நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃபைல் ஷேரிங் ஆப்ஸ்!

ஃபைல் ஷேரிங் ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைல் ஷேரிங் ஆப்ஸ்!

கேட்ஜெட்ஸ்

ரு மொபைலிலிருந்து இன்னொரு மொபைலுக்கு ஃபைல்களைப் பகிர்ந்துகொள்ள, ஷேர்இட், செண்டர் போன்ற ஆப்களைப் பயன்படுத்துவோம். இரண்டு மொபைல் போன்களும் அருகருகில் இருந்தால், வைஃபை மூலம் பகிர்ந்துகொள்ள இவையெல்லாம் பயன்படும். ஆனால், தூரத்தில் இருக்கும்போது இணையத்தின் மூலம்தான் பகிர்ந்துகொள்ள முடியும். பிறருக்கு எளிதாக ஃபைல்களை அனுப்ப உதவும் இரண்டு ஆப்ஸ் இதோ...   

ஃபைல் ஷேரிங் ஆப்ஸ்!

வீ டிரான்ஸ்ஃபர் we transfer

பொ
துவாக, ஜி-மெயில் மூலமாக ஃபைல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்றாலும், 25 MB வரைதான் நேரடியாக அனுப்ப முடியும். அதற்கும் அதிக அளவுள்ள ஃபைல்களை அனுப்ப வேண்டுமென்றால் கூகுள் டிரைவ் மூலம்தான் அனுப்ப முடியும். வாட்ஸ்அப்பிலும் இதேபோல பல கட்டுப்பாடுகள் உண்டு. மேலும், போட்டோக்கள், வீடியோக்களின் தரமும் குறைய வாய்ப்புண்டு. இப்படி எவ்விதத் தடையும் இல்லாமல் ஃபைல்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஆப்தான் வீ டிரான்ஸ்ஃபர். 

ஃபைல் ஷேரிங் ஆப்ஸ்!

அனுப்ப வேண்டிய ஃபைல்களைத் தேர்வு செய்து, எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்; உடனே அந்த முகவரிக்கு ஃபைலை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் சென்றுவிடும். ஃபைலை பெறுபவர்கள், அந்த லிங்க் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த லிங்க் ஒரு வாரம் கழித்துச் செயலிழந்துவிடும். அதற்குள் ஃபைல்களை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். 10 GB வரையிலான ஃபைல்களை இதன் மூலம் அனுப்ப முடியும். ஃபைல் அப்லோடு ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மட்டும்தான் இதன் ஒரே குறை.

ஆப் மட்டுமின்றி, இணையதளம் வாயிலாகவும் வீ டிரான்ஸ்ஃபர் வசதியைப் பயன்படுத்த முடியும். ஆனால், இதில் 2 GB வரையிலான ஃபைல்களை மட்டுமே அனுப்ப முடியும். இதற்கும் அதிக அளவுள்ள ஃபைல்களை அனுப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதை டவுன்லோடு செய்ய: http://bit.ly/1n7Meoj

ஃபைல் ஷேரிங் ஆப்ஸ்!

செண்ட் எனிவேர் Send Anywhere

வை
ஃபை மற்றும் இன்டர்நெட் என இரண்டு வழிகளிலும் ஃபைல்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஆப்தான் இந்த செண்ட் எனிவேர். மற்ற ஷேரிங் ஆப்களைப் போலவே, அருகில் இருக்கும் மொபைல் போன்களுக்கு வைஃபை மூலமாகவே ஃபைல்களை அனுப்பலாம். தூரத்தில் இருப்பவர் களுடன் பகிர்ந்துகொள்ள மட்டுமே இணைய வசதி தேவை. 

இதன் மூலம் அனுப்ப வேண்டிய ஃபைல்களைத் தேர்வு செய்தவுடன், பகிர்ந்துகொள்வதற்கான லிங்க் உருவாக்கப்படும். அந்த லிங்க்கைச் சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் மூலமாகக்கூட பகிர்ந்துகொள்ள முடியும். ஃபைலைப் பெறுபவர் இந்த லிங்க் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஃபைல்களை அனுப்ப, பெற்றுக்கொள்ள மற்றும் அவற்றைக் கையாள்வதற்கு ஏதுவாக, இந்த ஆப்பின் வடிவமைப்பு எளிதாக இருக்கிறது. மின்னஞ்சல் என மட்டும் இல்லாமல், சமூக வலைதளங்கள் மூலமாகவும் டவுன்லோடு செய்ய உதவுவது இதன் ப்ளஸ்.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/ZpfIIY

- ஞா.சுதாகர்