Published:Updated:

GADGETS

GADGETS
பிரீமியம் ஸ்டோரி
GADGETS

கேட்ஜெட்ஸ் : டிஜிட்டல் உலகம் கார்த்தி

GADGETS

கேட்ஜெட்ஸ் : டிஜிட்டல் உலகம் கார்த்தி

Published:Updated:
GADGETS
பிரீமியம் ஸ்டோரி
GADGETS

நோக்கியா 3310 (2017)

ப்பிள் நிறுவனம், டச் ஸ்கிரீன் கொண்ட மொபைல்களை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், பலரின் மனத்திரைகளில் நோக்கியாவின் 3310 மொபைல் இன்னமும் இருக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பின்பு, மீண்டும் அந்த மொபைலை தற்போதைய சூழலுக்கு ஏற்ப  உருவாக்கம் செய்திருக்கிறது நோக்கியா.

2.4” ஸ்கீரின், 2 மெகாபிக்ஸல் LED ஃபிளாஷ் கேமரா, 22 மணி நேர டாக்டைம் தரும் பேட்டரி, 16 MB இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் போன்ற வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது 3310. 32 ஜிபி வரை மெமரி கார்டு சப்போர்ட்டும் உண்டு.

GADGETS

பழைய மொபைலுடன் ஒப்பிடும்போது, மொபைல் மிக எடை குறைவாகவும் (79.6 கிராம்) ஸ்லிம்மாகவும் இருக்கிறது. நம்பர் கீ-பேடில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும், நேவிகேஷன் கீயைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். பழைய மாடலைப் போல, ஒவ்வொரு கீயின் மீதும் ஏறி அமரத் தேவையில்லை. ஸ்மூத்தாகவே இருக்கிறது. நோக்கியா 3310 மாடலுக்கே உரித்தான ஸ்நேக் கேம், இதில் அவ்வளவு சிறப்பாக இல்லை; பழைய மொபைலில் வசதிகள் குறைவாக இருந்தாலும், அதிலிருந்த ஒரு ஃபீல், இதில் இல்லை. மேலும், இந்த விலைக்கு, மார்க்கெட்டில் இதைவிடச் சிறப்பான மொபைல்கள் நிறைய வெளிவந்துவிட்டன.

‘மம்மி திரைப்படமோ, நோக்கியா 3310 மொபைலோ, பழையதுதான் மெர்சல்!’

ஒன் ப்ளஸ் 5

‘நெவர் செட்டில்’ என அடைமொழியுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர், அமேசான் வலைதளத்தில் தனது முதல் மொபைலை வெளியிட்டது ஒன் ப்ளஸ். பிற நிறுவனங்களைப் போல பட்ஜெட் மொபைல்களை வெளியிடாமல், நவீன ஸ்பெக்ஸுடன்கூடிய ‘ஃபிளாக் ஷிப் கில்லர்களை’ வெளியிட்டு, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. கடந்த ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு மொபைல்களில், டாப் இடத்தைப் பிடித்தது ஒன் ப்ளஸ் 3T-தான். இந்த நிலையில் அடுத்த மாடலான ஒன் ப்ளஸ் 5-ஐ, கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருக்கிறது.

மார்க்கெட்டின் டாப் மோஸ்ட் ஸ்பெக்ஸை, தன் புது மொபைலுக்கு வழங்கும் ஒன் ப்ளஸ் நிறுவனம், இந்த முறையும் எந்தக் குறையையும் வைக்கவில்லை. Qualcomm® Snapdragon™ 835 Octa-core பிராசஸர், 5.5” Optic AMOLED 1080P Full HD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 என எல்லாமே அசரடிக்கும் லேட்டஸ்ட் ஸ்பெக்ஸ். 153 கிராம் எடையில், மார்க்கெட்டிலேயே ஸ்லிம்மான (7.25mm) மொபைல் இதுதான். இதிலும் டூயல் நேனோ சிம் ஸ்லாட் (வழக்கம் போல் மெமரி கார்டு ஸ்லாட் இல்லை), டைப் சி போர்ட் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.

GADGETS

மொபைலின் குறிப்பிடத்தக்க மாற்றம், அதன் ரியர் கேமராதான். அது ஐபோன் 7+ மொபைலை அப்படியே பிரதி எடுத்திருந்தாலும், இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அட்டகாசமாக இருக்கின்றன. Sony IMX 398 சென்ஸார் - 16 மெகாபிக்ஸல் வைடு ஆங்கிள் கேமரா, Sony IMX 350 சென்ஸார் - 20 மெகாபிக்ஸல் டெலிஃபோட்டோ கேமரா என இரண்டு கேமராக்கள், ரியர் கேமராவாகச் செயல்படுகின்றன. DSLR கேமராவில் இருக்கும் பல ஆப்ஷன்கள் இதில் உள்ளன. ஃப்ரன்ட் கேமராவுக்கு 16 மெகாபிக்ஸல் Sony IMX 371 சென்ஸார் தரப்பட்டு இருக்கிறது. ரியர் கேமராவுக்கு டூயல் LED ஃபிளாஷும், ஃபிரன்ட் கேமராவுக்கு சிங்கிள் ஃபிளாஷும் தரப்பட்டிருக்கின்றன. ஐபோன் 7+ அளவுக்கு இதன் ஃபோட்டோக்கள் க்ரிஸ்ப்பாக இல்லை என்றாலும், ஐபோன் 7+ மாடலுக்குத் தரும் விலையில் பாதிகூட இந்த மொபைலின் விலை இல்லை.  .

பல மொபைல்களிலும் இருக்கும் ‘வாட்டர் ரெஸிஸ்டென்ட் டிஸ்பிளே’ போன்ற பாதுகாப்பு அம்சங்களை, ஒன் ப்ளஸ் தரத் தயங்குவது இதன் மிகப் பெரிய மைனஸ்.

3,300mAh பேட்டரியுடன் அதிவேக சார்ஜிங் வசதிக்காக, டேஷ் சார்ஜர் வசதியும் இருக்கிறது. மொபைலில் இருக்கும் Qualcomm Snapdragon 835 octa-core (4x2.45GHz + 4x1.9GHz) பிராசஸர,் அனைத்து விதமான செயல்களையும் எளிதாக முடிக்கிறது. ஹோம் பட்டனில் இருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார், நொடியில் மொபைலை ஆன் செய்து இயக்குகிறது. 30 நிமிடத்தில், ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரத்தை, (70% வரை) இந்த டேஷ் சார்ஜரைப் பயன்படுத்திப் பெற முடிகிறது. சாம்சங் S8, கூகுள் பிக்ஸலைவிட இதன் சார்ஜிங் வேகம் அதிகம்.

6 ஜிபி ரேம் / 64 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் கூடிய மொபைல் ரூ.32,999-க்கும், 8 ஜிபி ரேம் / 128 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் கூடிய மொபைல் ரூ.37,999-க்கும் விற்கப்படுகின்றன.

ப்ளஸ்:

ரியர் கேமராவின் அட்டகாசமான திறன்

மைனஸ்:

வாட்டர் ரெஸிஸ்டென்ட் இல்லை