நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பயனுள்ள அரசு ஆப்ஸ்!

பயனுள்ள அரசு ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயனுள்ள அரசு ஆப்ஸ்!

கேட்ஜெட்ஸ்

ரிவிதிப்புக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்வதாக இருந்தாலும் சரி, நம் ஆவணங்களை மின்னணு முறையில் பாதுகாத்து வைப்பதாக இருந்தாலும் சரி,  அதற்கென ஆப்ஸ் வந்துவிட்டன. அரசாங்கமே இதுபோன்ற சேவைகளுக்கான பிரத்யேக ஆப்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் பயனுள்ள இரண்டு ஆப்ஸ் இங்கே...  

பயனுள்ள அரசு ஆப்ஸ்!

ஜி.எஸ்.டி ரேட் ஃபைண்டர்  (GST Rate Finder)

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி, எந்தச் சேவைக்கு எவ்வளவு வரி என ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்துவருகின்றன. மொத்த வரி விதிப்பு முறைகளையும் நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது.  இந்தப் பிரச்னைக்கு உதவும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த ஆப்தான் இது. 

பயனுள்ள அரசு ஆப்ஸ்!



இந்த ஆப்பில் பொருள்கள் மற்றும் சேவைகளின் வரிகளுக்கான படிநிலைகள் தனித்தனியாக தெளிவாக இடம்பெற்றுள்ளன. எந்தப் பொருளுக்கு, எவ்வளவு வரி என்பதை இதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம். வரியின் அளவு மட்டுமின்றி, பொருள்களின் விவரங்களும் தெளிவாகக் காட்டப்படுகின்றன. இதுதவிர, பொருள்கள் அல்லது சேவைகளின் பெயர்களைக் கொண்டும் இந்த ஆப்பில் தேடமுடியும். ஜி.எஸ்.டி விவரங்களை இதன் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.

வணிகர்கள், நுகர்வோர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் ஆஃப் இது. அளவில் மிகவும் சிறியதான இந்த ஆப்பை, இணைய வசதி இல்லாமலேகூட பயன்படுத்தலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி என இருமொழிகளில் மட்டுமே தற்போதைக்கு இயங்குகிறது. விரைவில் மற்ற மொழிகளும் சேர்க்கப்பட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

டவுன்லோடு செய்ய:
https://play.google.com/store/apps/details?id=in.gov.cbec.gsttaxratemanual&hl=en

டிஜிலாக்கர் (DigiLocker)

வணங்களை மின்னணு முறையில் சேமித்து வைத்துக்கொள்வதற்காகவும், நிஜ ஆவணங்களுக்குப் பதில் மின்னணு ஆவணங் களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சேவைதான் இந்த டிஜிலாக்கர்.

பயனுள்ள அரசு ஆப்ஸ்!



நம் ஆவணங்களை ஸ்கேன் செய்து மின்னணு ஆவணங்களாக இதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இது தவிர, ஆதார் எண்ணை டிஜிலாக்கர் கணக்குடன் இணைத்து விட்டால், சில சேவைகளுக்கு அரசின் நிஜ ஆவணங்களையேகூட மின்னணு முறையில் பெறமுடியும். தற்போதைக்கு வாகன லைசென்ஸ் மட்டுமே கிடைக்கிறது. வருங் காலத்தில் நிறைய சேவைகளுடன் இணைக்கப் படும்போது இது பயனுள்ளதாக அமையலாம். இந்த ஆப்பினை ஆதார் எண் இல்லாதவர்களும் பயன்படுத்தலாம்.

1 ஜி.பி அளவுக்கான ஆவணங்களை இதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். மொபைல் ஆப் மட்டுமின்றி, கணினி மூலமாகவும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். பயனுள்ள சேவைதான் என்றாலும், பலமுறை தொழில் நுட்ப சிக்கல்கள் ஏற்படுவது எரிச்சலடைய வைக்கிறது. இவற்றை அரசு விரைந்து சரி செய்தால், குடிமக்களுக்கு பாதுகாப்பான மின்னணு ஆவணக் காப்பகமாக இது இருக்கும்.

டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.digilocker.android&hl=en

- ஞா.சுதாகர்