
கேட்ஜெட்ஸ்
முதலில் பெரியவர்கள் கைகளில் மட்டுமே இருந்த மொபைல், தற்போது குழந்தைகளின் கைகளிலும் தவழ ஆரம்பித்துவிட்டது. செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு உதவுகிற மாதிரி நிறைய ஆப்ஸ் வந்துவிட்டன. அவர்களுக்குப் பயனளிக்கும் இரண்டு ஆப்ஸ் இங்கே..

யூடியூப் கிட்ஸ் YouTube Kids
முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான யூ-டியூப் தான் இது. டிசைன் முதல் வீடியோக்கள் வரையிலுமே குழந்தைகளுக்கேற்றதாக இருக்கிறது இந்த ஆப். குழந்தைகளுக்கே உரிய குதூகலத் துடனும், வண்ணமயமாகவும் இருப்பதுதான் இதன் ஸ்பெஷல்.

கல்வி தொடர்பான வீடியோக்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டு எனத் தனித் தனியாக வீடியோக்கள் தொகுக்கப்பட்டி ருக்கின்றன. வீடியோக்களைத் தேடுவதற்கு ‘சர்ச்’ வசதியும் இருக்கிறது. சாதாரணமான யூடியூப் போல, இதில் எல்லா வீடியோக்களும் வராது.
குழந்தைகளுக்கேற்ற வீடியோக்கள் மட்டுமே இதில் காட்டப்படும். அதைக்கூட வயதுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஒருவேளை, தேவையற்ற வீடியோக்கள் வந்தால், அதனை பிளாக் செய்யும் வசதியும் இருக்கிறது.
ஆப்-ஐக் கட்டுப்படுத்த பேரன்டல் கன்ட்ரோல் ஆப்ஷன்களும் இருக்கின்றன. இசை, செய்தி, விளையாட்டு போலவே, குழந்தைகளுக்கென்றும் யூடியூபில் தனி மார்க்கெட் இருக்கிறது. அவர்களுக்காக நிறைய சேனல்கள் இயங்குகின்றன. அவை அனைத்தையும் எளிமையாக இதில் தொகுத்திருக்கிறது யூடியூப். நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கைதான் இதன் ப்ளஸ்.
டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.youtube.kids&hl=en

வேர்ட் சேலஞ்ச் Learn English with Johnny Grammar’s Word Challenge
சலிப்படையும் வகையில் இல்லாமல், ஆங்கில இலக்கணத்தை சின்ன சின்ன விளையாட்டுகள் மூலமாகக் குழந்தைகளுக்குக் கற்பித்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்கிறது பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தின் வேர்ட் சேலஞ்ச் ஆப்.

ஆங்கிலத்தின் ஆரம்ப நிலையில் இருந்து இலக்கணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுத் தருகிறது. பாடம் எடுப்பதுபோல இல்லாமல், சின்னச் சின்னத் தேர்வுகள், விளையாட்டுகள் மூலமாகவே சொல்லித் தருகிறது. ஒவ்வொரு பாடத்தையும் முடித்தவுடன், அடுத்தடுத்த பாடங்களுக்குச் செல்லலாம். இடையிடையே நிறைய விளம்பரங்கள் வருவது மட்டும்தான் இதில் இருக்கும் அசௌகர்யம்.
இதேபோல, ஒலிக்கோப்புகளைக் கேட்பதினால் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள, புதிய ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொள்ள, வீடியோக்கள் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள என நிறைய ஆப்ஸ், ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர் கள்கூட இவற்றைப் பயன்படுத்தலாம்.
டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.ubl.spellmaster&hl=en
- ஞா.சுதாகர்
படம்: தான்யராஜு