூடி கும்மியடிக்கலாம்னு ஆப்பிள் சொல்லிருக்கு. நம்ம பசங்களுக்குக் கேக்கவா வேணும்? இந்த வசதியை  iPhone, iPad, Mac, Apple Watch வரைக்கும் நீட்டிச்சிருக்கு ஆப்பிள்.

15)  MEMOJI, ANIMOJI AND CAMERA EFFECTS :-

ஏற்கெனவே உங்க முகத்த நீங்களே மீமோஜியாக்கும் வசதியைக் கொண்டுவந்த ஆப்பிள், இந்தத் தடவ புதுசா 4 (Tiger, Koala, T-REX and Ghost ) கேரக்டர்கள சேத்துருக்காங்க, இந்த வசதியை நீங்க  iMessage, Facetime லையும் பயன்படுத்திக்கலாம். இது மட்டுமல்லாம நீங்க FACE TIME பண்ணும் போதே இடையில போட்டோ வீடியோ, புது பில்டர்ஸ், ஸ்டிக்கர்ஸ்னு மாத்திக்கலாம்னு ரகளையா வந்திருக்கு இந்த iOS12 அப்டேட்.

வாழ்க்கை வட்டத்திலிருந்து செவ்வகமா மாறி ரொம்ப நாள் ஆச்சு பாஸ். அப்டேட்டா இருப்போம். ஆனந்தமா இருப்போம்.