பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

வாட்டர் டாக்டர்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!



உணவு இடைவேளையைக் காலை, மதியம், இரவு எனப் பிரித்து வைத்திருப்பதால் அவற்றைச் சரியாகப் பின்பற்றுகிறோம். ஆனால் தினமும் இத்தனை நிமிட இடைவெளியில் தண்ணீர் குடிக்கவேண்டும் என ஏதாவது விதிமுறை வைத்திருக்கிறோமா?  இல்லையே... போதுமான அளவிற்குத் தண்ணீர் அருந்தாவிட்டால் நம் உடலுக்குத்  தேவையான அளவிற்கு நீர்ச்சத்து  கிடைப்பதில்லை.  இதனால் மனரீதியான பிரச்னை தொடங்கி, உடல் ரீதியான பிரச்னைகள் வரை பல சிக்கல்கள் வருகின்றன. இந்தச் சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது ‘ஹைட்ரோ கோச்.’

தினசரி  நம் உடலுக்குத் தேவைப்படும் தண்ணீரை, சரியாக அருந்த வைப்பதுதான் இதன் வேலை. வயது, உடல் எடை, பாலினம், உடற்பயிற்சிகள் ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு, நாம் தினமும் சராசரியாக எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் எனச் சொல்கிறது இந்த ஆப். ஒவ்வொரு முறையும் திரவ உணவுகள் அருந்திய பின்னர், அந்தத் தகவல்களை இதில் பதியவேண்டும். இதைவைத்துக் கொண்டு, இந்த ஆப் காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரையிலும், நாம் அருந்திய திரவ உணவுகள் எவ்வளவு, இன்னும் இந்த நாளில் நம் உடம்பிற்குத் தேவையான தண்ணீரின் அளவு எவ்வளவு ஆகியவற்றை நமக்குக் காட்டும். #StayHydrated என்பதுதான் ஹைட்ரோகோச்சின் பன்ச்.

ப்ளே  ஸ்டோர்  லிங்க்
: https://play.google.com/store/apps/details?id=com.codium.hydrocoach

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!



“கண்ணான கண்ணே நீ கலங்காதடி” என நம் கண்களைச் சிரத்தையுடன் கவனித்துக்கொள்ள உதவும் ஆப், ‘ஐ எக்சர்சைஸஸ்’. உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உடற்பயிற்சிகளோ, அதைப்போலவே கண்களுக்கும் பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை எளிமையாகச் சொல்லித்தருவதுதான் இந்த ஆப்பின் பணி.

காலை எழுந்ததும் செய்யவேண்டிய கண் பயிற்சிகள், மாலையில் பணிகளை முடித்துவிட்டுச் செய்யவேண்டிய பயிற்சிகள், இடையில் கண் அயர்ச்சி ஏற்படும் சமயங்களில் செய்யவேண்டிய பயிற்சிகள் என 50-க்கும் மேற்பட்ட கண் பயிற்சிகளைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறது இந்த ஆப். ஒவ்வொரு பயிற்சியையும் ஆப் உடன் இணைந்தே செய்யலாம். இணையவசதியே தேவையில்லை. இதுதவிர கண்குறைபாடுகள் பற்றிய குறிப்புகள், அவற்றுக்காக மேற்கொள்ளவேண்டிய பயிற்சிகள் போன்றவைற்றையும் இணைத்திருப்பது இதன் சிறப்பு.

ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.eyeexamtest.eyecareplus

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு