Published:Updated:

100 கோடி யூஸர்ஸ்... ஃபேஸ்புக்கைவிட வேகமாக வளரும் இன்ஸ்டாகிராம்!

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமும் இப்போது 100 கோடி பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது இன்ஸ்டாகிராம். IGTV என்ற தனது லாங் ஃபார்ம் வீடியோ ஆப்பை சான் பிரான்ஸிஸ்கோவில் வெளியிடும் நிகழ்ச்சியில் இதை அறிவித்தது இன்ஸ்டாகிராம். 2012-ல் 40 மில்லியன் பயனர்களுடன் இருந்த இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் வாங்கியது. அதன் பின்னர் 6 வருடத்தில் 1 பில்லியன் பயனர்கள் என்ற இந்த மைல்கல்லை எட்டியதுடன் இன்னும் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

 ஃபேஸ்புக்கின் மற்ற சமூக வலைதளங்களும் ஒரு பில்லியன் பயனர்களை ஏற்கெனவே கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப் (1.5 பில்லியன்), மெசேஞ்சர் (1.3 பில்லியன்), ஃபேஸ்புக் (2.2 பில்லியன்) என்ற வெற்றிப்பாதையில் 100 மில்லியன் மாதாந்தர பயனர்களுடன் 1 பில்லியன் வாடிக்கையாளர்ளுடன் இணைந்துள்ளது இன்ஸ்டா. கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் ஸ்நாப்சாட் 2.13 சதவிகிதம் அதிக பயனர்களைப் பெற்றுள்ளது, ஃபேஸ்புக் 3.14 சதவிகிதம் அதிக பயனர்களைப் பெற்றுள்ளது, ஆனால், இன்ஸ்டாவோ 5 சதவிகிதம் அதிக பயனர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

க்ளிக்கி தள்ளுறோம் மக்களே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism