Published:Updated:

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்

ஃபுட்டுகேட்

உணவு பற்றிய விழிப்புஉணர்வு அளிக்கும் ஆப் இது. உடல் எடையை எப்படி குறைப்பது, எந்த உணவு சாப்பிட்டால் எவ்வளவு எடை குறையும், எந்த உணவு சாப்பிட்டால் என்ன பயன் என்பது குறித்த விவரங்களையும், கலோரி எண்ணிக்கை மற்றும் அதன் பயன்களையும் கொடுக்கிறது. 2,50,000 உணவு பொருட்களை ஏ, பி, சி, டி என தரம் பிரித்து அளிக்கிறது. ரெசிப்பிக்களையும் வழங்கும் இந்த ஆப்பின் ப்ளே ஸ்டோர் ரேட்டிங் 4.3. இந்த ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் கிடைக்கிறது. 50 லட்சம் பேர் இந்த ஆப்பை பயன்படுத்துகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.fooducate.nutritionapp&hl=en

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஸ்ட்ராவா

ஸ்ட்ராவா இன்றைய ஃபிட்னெஸ் ஆப்ஸ்களில் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது. சைக்கிளிங், ரன்னிங் போன்ற நாம் செய்யும் பயிற்சிகளை ட்ராக் செய்து காட்டும் இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. 10 மில்லியன் நபர்களால் பயன்படுத்தப்படும் இந்த ஆப்ஸில் எவ்வளவு வேகத்தில் சைக்கிள் ஓட்டியுள்ளோம். சராசரி வேகம் என்ன? எத்தனை க்லோரி குறைந்துள்ளது என்ற துல்லியமான தகவல்களை தரும். இந்த தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரவும் முடியும். மேலும் நண்பர்களுடன் இணைந்து கூட்டாக ஃபிட்னெஸ் ட்ராக் செய்யவும் இந்த ஆப் உதவுகிறது. பெரும்பாலான சைக்கிளிங் க்ளப்களின் விருப்ப பட்டியலில் இந்த ஆப் இருப்பது இதன் பலம். குறைந்த அளவு மெமரியை எடுத்து கொள்வதால் பயன்பாட்டாளர்களின் மொபைலில் இதற்கு தனி இடம். இதன் பேசிக் வெர்ஷன் இலவசமாகவும், ப்ரீமியம் வெர்ஷன் கட்டணத்திலும் கிடைக்கிறது.

https://play.google.com/store/apps/details?id=com.strava

-ச.ஸ்ரீராம்