Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம்கார்த்தி

கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம்கார்த்தி

Published:Updated:
கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

மோட்டோ G5 ப்ளஸ்

ஆன்லைன் மொபைல் விற்பனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது மோட்டோரோலா நிறுவனம்தான். 2014-ம் ஆண்டு மோட்டோ G-ல் ஆரம்பித்த அதன் தெறி விற்பனை, சில மாதங்கள் முன்பு வெளியான மோட்டோ G4 ப்ளஸ் வரை தொடர்ந்தது. மொபைலின் விலையும் பட்ஜெட்டுக்குள் இருப்பதால், அனைவரது ரசிகர்களையும் தன்னிடம் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. தற்போது, புதிதாக மோட்டோ G5, மோட்டோ G5 ப்ளஸ் என்ற இரு மாடல்கள் வந்திருக்கின்றன. சின்னச் சின்ன மாற்றங்கள்தான் என்றாலும், அவற்றை கவனிக்கும்படி அமைத்திருக்கிறது மோட்டோரோலா. மோட்டோ G4 ப்ளஸ்ஸில் இருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் பாதுகாப்பை, மோட்டோ G5 ப்ளஸ்ஸிலும் தொடரச் செய்து இருக்கிறார்கள். எப்போதும்போல இந்த முறையும் லேட்டஸ்ட் ஸ்பெக்ஸ்களைத் தர மோட்டோ தயங்கவில்லை. 5.2" ஸ்க்ரீன், Qualcomm® Snapdragon™ 625 2.0 GHz ஆக்டோ கோர் பிராசஸர், டூயல் சிம் போன்ற அம்சங்களை இதில் கொடுத்திருக்கிறார்கள். டூயல் ஆட்டோஃபோகஸ் 12 மெகாபிக்ஸல் ரியர் கேமராவும், 5 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமராவும் தரப்பட்டிருக்கிறது.

கேட்ஜெட்ஸ்

அதிவேக சார்ஜிங் வசதி தரப்பட்டிருந்தாலும், 3000mAh பேட்டதான் போதவில்லை. 128 ஜிபி வரை மெமரி கார்டு பயன்படுத்தி, மொபைலின் மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம். பட்ஜெட் மொபைலில், ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் அப்டேட்டான நௌகட் 7.0 இருப்பது கூடுதல் ப்ளஸ். ரெட்மியின் நோட் 4, இந்த மொபைலுடன் போட்டி போடும் பட்சத்தில், நோட் 4 தான் பலரது சாய்ஸாக இருக்கும்.

ஸ்ப்ளிட்வைஸ் Splitwise

நண்பர்களுடன் ஜாலியாக உங்கள் காரில் ஒரு வாரம் ட்ரிப் அடிக்க பிளான் செய்கிறீர்கள். திட்டமிடலில், அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் நிதி நிலையும் ஒன்று. ட்ரிப் முடிந்து வீடு திரும்பும்போது, ஆளுக்கு  எவ்வளவு என கணக்குப் பார்த்து, அதில் தவறுகள் உருவாகி, மனக்கசப்புகள் வரை நீளும். அடுத்த முறை ட்ரிப் செல்லும் வரை சிலர் கணக்கு போட்டுக்கொண்டு இருப்பார்கள். இது போன்ற ட்ரிப்களில் நடக்கும் களேபரங்களைத் தவிர்க்க ஆப் ஒன்று இருக்கிறது.

கேட்ஜெட்ஸ்

ஸ்ப்ளிட்வைஸ் என்னும் ஆப் மூலம் இதைச் சுலபமாகச் செய்ய முடியும். இந்த ஆப்பில், உங்கள் நண்பர்களை நீங்கள் சேர்க்க வேண்டும். அதில், செலவு செய்யும் அனைத்தையும் குறித்து வைத்துக் கொள்ளலாம். அதேபோல், நீங்கள் வாங்கும் பில்களையும், இதில் பதிந்து வைத்துக்கொள்ள முடியும். பணம் முழுவதுமாக அவரிடம் இருந்து வாங்கிவிட்டால், ‘Settled up’ என மார்க் செய்தும் கொள்ளலாம். நண்பர்களுடன், அடிக்கடி ட்ரிப்களில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த ஆப்.

சாம்ஸங் கேலக்ஸி C9 ப்ரோ

கேட்ஜெட்ஸ்

கேலக்ஸி சீரிஸில் புதிதாக சாம்ஸங் வெளியிட்டிருக்கும் மொபைல், சாம்ஸாங் கேலக்ஸி C9 ப்ரோ. லெனோவோ, அசூஸ், ஒன் ப்ளஸ் போன்ற மொபைல் நிறுவனங்களுக்குப் போட்டியாக  ஹை எண்டு ஸ்பெக்ஸுடன் இந்த மொபைலை உருவாக்கி இருக்கிறது சாம்ஸங். 6" ஃபுல் HD சூப்பர் AMOLED டிஸ்பிளே ஸ்க்ரீன், 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, Qualcomm Snapdragon 653 அக்டோ கோர் பிராசஸர் என அசத்தலாக வெளியாகி இருக்கிறது. 256ஜிபி வரை மெமரி கார்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.  டூயல் சிம் ஸ்லாட் தனியாகவும், மெமரி கார்டு ஸ்லாட் தனியாகவும் தரப்பட்டு இருக்கிறது. 16 மெகாபிக்ஸல் கேமராக்களை ரியர், ஃபிரன்ட் என இரு பக்கங்களிலும், அலங்கரித்து இருக்கிறார்கள். ரியர் கேமராவுக்கு கூடுதலாக டூயல் டோன் ஃபிளாஷ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொபைலுடன் 4000 mAh பேட்டரி தரப்பட்டு இருப்பதால், தாராளமாக ஒரு நாளைக்கும் அதிகமாக, இந்த மொபைல் நிலைத்து நிற்கும். அதே போல், சார்ஜ் செய்வதும் டைப்-சி போர்ட் என்பதால், அதிவேகமாகவும் சார்ஜாகிவிடும்.  விலை அதிகமான இந்த மொபைலிலும்கூட, சாம்ஸங் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் அப்டேட்டான நௌக்கட்டை தராமல், மார்ஷ்மெல்லோ 6.0 மென்பொருளைப் பயன்படுத்தி இருப்பது ஆச்சர்யமளிக்கிறது.
அதிகம் படம் பார்ப்பவர்கள், தாராளமாய் சில ஆயிரங்கள் அதிகம் செலவு செய்து இந்த மொபைலை வாங்கலாம்.

+ ப்ளஸ்: சிறப்பான கேமரா, பெரிய ஸ்க்ரீன்

- மைனஸ்: நௌகட் அப்டேட் இல்லை, விலை