நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

ன்றைக்கு நம்மில் பலருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்ட்இன் எனச் சமூக வலைதளக் கணக்குகள் இருக்கின்றன. நண்பர்களுடன் உறவாடவும், நம் கருத்துக்களை வெளியுலகுக்குத் தெரிவிக்கவும்தான் சமூக வலைதளங்களில் இந்தக் கணக்குகளை ஆரம்பித்திருக்கிறோம். போதும், வெளியுலகோடு நாம் உறவாடியது என நாம் நினைக்கும்பட்சத்தில் அவற்றிலிருந்து வெளியேறுவது எப்படி? அதற்கான வழிகள் இதோ... 

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?



 ஃபேஸ்புக்:  https://www.facebook.com/help/delete_account என்ற முகவரிக்குச் சென்று, ‘Delete my account’ என்பதைத் தேர்வு செய்தால், உங்களுடைய கணக்கு முழுமையாக அழிந்துவிடும். ஒருவேளை, ஃபேஸ்புக்கிலிருக்கும் தகவல்கள் முக்கியமானவை என நீங்கள் நினைத்தால், அவற்றை முன்னரே டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம். 

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

ட்விட்டர்: ட்விட்டர் கணக்கை நீக்குவது மிக எளிது. நம் புரொஃபைல் பகுதியில் இருக்கும் Settings பகுதிக்குச் சென்று, ‘Deactivate my account’ என்பதைத் தந்தாலே போதும்; உடனே அது தொடர்பான தகவல் களைக் காட்டிவிடும். உங்கள் ட்விட்டர் கணக்கை 30 நாள்கள் வரைக்கும்  ‘Deactivate’ செய்துவைக்க முடியும். அதற்குள் மீண்டும் ‘லாகின்’ செய்துவிட்டால், உங்கள் கணக்கு மீண்டும் ஆக்டிவேட் ஆகிவிடும். இல்லையெனில் உங்களைப் பற்றிய  தகவல்கள் முழுமையாக ட்விட்டரில் இருந்து நீங்கிவிடும். 

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?



லிங்க்ட்இன்: லிங்க்ட்இன் கணக்கை நீக்குவதற்காக Settings & Privacy பகுதிக்குச் சென்று ‘Closing Your LinkedIn Account’ என்பதை க்ளிக் செய்து, லிங்க்ட்இன் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, உங்கள்    அக்கவுன்ட்டை நிரந்தரமாக நீக்கிவிடலாம். ஃபேஸ்புக் போலவே, லிங்க்ட்இன்னிலும் நம் தகவல்களை டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

கூகுள்: கூகுள் அக்கவுன்ட்டில் Delete your account or services என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, நம்முடைய கூகுள் கணக்கை நீக்க முடியும். கூகுளின் சேவைகளைத்  தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ நீக்க முடியும்.

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/accounts/remove/request/permanent/ என்ற இணைய முகவரிக்குச் சென்று, இன்ஸ்டாகிராம் கணக்கை முழுவதுமாக நீக்கிவிடலாம்.

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?



மேலே பார்த்தவை, நம் கணக்குகளை முழுமையாக நீக்குவதற்கான வழிகள். ஒருவர் எதிர்பாராவிதமாக திடீரென இறந்தால் அவருடைய கணக்குகள் என்னவாகும்? ஒவ்வொரு நிறுவனமும் ஒருவரது கணக்குகளை அவருக்குப் பிறகு இன்னொருவர் நிர்வகிப்ப தற்கான வாய்ப்புகளையும், மறைந்தவரின் கணக்குகளைக் குடும்பத்தினர் மற்றும்  நண்பர்கள் நீக்குவதற்கான வழிகளையும் வழங்குகின்றன. அதற்கான வழிகள் இனி...

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

ஃபேஸ்புக்: ஃபேஸ்புக்கில் Settings > General > Manage Account பகுதிக்குச் சென்றால், ஒருவர் இறந்தபின்பு அவருக்குப்பிறகு அவரது ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதற்கான வழிகள் இருக்கும். அதில் குடும்பத்தினர் அல்லது நண்பரின் ஃபேஸ்புக் முகவரியைத் தந்தால் போதும், இறந்துபோனவரின்  ஃபேஸ்புக் பக்கத்தை அவர் பயன்படுத்த முடியும். உங்கள் ஐ.டி-க்கு வரும் நட்பு அழைப்புகள், புரொஃபைல் மற்றும் கவர் போட்டோவை மாற்றுவது போன்ற விஷயங்களை மட்டுமே அவர்களால் பார்க்க முடியும். மற்றபடி புதிதாக எழுதவோ, இறந்து போனவரின் மெசேஜ்களைப் பார்க்கவோ அவர்களால் முடியாது.

வேறு யாரையும் இப்படி நியமிக்க விருப்ப மில்லையெனில், மறைவுக்குப் பின்னர் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை முழுவதுமாக அழித்துவிடவும்  வசதி இருக்கிறது. அதனைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை ஃபேஸ்புக் எப்படி முடிவு செய்கிறது? தானாக முடிவு செய்வதில்லை. நண்பர்கள்தான் ஃபேஸ்புக்குக்குத்  தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தகவல்களை ஃபேஸ்புக் சோதித்துவிட்டு, மறைந்தவரின் அக்கவுன்ட்டை ‘நினைவுகொள்ளப்படும் நபர்’ என மாற்றிவிடும். 

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?



ட்விட்டர்: ஃபேஸ்புக் போலவே, ட்விட்டரிலும் மறைந்தவர்களின் கணக்குகளை நீக்க முடியும். Help center > Policies and Reporting >  Reporting policy violations பகுதிக்குச் சென்று, மறைந்த வர்களின் ட்விட்டர் கணக்கு குறித்துத் தெரிவித்தால், அதனைச் சரிபார்த்து  ட்விட்டர் நடவடிக்கை எடுக்கும்.

சோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி?

லிங்க்ட்இன்: லிங்க்ட்இன் நெட்வொர்க்கில், மரணம் அடைந்தவர்கள் யாரேனும் இருப்பின், அவர் குறித்த தகவல்களை அளித்து, அந்தக் கணக்கை நீக்க முடியும். அதற்குத் தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். லிங்க்ட் இன்னில்  Help Center > Deceased LinkedIn Member என்ற பகுதிக்குச் சென்று இந்தத் தகவல்களை அளிக்கலாம். இப்படி கூகுளிலும் My Account பகுதிக்குச் சென்று, நம் கூகுள் அக்கவுன்ட்டுக்கு மற்றொருவரைப் பாதுகாவலராக நியமிக்க முடியும்.

- ஞா.சுதாகர்