நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!

பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!

கேட்ஜெட்ஸ்ஞா.சுதாகர்

பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!

மொபைல் போனில் விதவிதமான விஷயங்களுக்கு ஆப்ஸ்கள்  பயன்படுகிற மாதிரி, கணினியின் பிரவுசர்களில் பயன்படுபவை பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள். இவற்றை டவுன்லோடு செய்ய பிரவுசர்களில் எக்ஸ்டென்ஷன் ஸ்டோர்கள் இருக்கின்றன. ப்ளே ஸ்டோரில் இருந்து ஆப்களை டவுன்லோடு செய்வதைப்போல, இந்த பிரவுசர் எக்ஸ்டென்ஷனிலிருந்து எக்ஸ்டென்ஷன்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

அலுவலக வேலைகளுக்கு உபயோகமாக இருக்கும் சில குரோம் எக்ஸ்டென்ஷன்கள் பற்றிய அறிமுகம் இதோ. இவற்றை குரோம் வெப் ஸ்டோரில் டவுன்லோடு செய்யலாம்!

பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!

கிராமர்லி Grammarly

ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து அலுவலக மின்னஞ்சல் வரை பல இடங்களில் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டியிருக்கும். அப்படி ஆங்கிலத்தில் டைப் செய்யும் போது நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நடக்கும் இலக்கணப் பிழைகள், நிறுத்தற் குறியீடுகள், எழுத்துப் பிழைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து சரிசெய்வதே இதன் பணி. 

இணையத்தில் எங்கு டைப் செய்தாலும் பிழைகளை சரி செய்ய இந்த எக்ஸ்டென்ஷன் உதவும். ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களுக்கு தவறில்லாத ஆங்கிலத்தில் தகவல் அனுப்ப இந்த கிராமர்லி மிகவும் உதவும்.

டவுன்லோடு செய்ய: https://chrome.google.com/webstore/detail/grammarly-for-chrome/

பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!

நாய்ஸ்லி Noisli

இரைச்சலான சூழலில் பணிபுரிபவர்களை ரிலாக்ஸ் செய்யும் எக்ஸ்டென்ஷன் இந்த நாய்ஸ்லி. அலுவலக டென்ஷனைக் குறைப்பதற்காக பலரும் பணி நேரத்தில் இசை கேட்போம். அந்த டெக்னிக்கை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி லைக்ஸ் குவித்திருக்கிறது நாய்ஸ்லி. அதாவது, இயற்கையின் இசையான மழை, காற்று, இடி,  நீர்த்துளியின் ஒலி போன்றவற்றைத் தொடர்ந்து கேட்க உதவுகிறது இந்த நாய்ஸ்லி.

இதுபோன்ற இயற்கையின் ஓசைகளை வைத்து நீங்களே சிறு இசைக்குறிப்பையும் கம்போஸ் செய்து, இயர்போனில் ஓடவிடலாம்.

டவுன்லோடு செய்ய: https://chrome.google.com/webstore/detail/noisli/klejemegaoblahjdpcajmpcnjjmkmkkf?hl=en-GB

பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!

பாக்கெட் Save to Pocket

ஒரு நாளில் ஃபேஸ்புக் போஸ்ட், யூ-டியூப் வீடியோ, செய்திகள் எனப் பல விஷயங்களை இணையத்தில் பார்ப்போம். அவற்றில் முக்கிய மானவற்றை அதன் இணைய முகவரிகளோடு குறித்து வைத்துக்கொள்ள உதவுவதே   இந்த பாக்கெட். இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பிரவுசர்களில் பார்க்கும் எந்த முகவரியையும் சிங்கிள் கிளிக்கில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். பின்னர் தேவைப்படும்போது அவற்றைப் பார்த்துக் கொள்ள லாம். இதனை டவுன்லோடு செய்துவிட்டால், பிரவுசர் ஹிஸ்டரியைத் தேடி அலைய வேண்டியிருக்காது.

டவுன்லோடு செய்ய : https://chrome.google.com/webstore/detail/save-to-pocket/niloccemoadcdkdjlinkgdfekeahmflj?hl=en-GB

பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!

பூமராங் Boomerang for Gmail

ஜிமெயிலில் மின்னஞ்சல்களைச் சரியாகத் திட்டமிட்டு அனுப்பவும், கையாளவும் உதவும் எக்ஸ்டென்ஷன்தான் இந்த பூமராங். மற்ற எக்ஸ்டென்ஷன்கள் குரோம் பிரவுசரில் மட்டுமே இருக்கும். ஆனால், இதனை நம் ஜிமெயிலுடனும் இணைக்க வேண்டும். இணைத்துவிட்டால் பின்பு பூமராங் நம் ஜிமெயிலுக்குள்ளேயே இணைந்துவிடும்.

பொதுவாக, ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பினால் உடனே சென்று சேர்ந்துவிடும். தற்போது அனுப்பும் மின்னஞ்சல் இரவு எட்டு மணிக்குதான் டெலிவரியாக வேண்டும் என்றெல்லாம் நாம் முடிவு செய்ய முடியாது. ஆனால், பூமராங் மூலம் இதனைச் செய்யமுடியும். மேலும், ஆங்கிலத்தில் நாம் அனுப்பும் மின்னஞ்சல்களை AI மூலம் படித்து, சிறந்த மெயிலை எப்படி அனுப்ப வேண்டும் என்பதற்கும் உதவி செய்கிறது.

டவுன்லோடு செய்ய:
https://chrome.google.com/webstore/detail/boomerang-for-gmail/mdanidgdpmkimeiiojknlnekblgmpdll?hl=en-GB

பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்!

கூகுள் டிரான்ஸ்லேட் Google Translate

கூகுளின் மொழிபெயர்ப்பு சேவைதான் இந்த கூகுள் டிரான்ஸ்லேட். இதனை உங்கள் குரோம் பிரவுசரில் இணைத்துவிட்டால்போதும். மிக எளிதாக வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம். இணையத்தில் கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் மொழிபெயர்க்க வேண்டுமென்றால், அந்த வார்த்தைகளை காப்பி செய்து, கூகுள் டிரான்ஸ்லேட் பக்கத்துக்குச் சென்று அவற்றை பேஸ்ட் செய்ய வேண்டும்.

ஆனால், இந்த எக்ஸ்டென்ஷன் இருந்தால், அதற்கான தேவையே இருக்காது. எந்த வார்த்தை அல்லது வாக்கியத்தை மொழிபெயர்க்க வேண்டுமோ, அதை செலக்ட் செய்தால் போதும். உடனே அதற்கான மொழிபெயர்ப்பைக் காண முடியும். இந்த மொழிபெயர்ப்பு மிகத் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும்,  பொருள் அறிந்து படிக்க நிச்சயம் உதவும். 

டவுன்லோடு செய்ய: https://chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en-GB