நடப்பு
Published:Updated:

வீடியோ காலிங் ஆப்ஸ்!

வீடியோ காலிங் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடியோ காலிங் ஆப்ஸ்!

கேட்ஜெட்ஸ்

கேமரா மொபைல் போன்களில் உள்ள முக்கியமான அப்ளிகேஷன்களில் ஒன்று, வீடியோ காலிங் வசதி. ஸ்கைப், ஐ.எம்.ஓ தொடங்கி, பல வீடியோ காலிங் ஆப்ஸ் இருந்தாலும்கூட, அவற்றை அதிகம் பயன்படுத்தாமல் இருக்கக் காரணம் மெதுவான இணைய வேகம்தான். ஆனால், 2G நெட்வொர்க்கிலேயே கலக்கும் இரண்டு வீடியோ காலிங் ஆப்ஸ் இங்கே...

ஸ்கைப் லைட்

வீடியோ காலிங் ஆப்ஸ்!வீடியோ காலிங் என்றதுமே இன்றளவும் நினைவுக்கு வரும் ஒரு பெயர் ஸ்கைப். இதன் லைட் வெர்ஷனை, இந்தியாவுக்்கென பிரத்யேகமாக இந்த ஆண்டு அறிமுகம் செய்தது மைக்ரோசாஃப்ட். வீடியோ காலிங் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் என இரண்டும் இணைந்திருப்பதுதான் ஸ்கைப் லைட்டின் ஸ்பெஷல்.   

வீடியோ காலிங் ஆப்ஸ்!

2G நெட்வொர்க் சப்போர்ட், குறைவான பேட்டரியை எடுத்துக்கொள்ளும் திறன், குறைவான டேட்டா பயன்பாடு, 13         எம்.பி மட்டுமே கொண்ட ஆப் சைஸ், எஸ்.எம்.எம்.எஸ்-களை கையாளும் வசதி என நிறைய ப்ளஸ் பாயின்ட்களுடன் இருக்கிறது லைட். வீடியோ காலிங் வசதியோடு, மெசேஜ், குரூப் சாட், ஸ்கைப் பாட்ஸ் என பல வசதிகள் இத்துடன் இணைந்திருப்பது இதன் சிறப்பு.

இதில் எவ்வளவு டேட்டா செலவாகி இருக்கிறது என்பதையும் ஆப்பிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

இத்தனை வசதிகள் இருந்தாலும்கூட, ஆப்பை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இன்னும் யூசர் ஃபிரண்ட்லியாக வடிவமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இது மட்டும்தான் இதன் மைனஸ் என்று சொல்லலாம்.

டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.skype.m2

கூகுள் டுயோ

வீடியோ காலிங் ஆப்ஸ்!கூகுள் நிறுவனத்தின் வீடியோ காலிங் ஆப்தான் இந்த டுயோ. இன்ஸ்டால் செய்வதில் தொடங்கி பயன்படுத்துவது வரை அத்தனை செயல்பாடுகளும் மிக மிக எளிமையாக இருப்பதுதான் இதன் ப்ளஸ். இன்ஸ்டால் செய்துவிட்டு, உங்கள் மொபைல் நம்பரை மட்டும் பதிவு செய்தால் போதும், டுயோ ரெடி.    

வீடியோ காலிங் ஆப்ஸ்!

இந்த ஆப்பைப் பயன்படுத்தும் யாருக்கு வேண்டுமானாலும் டுயோ மூலம் சிங்கிள் க்ளிக்கில் வீடியோ கால் செய்யமுடியும். இதுதவிர, இன்டெர்நெட் ஆடியோ கால் வசதியையும் சேர்த்துத் தந்திருக்கிறது  கூகுள். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இரண்டிலும் இதனைப் பயன்படுத்தலாம். எனவே, ஆண்ட்ராய்டு போனிலிருந்து, ஆப்பிள் யூசருக்கும் கால் செய்யலாம்.

டுயோவின் முதல் பலம், இதன் எளிமைதான்; அடுத்தது வீடியோ காலின் தரம். குறைவான இணைய வேகம் உள்ள வைஃபை மற்றும் நெட்வொர்க்குக்கும்கூட சப்போர்ட் செய்கிறது. இணைய வேகத்தைப் பொறுத்து வீடியோ காலின் தரம் கூடுகிறது.

மேலும், இன்னொருவரின் வீடியோ அழைப்பை ஏற்பதற்கு முன்பாகவே, அவரின் முகத்தைப் பார்க்கும் knock-to-Knock வசதியும் உள்ளது. இது தேவையில்லை எனில், டிஸேபிள் செய்துகொள்ளலாம்.

இதில் பகிரப்படும் நம் குறித்த தகவல்கள் அனைத்துமே எண்ட்-டூ-எண்ட் என்க்ரிப்ட் செய்யப் பட்டது என்கிறது கூகுள். மிக எளிமையான வீடியோ காலிங் ஆப் வேண்டும் எனில், டுயோ பெஸ்ட்.

டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.tachyon

- ஞா.சுதாகர்