நடப்பு
தொடர்கள்
Published:Updated:

டிஜிட்டல் நோட்ஸ் ஆப்ஸ்!

டிஜிட்டல் நோட்ஸ் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டிஜிட்டல் நோட்ஸ் ஆப்ஸ்!

ஞா.சுதாகர்

சின்னச் சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, திட்டமிட்டுச் செய்யப்போகும் பெரிய வேலையாக இருந்தாலும் சரி, எதையும் எளிதாகக் குறித்து வைத்துக் கொள்ளவும், திட்டமிடவும் உதவும் ஆப்ஸ்தான் இவை இரண்டும்.

டிஜிட்டல் நோட்ஸ் ஆப்ஸ்!

கூகுள் கீப்  Google Keep

டிஜிட்டல் நோட்ஸ் ஆப்ஸ்!

சின்னச் சின்னக் குறிப்புகள் முதல் முக்கியமான செக் லிஸ்ட் வரை அனைத்தையும் கூகுள் கீப் மூலம் செய்யலாம். டெக்ஸ்ட் வடிவம் மட்டுமின்றி, போட்டோ நோட்ஸ் எடுக்கவும் வசதியிருப்பதால், புகைப் படங்களையும் குறிப்புகளுடன் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

பணிகளைத் திட்டமிட்டுச் செய்வதற்காக ‘ரிமைண்டர்’ வசதி இருக்கிறது. ஒரே வேலையை இரண்டு பேர் இணைந்து செய்ய வேண்டுமென்றால், மின்னஞ்சல் மூலம் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம். மேலும், குறிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

அளவில் சிறியதாகவும், பயன்படுத்த மிக எளிதாகவும் இருப்பதுதான் இந்த ஆப்பின் ப்ளஸ். நிறையக் குறிப்புகள் இருந்தாலும்கூட, அவற்றை பல வண்ணங்களில் பிரித்துப் பார்க்க முடிகிற எளிய ஆப் டிசைன், எழுத்துக்களை டைப் செய்வது மட்டுமின்றி, டிஸ்ப்ளே மீது எழுதியும் நம் குறிப்புகளைச் சேமித்துக் கொள்ளும் வசதி, செக் லிஸ்ட் ஆப்ஷன் போன்றவை இதன் ஸ்பெஷல்.

கூகுள் சேவை என்பதால், கூகுள் கணக்குடன் இதனை ‘சிங்க்’ செய்துவிட்டு, பின்னர் லேப்டாப், டேப்லட், டெஸ்க்டாப் என எதில் வேண்டுமானாலும் தகவல்களைப் பார்க்க முடியும். கூகுளின் வாய்ஸ் சர்ச் வசதியான ‘ஓகே கூகுள்’ வசதி இதிலும் இருப்பதால், உங்கள் குரல் மூலமாகவே குறிப்புகளைப் பதிவு செய்யலாம். கேட்ஜெட் களில் இருக்க வேண்டிய மினி டைரி இந்த கூகுள் கீப்.

டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.keep&hl=en

எவர் நோட் Evernote

டிஜிட்டல் நோட்ஸ் ஆப்ஸ்!

கூகுள் நோட்ஸ் ஆப்பை விடவும் இன்னும் அதிக வசதிகள் மிக்க ஆப் இந்த எவர் நோட். முதலில் ஒரு மின்னஞ்சல் தந்து, இதில் கணக்கு துவங்கி, பின்பு  இதனைப் பயன்படுத்தலாம். சிங்கிள் க்ளிக் மூலம் டெக்ஸ்ட், ஸ்கெட்ச், ஆடியோ, போட்டோ எனப் பல வகையான குறிப்புகளை இதில் பதிவிட முடியும்.

ஏதேனும் ஆவணங்களை போட்டோ நோட்டாகப் பதிவு செய்ய வேண்டும் எனில், இந்த ஆப்பே ஸ்கேனராகவும் செயல்படும். இதில் ஆவணங்களைத் துல்லியமான படங்களாகச் சேமிக்கவும் முடியும். 

மற்றபடி வழக்கமான ஆப்ஸ்களில் இருக்கும் நேர்த்தியான டிசைன், ரிமைண்டர் வசதி, குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி, டேட்டாவை சிங்க் செய்துகொள்ளும் வசதி போன்றவை  இதிலும் உண்டு. பிரவுசர்களில் நாம் படிக்கும் செய்திகள், ஆவணங்களைக் கூட எளிதாக இதில் ‘காப்பி’ செய்துகொள்ள முடியும்.  கணினியிலும் எவர்நோட் வேண்டுமெனில், ‘வெப்’ வெர்ஷனைப் பயன்படுத்தவும், கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும் வழிகள் உள்ளன. நம்முடைய குறிப்புகளை டிஜிட்டலில் பதிவு செய்து கொள்ளவும், அதனை எளிதாகக் கையாளவும் நிறைய வழிகள் இருப்பதால், கல்வி, பெர்சனல், ஆபீஸ் எனப் பல இடங்களிலும் பயன்படும் ஆப் இது.

டவுன்லோட் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.evernote&hl=en