Published:Updated:

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

பிரீமியம் ஸ்டோரி

ரன் பேபி ரன்!

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஓட வேண்டும் என முடிவு செய்துவிட்டால் அதற்கு உதவ ஏராளமான ஆப்ஸ் இருக்கின்றன. அவற்றில், C25k ரொம்ப சிம்பிள் என்கிறார்கள் இதன் யூஸர்ஸ். எளிமையான பயிற்சிகளின் மூலம் தொடர்ந்து ஓட்டப்பயிற்சி செய்ய ஊக்கமளிக்கிறது இந்த ஆப். முதல் ஐந்து நிமிடங்கள் நடைப்பயிற்சி, அடுத்ததாக ஜாகிங், அதன்பின் ஓட்டம் என முறையாகப் பயிற்சி செய்ய, வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் இந்த ஆப், பயிற்சிகளை வழங்குகிறது. இயர்போனை மாட்டிக்கொண்டு, ஸ்டார்ட் பட்டனைத் தட்டிவிட்டால் போதும்; நாளொன்றுக்கு 30 நிமிடங்கள், வாரத்துக்கு 3 நாள்கள் என்ற கணக்கில் இந்த ஆப் மூலம் பயிற்சி மேற்கொண்டால், மொத்தம் எட்டே வாரங்களில் 5 கிலோமீட்டர் தூரத்தை எளிதாக ஓடத் தயாராகியிருப்போம். எளிதான வடிவமைப்புக்காக உலகளவில் பல பத்திரிகைகள் இந்த அப்ளிகேஷனைப் பாராட்டியிருக்கின்றன.

ப்ளே ஸ்டோர் : https://play.google.com/store/apps/details?id=com.c25k&hl=en

அமைதிக்கு ஐந்தே நிமிடங்கள்!

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

தியானம் (Meditation) செய்ய நேரமில்லை என்பவர்கள், ஒரு நாளில் ஐந்து நிமிடங்கள் மட்டும் ஒதுக்கினால் போதுமென்கிறது இந்த அப்ளிகேஷன். வேலையில் கவனம் செலுத்த, தூக்கமின்மையைப் போக்க, மன அழுத்தத்தைக் குறைக்க என எந்தக் காரணத்துக்கும், ஐந்து முதல் இருபது நிமிடப் பயிற்சிகள் மூலம் இந்த ஆப் தீர்வளிக்கிறது. நடந்து செல்லும்போது, அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கு ம்போது என எப்போது வேண்டுமானாலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும். பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகளை எளிதாக வகைப்படுத்தியிருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இதை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

ப்ளே ஸ்டோர் : https://play.google.com/store/apps/details?id=com.simplehabit.simplehabitapp&hl=en

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு