நடப்பு
தொடர்கள்
Published:Updated:

போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்!

போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்!

கேட்ஜெட்ஸ்

மொபைலே ஒரு மினி கேமரா என்றாகிவிட்ட பிறகு, அந்த சந்தையைக் குறிவைத்து நிறைய சமூக வலைதளங்கள், ஆப்ஸ் போன்றவை வந்துவிட்டன. அவற்றில் ஒன்றுதான், போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்களும். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் எனப் பல சமூக வலைதளங்களில் நாம் புகைப்படங்களை அப்லோட் செய்வதற்கு முன்னரே, சிறிய அளவில் எடிட் செய்வதற்கு ஃபில்டர்கள் இருக்கின்றன. அவற்றைத் தாண்டியும் நல்ல போட்டோ எடிட்டர்கள் தேவைப்படுவோர் இவற்றைப் பரிசீலிக்கலாம். 

ஸ்னாப்சீட்

போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்!

Snapseed 

கூகுள் நிறுவனத்தின் போட்டோ எடிட்டிங் ஆப்தான் இந்த ஸ்னாப்சீட். இதற்கு முன்பு போட்டோ எடிட்டர்களைப் பயன்படுத்தாதவர்கள்கூட எளிதாக, எடிட் செய்ய உதவும் இன்ஸ்டன்ட் எடிட்டராக இருக்கிறது ஸ்னாப்சீட். 29 எடிட்டிங் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும் இந்த ஆப்-ஐ இணையவசதி இல்லாமலே பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. 

போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்!

படங்களின் அளவு, நிறம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என எல்லா ஆப்ஷன்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அதிகமான டூல்ஸ் இருக்கும் நிறைய போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் இருந்தாலும், அவற்றை மொபைலில் பயன்படுத்துவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும். காரணம், நிறைய மெனுக்களைத் திணித்திருப்பார்கள். ஆனால், இதில் எல்லா மெனுக்களும், ஆப்பில் தெளிவாக இடம்பெற்றிருப்பதால், குழப்பமின்றி அவற்றைப் பயன்படுத்த முடிகிறது.

ஃபில்டர்கள், எடிட்டிங் டூல்ஸ் போன்றவை தெளிவாக தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையான, அதே சமயம் அதிக எடிட்டிங் டூல்ஸ் கொண்ட ஆப் வேண்டும் என்பவர்களுக்கு ஸ்னாப்சீட் நல்ல சாய்ஸ்.

டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.niksoftware.snapseed&hl=en

பிக்ஸ்ஆர்ட் ஸ்டூடியோ

போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்!

PicsArt

ணினியில் எடிட் செய்யும் அளவுக்குத் துல்லியமான எடிட்டிங் டூல்கள் வேண்டுமென்றால், நீங்கள் பிக்ஸ்ஆர்ட் ஸ்டூடியோ ஆப்பை டவுன்லோட் செய்யலாம். ஆனால் இதில் எடிட் செய்ய வேண்டும் என்றால், முழுக்க முழுக்க இணைய வசதி தேவை என்பதே இதன் ஒரே மைனஸ். காரணம், ஒவ்வொரு ஆப்ஷனைப் பயன்படுத்தும்போதும் அதற்கு இணையம் தேவை.    

போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்!

மற்றபடி மெனு ஆப்ஷன்கள், எடிட்டிங் டூல்கள்,  ஸ்டிக்கர்கள், ஃபில்டர்கள் என விதவிதமான வசதிகளால் நிறைந்திருக்கிறது இந்த பிக்ஸ்ஆர்ட். போட்டோவை எடிட் செய்ய, ஸ்டிக்கர்களை உருவாக்க, படம் வரைய, கொலாஜ் செய்ய என இந்த ஒரே ஆப்பிலேயே இத்தனை வசதிகள் இருப்பது சூப்பர்.

உங்களின் சாதாரணப் புகைப்படங்களைக்கூட இதன் மூலம் ஸ்டிக்கர்களாக மாற்றலாம். பிரிஸ்மா ஆப் போலவே, புகைப்படங்களை ஓவியங்களாக மாற்றுவதற்கான மேஜிக் ஆப்ஷனும் இருக்கிறது. மேலும், ஆன்லைனுடன் இணைந்திருப்பதால், நிறைய டெம்ப்ளேட்களும் கிடைக்கின்றன. ஒரு முழுமையான போட்டோ எடிட்டிங் ஆப் வேண்டுமென்றால் பிக்ஸ்ஆர்ட் கைகொடுக்கும்.

டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio&hl=en

- ஞா.சுதாகர்