Published:Updated:

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

எமெர்ஜென்சி டாக்டர்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


சாலையில் விபத்து நடந்தாலோ அல்லது யாருக்காவது மருத்துவ அவசரம் என்றாலோ பெரும்பாலானோர் பதற்றமடைந்து விடுவார்கள். காரணம், என்ன செய்ய வேண்டுமென்று தெரியாததுதான். அந்தச் சமயங்களில் ஒரு வெர்ச்சுவல் டாக்டராகவே உதவி செய்கிறது இந்த ஆப். ஒவ்வொரு எமெர்ஜென்சி தேவைக்கும் என்ன மாதிரியான முதல் உதவி தர வேண்டும் என்பதை படங்களுடன், ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரிக்கிறது இந்த ஆப். அதைப் பார்த்தே தேவையான முதலுதவியை யார் வேண்டுமென்றாலும் கொடுக்க முடியும்.

அவசரத்துக்கு மொபைலில் ‘இணைய சேவை’ தேவையுமில்லை. ஆஃப்லைன் மோடிலும் வேலை செய்யும் இந்த ஆப். அது மட்டுமில்லாமல், நாம் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் இருக்கும் மருத்துவமனைகளையும், அங்கு விரைவாக நம்மைக் கொண்டு சொல்லும் வழிகளையும் சொல்கிறது. எமர்ஜென்சி உதவிக்கு 112 அழைக்கவும் ஆப்பில் வசதி உண்டு.

https://play.google.com/store/apps/details?id=org.indianredcross.firstaid&hl=en

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஆப் வடிவில் ஆன்லைன் பார்மஸி

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!


1 எம்.ஜி என்பது ஒரு முழுமையான மருத்துவக் கைடு ஆப். அனைத்து மருந்துகளுக்கும் அவற்றின் பலன்கள் என்னென்ன... எதிர் விளைவுகள் என்னென்ன எனத் தெளிவாகக் கூறும் ஆப். இதை ஓர் ஆன்லைன் பார்மஸி என்றே கூறலாம். இதன் மூலம் மருந்துகளை ஆர்டர் செய்து பெற முடியும். அலோபதி, ஆயுர்வேதிக், ஹோமியோபதி என எல்லா வகையான மருந்துகளும் இந்த ஆப்பில் வாங்க முடியும். இந்தியாவில் உள்ள 277 நகரங்களில் இருந்து மருந்தை ஆர்டர் செய்யலாம். உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களை இதன் மூலம் பெற முடியும். ஆய்வகச் சோதனைகளுக்கு புக் செய்வது அதனை டாக்டரிடம் காட்டி அறிவுரை பெறுவது என அனைத்து விஷயங்களுக்கும் இணைப்பாக அந்த ஆப் விளங்குகிறது. மேலும் இந்தியாவின் சிறந்த டாக்டர்களின் அறிவுரைகளை இலவசமாகப் பெறவும் இந்த ஆப் வழிகாட்டுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.2 ரேட்டிங் பெற்றுள்ள இந்த ஆப், ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது.

https://play.google.com/store/apps/details?id=com.aranoah.healthkart.plus&hl=en

ச.ஸ்ரீராம்