Published:Updated:

நாணயம் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

நாணயம் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

Appsஞா.சுதாகர்

நாணயம் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

Appsஞா.சுதாகர்

Published:Updated:
நாணயம் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

ங்களின் நிதி நிர்வாகத்தை எளிதாக்கும் இரண்டு ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் அறிமுகங்கள் இங்கே...

நாணயம் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

மொபில்ஸ்: பட்ஜெட் ப்ளானர் (Mobills: Budget Planner)

உங்களின் தினசரி வரவு செலவுகளை நிர்வகிக்க உதவும் ஆண்ட்ராய்டு டைரிதான் இந்த ஆப். இதனை போனில் இன்ஸ்டால் செய்தவுடன் கூகுள், ஃபேஸ்புக் ஐ.டி-கள் மூலமாகவோ அல்லது தனியாகக் கணக்கு ஒன்றைத் தொடங்கியோ பயன்படுத்த முடியும். மற்ற ஃபைனான்ஸ் ஆப்களில் இருப்பது போன்றே வரவு செலவுகளைக் குறித்துக்கொள்ளும் வசதி, மாதாந்திர மற்றும் வாராந்திர செலவுகளை பைசார்ட் மூலம் காணும் வசதி, கிராஃப் வசதி, பாஸ்வேர்டு லாக் வசதி ஆகியவை இதிலும் உண்டு.

ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் செலவுகளை, தனித்தனியாக பிரித்துக் குறித்துக்கொள்ளலாம். நீங்கள் இதுவரை செலவு செய்த பணத்தின் மதிப்பு, உங்களிடம் இன்னும் மீதம் இருக்கும் பணத்தின் மதிப்பு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பணப் பரிமாற்றங்கள் ஆகிய அனைத்தையும் இதில் எளிதாகப் பார்க்க முடிகிறது. இதனைப் பயன்படுத்த எப்போதும் இணையவசதி தேவையில்லை. ஆஃப் லைனிலும் இதனைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஆன்லைன் வந்தவுடன் உங்கள் கணக்கு விவரங்களை இணையத்தில் சிங்க் செய்துகொள்ளும்.

ஆப்பை முதல்முறை இன்ஸ்டால் செய்து திறந்ததுமே, ஆப் பற்றிய டிப்ஸ்கள் இருக்கின்றன. புதியவர்கள் எளிதில் புரியும்படி இல்லாமல், கொஞ்சம் கஷ்டப்பட்டு புரிந்துகொள்கிற மாதிரி  இருக்கிறது இந்த ஆப் டிசைன். சில கூடுதல் வசதிகளைப் பயன்படுத்த, இதன் ப்ரோ வெர்ஷனைப் பயன்படுத்தவேண்டும். ஆனால், இதன் இலவச வெர்ஷனிலேயே தேவையான அளவுக்கு வசதிகள் இருப்பதால், அதற்கு அவசியம் ஏற்படாது.

இந்த மாதத்தில் உங்கள் பட்ஜெட்டுக்கான வரம்பு எவ்வளவு என்பதை நிர்ணயித்துக்கொண்டு, அதற்கேற்றபடி உங்கள் செலவுகளைத் திட்டமிட முடியும். அதிக ஆப்ஷன்கள் இல்லாமல், எளிமையான ஒரு ஆப் வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஆப் நல்ல சாய்ஸ்.

நாணயம் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

மணி மேனேஜர் எக்ஸ்பென்ஸ் & பட்ஜெட் (Money Manager Expense & Budget)

நீங்கள் இன்ஸ்டால் செய்து, திறந்தாலே இந்த ஆப் பயன்படுத்தத் தயாராகிவிடுகிறது. மிக எளிதாகப் பயன்படுத்தும்படியும், அதிக ஆப்ஷன்களுடனும் இருக்கிறது இந்த மணி மேனேஜர். உங்களுடைய வரவு மற்றும் உங்களுடைய செலவு இரண்டையும் வெகு எளிதாகக் கணக்கிடவும், நிர்வகிக்கவும் உதவும் ஆப் இது.

உங்களுடைய வருமானம், தினசரி செலவுகள், எந்த விஷயங்களுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள், அலுவலகக் கணக்குகள், வாராந்திர, மாதாந்திர கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டுகளை நிர்வகிக்கும் வசதி எனத் தேவையான அத்தனை வசதிகளும் இருக்கின்றன. ஆன்லைனில் இருக்கும்போது, ஆப்பில் வரும் விளம்பரங்கள் மட்டுமே எரிச்சல் தருவதாக இருக்கிறது. மற்றபடி எல்லா ஏரியாவிலும் கில்லியாக இருக்கிறது இந்த ஆப். அதேபோல, உங்கள் பட்ஜெட் தகவல்களை பேக் அப் எடுத்துக்கொள்ளவும், மின்னஞ்சல் அனுப்பிக்கொள்ளவும், கூகுள் ட்ரைவில் பதிவு செய்துகொள்ளவும் இதன்மூலம் முடியும்.

உங்கள் செலவு மற்றும் வரவு விவரங்களைப் பதிவு செய்யும்போது, எளிதாகக் கணக்கிட உதவுவதற்காக இன்பில்ட் கால்குலேட்டர் வசதி இருக்கிறது. அதேபோல மாதம், வருடம் என உங்கள் வரவு செலவுகளை சார்ட் மூலமாகக் காணலாம். ஏகப்பட்ட ஆப்ஸ்கள் ப்ளே ஸ்டோரில் இருந்தாலும், ஆப்பின் தரமான வடிவமைப்பு மற்றும் வசதிகள் மூலமாக, சிறந்த பட்ஜெட் ஆப்களில் ஒன்றாக இருக்கிறது இது.