உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சிகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஓய்வும் அவசியம். உடலுக்கு உறுதியளிக்கிற பயிற்சிகளைச் செய்வதைப் போன்று உடலை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளும் முக்கியம்.

நாள்தவறாமல் ஜிம்முக்கு ஓடிக்கொண்டேயிருப்பது மட்டும் சரியான ஆரோக்கியமாகிவிடாது. இதைப் புரிந்துகொண்டுதான் இந்த ஆப்பை உருவாக்கியிருக்கிறார்கள். உடலையும் உள்ளத்தையும் ரிலாக்ஸ் செய்ய மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றைச் சரியான முறையில் கற்றுத்தருகிறது ‘பேபுலஸ்’. எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுக்கொடுப்பதால், லட்சக்கணக்கானோர் இந்த ஆப் மூலம் இணைந்திருக்கிறார்கள். நீங்களும் முயற்சிசெய்து பாருங்கள்.

ப்ளே ஸ்டோர்: https://play.google.com/store/apps/details?id=co.thefabulous.app

ஆப்பிள் ஸ்டோர்: இன்னும் வரவில்லை.

விளையாட்டாகச் செய்யலாம் வொர்க்அவுட்

ஒரு நாற்காலி, ஒரு சுவர், உங்கள் உடல் போதும். ஒரு ஜிம் தயார் என்கிறது இந்த ஆப். ஏழு மாதங்களுக்கு, வாரத்தின் ஏழு நாள்களுக்கும் ஏழு நிமிட வொர்க் அவுட்களை சொல்லித்தருகிறது இந்த ஆப் மாஸ்டர். ஒவ்வொரு பயிற்சியும் 30 விநாடிகள். அதன் பின் 10 விநாடிகள் ஓய்வு. இப்படியே ஏழு நிமிடங்கள் தொடர் பயிற்சி. எழுத்து மூலம் மட்டுமின்றி, இந்த ஆப் வாய்ஸ் மூலமாகவும் பயிற்சிகளை விளக்குகிறது. தவிர, ஆன்லைன் விளையாட்டைப்போல மூன்று ‘லைஃப்’ தருகிறார்கள். இடையில் என்றேனும் பயிற்சிகளைச் செய்யாமல் விட்டால் ஒரு லைஃப் போய்விடும். மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.

விளையாட்டாகவும் சீரியஸாகவும் நம் உடல்நலனைக் கவனிக்கும் இந்த ஆப் மாஸ்டரை நம்பிச் சேரலாம்.

ப்ளே ஸ்டோர்: https://play.google.com/store/apps/details?id=com.popularapp.sevenmins&hl=fr

ஆப்பிள் ஸ்டோர்: https://itunes.apple.com/us/app/7-minute-workout-seven-high/id650276551?mt=8

- ஸ்ரீராம்