நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இ-புத்தகங்கள் படிக்க உதவும் ஆப்ஸ்!

இ-புத்தகங்கள் படிக்க உதவும் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
இ-புத்தகங்கள் படிக்க உதவும் ஆப்ஸ்!

இ-புத்தகங்கள் படிக்க உதவும் ஆப்ஸ்!

இ-புத்தகங்கள் படிக்க உதவும் ஆப்ஸ்!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; ஆனால், இருப்பதோ ஸ்மார்ட் போன்கள்தான். இந்த முரணைச் சரிசெய்யும் ஒரு புள்ளிதான் இ-ரீடிங் ஆப்ஸ்.  இவற்றை மொபைலில் இன்ஸ்டால் செய்தால் போதும். பி.டி.எஃப்  (Pdf) கோப்புகள் முதல் கிண்டில் மின்னூல்கள் வரை அனைத்தையும் விரல்நுனியில் வைத்துப்  படிக்கலாம். அப்படி உங்களுக்கு உதவும் சில ஆப்ஸ் இனி...

இ-புத்தகங்கள் படிக்க உதவும் ஆப்ஸ்!

அமேசான் கிண்டில் (Amazon Kindle)

அமேசான் கிண்டில் ரீடர் போலவே, மொபைலிலும் புத்தகங்கள் படிக்க உதவுகிறது இந்த கிண்டில் ஆப். தமிழ், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் ஏகப்பட்ட புத்தகங்கள் இதில் படிக்கக் கிடைக்கின்றன. ஆப் டிசைன், எளிதாகப் படிக்க உதவும் சின்னச் சின்ன வசதிகள், மின் புத்தகங்களின் தரம் மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கைதான் இந்த கிண்டில் ஆப்பின் ப்ளஸ். ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனித்தனியாகப் பணம் செலுத்தியோ அல்லது மொத்தமாக மாத, வருடச் சந்தா செலுத்தியோ புத்தகங்களைப் படிக்கலாம். கிண்டில் நூல்கள் மட்டுமின்றி மற்ற பி.டிஎஃப் கோப்புகளைக்கூட இந்த கிண்டில் ஆப் மூலம் படிக்கலாம். மேலும், கிண்டில் அக்கவுன்ட்டில் நாம் சேமிக்கும் புத்தகங்களை கிண்டில் ரீடர், கணினி, டேப்லட் என எதில் வேண்டுமானாலும் படிக்க முடியும் என்பது சிறப்பு.

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle&hl=en

இ-புத்தகங்கள் படிக்க உதவும் ஆப்ஸ்!

ஆல்டிகோ புக் ரீடர் (Aldiko Book Reader)

அடிப்படை அம்சங்கள் மட்டும் கொண்ட எளிமையான இ-புக் ரீடர்தான் இந்த ஆல்டிகோ புக் ரீடர்.  கிண்டில் போல பல மொழிகளில் நிறையப் புத்தகங்கள் இல்லை என்றாலும், ஆங்கிலத்தில் நிறையப் புத்தகங்கள் கிடைக்கின்றன. மேலும், போனில் டவுன்லோடு செய்து வைத்திருக்கும் இபப் (Epub), பி.டி.எஃப். புத்தகங்களையும் இதில் படிக்க முடியும். மற்றபடி ரீடிங் ஆப்களில் இருக்கும் எழுத்துரு மாற்று வசதிகள், நிறங்கள், புக்மார்க் ஆப்ஷன்கள் மொபைல் ப்ரைட்னஸ் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்கள் அனைத்தும் இதிலும் உண்டு. நிறைய மின் புத்தகங்கள் வைத்துக்கொண்டு, படிப்பதற்கு நல்ல இ-ரீடர் மட்டும் வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஆல்டிகோ நல்ல சாய்ஸ்.

டவுன்லோடு லிங்க் :
https://play.google.com/store/apps/details?id=com.aldiko.android&hl=en

இ-புத்தகங்கள் படிக்க உதவும் ஆப்ஸ்!

மூன் ரீடர் (Moon+ Reader)

மின் நூல்கள் படிப்பதற்கு, நல்ல தரமான இ-ரீடர் வேண்டும் என்பவர்களுக்கு மற்றுமொரு சாய்ஸ் இந்த மூன் ரீடர். ஆப் டிசைன், வேகம், தரம் என அனைத்திலுமே நேர்த்தியாக இருக்கிறது. உங்களிடம் இருக்கும் மின் புத்தகங்களைப் படிக்க உதவுவதோடு ஆன்லைன் நூலகங்களில் இருந்து நூல்களைத் தரவிறக்கம் செய்யவும் மூன் ரீடர் உதவுகிறது.

 நிறையப் புத்தகங்கள் படிப்பவர் என்றால், புத்தகங்களை எளிமையாக வகைப்படுத்தி இந்த ஆப்பில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இப்படி நிறைய ப்ளஸ் பாயின்ட்ஸ் இருந்தாலும், அடிக்கடி இடையே வரும் விளம்பரங்கள்தான் இதில் ஒரே சிக்கல். மற்றபடி ஒரு முழுமையான இ-ரீடராக இருக்கிறது இந்த ஆப்.

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.flyersoft.moonreader&hl=en

- ஞா.சுதாகர்