Published:Updated:

'அதே வசதிகள்... விலை 10000ரூபாய் கம்மி!" - மொபைல் மாற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு #POCOF1

கார்த்தி
'அதே வசதிகள்... விலை 10000ரூபாய் கம்மி!" - மொபைல் மாற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு #POCOF1
'அதே வசதிகள்... விலை 10000ரூபாய் கம்மி!" - மொபைல் மாற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு #POCOF1

சமீபத்தில் வெளியாகி ஆன்லைனில் சக்கைப் போடு போடும், ஒன் பிளஸ் 6ல் இருக்கும் அதே ஸ்பெக்ஸ். ஆனால், விலை 10000 ரூபாய் குறைவு. POCO F1 பற்றிய ஒன்லைன் டீசர் என்றால் இது தான். 

தற்போதிருக்கும் சூழலில் ஆண்டிராய்டில் மொபைல் வாங்க வேண்டும் என்றால் நான்கே ஆப்ஷன் தான். ஆப்ஷன் A (BBK Electronics.- ஒப்போ, விவோ, ஒன் பிளஸ், ரியல் மீ ), ஆப்ஷன் B ( Xiaomi- ரெட்மி, MI, POCO ), ஆப்ஷன் C ( Lenovo- லெனோவோ, மோட்டோரோலா ), ஆப்ஷன் D (ஹானர், வாவே ). குறைவான விலையில் கை நிறைய வசதிகளுடன் மொபைல் வாங்க இந்த நான்கு நிறுவனங்கள் தான் நம் சாய்ஸ். சாம்சங், சோனி மொபைல்களின் பாரம்பர்ய வாடிக்கையாளர்களைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

ஷியோமி நிறுவனத்தின் மிட் பட்ஜெட்டில் ஏரியாவில் கைவைக்க, ஒப்போ நிறுவனம் ரியல்மீ என்கிற பெயரில் (RealMe என்றால் RedMi போலவே தெரியுமாம் ) மொபைலை வெளியிட அது மெர்சல் ஹிட். கடுப்பான ஷியோமி நிறுவனம், BBK நிறுவனத்துக்கு வைத்திருக்கும் செக் தான் POCO F1. சமீபத்தில் வெளியாகி ஆன்லைனில் சக்கைப் போடு போடும், ஒன் பிளஸ் 6ல் இருக்கும் அதே ஸ்பெக்ஸ். ஆனால், விலை 10000 ரூபாய் குறைவு. POCO F1 பற்றிய ஒன்லைன் டீசர் என்றால் இது தான். 

'அதே வசதிகள்... விலை 10000ரூபாய் கம்மி!" - மொபைல் மாற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு #POCOF1இது ஒன் பிளஸ்ஸுக்கு போதாத காலம் தான் . ஒன் பிளஸ் 6ன் டேக்லைன் The Speed You Need என்றால், POCO F1ன் டேக்லைன் Master Of Speed. கடந்த மாதம் வெளியான அசூஸ் ஜென்ஃபோன் FZ , ஒன் பிளஸ் மொபைலை விட 5000 ரூபாய் குறைவு. இப்படி மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதில் இருக்கும் நற்செய்தி என்னவெனில், குறைவான விலையில் நிறைவான ஸ்பெக்ஸ், நமக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும். 

உண்மையிலேயே POCO F1 அவ்வளவு சிறப்பாக இருக்கிறதா?

* Qualcomm® Snapdragon™ 845 புராசஸர்
* LiquidCool டெக்னாலஜி
* 4000mAh பேட்டரி
* 20 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா
* பின்பக்க ஃபிங்கர் ப்ரின்ட் சென்சார்
* ( 12 மெகாபிக்ஸல் + 5 மெகாபிக்ஸல் ) டூயல் ரியர் கேமரா
* டைப் சி போர்ட்டுடன் கூடிய அதிவேக சார்ஜிங் வசதி
* 6.18" ஸ்கீரின் 2246 x 1080 FHD+ டிஸ்பிளே
* ஹைப்ரிட் ஸ்லாட்
* ஆண்டிராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

ரேம், இன்டெர்னல் மெமரி போன்ற விஷயங்களில் ஓர வஞ்சனை வைக்காமல், அசூஸ் ஜென்ஃபோன் FZ, ஒன் பிளஸ் 6 போன்ற மொபைல்களுடன் போட்டி போடுகிறது POCO. ரெட்மியின் தாரக மந்திரமான 'சூடு' பிரச்னைக்கு LiquidCool டெக்னாலஜி என்னும் பெயரில் மாற்று வழியைக் கண்டுபிடித்திருக்கிறது POCO. 

'அதே வசதிகள்... விலை 10000ரூபாய் கம்மி!" - மொபைல் மாற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு #POCOF1


நாட்ச் :
6.18" ஸ்கிரீனில் விசுவல்ஸ் பார்க்க POCO மொபைலில் அட்டகாசமாக இருக்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே, ஆப்பிள் Xல் இருப்பது நாட்ச் டிஸ்ப்ளேவுக்கு பிற மொபைல்கள் மாறிவிட்டாலும், ஷியோமி நிறுவனம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. POCO F1 மொபைலில் தான் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். ப்ரீமியம் மொபைல்களில் இருக்கும் ஃபேஸ் அன்லாக் இதில் இருந்தாலும், POCO இன்னும் ஸ்பெஷல். ஆப்பிளில் இருப்பது InfraRed முறையில் ஃபேஸ் அன்லாக் செய்கிறது. பிற மொபைல்களில் வெறும் கேமராவை பயன்படுத்தி ஃபேஸ் அன்லாக் எனில், POCO ஃபேஸ் அன்லாக் இன்னும் கொஞ்சம் பாதுகாப்பானது என்பது மட்டும் நிஜம். வெறும் புகைப்படங்களைக் காட்டி, POCO மொபைலை அன்லாக் செய்துவிட முடியாது என உறுதி அளிக்கிறது ஷியோமி நிறுவனம் .

சாப்ட்வேர் :
ஆண்டிராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை மையமாகக் கொண்டு MIUI 9.6 இயங்குதளத்தில் செயல்படுகிறது POCO. பிற ஷியோமி மொபைல்களுடன் ஒப்பிடுகையில், இயங்குதள அனுபவம் சிறப்பானதாகவே இருக்கிறது. ஆனால், நாம் எங்கு சென்றாலும் கூடவே வரும் வோடாஃபோன் நாய் போல், ப்ளோட்வேர்களை இந்த மொபைலிலும் நம் தலையில் கட்டியிருக்கிறது ஷியோமி. POCOவில் இன்பிலிட்டாக வரும் சில ஆப்களை அன் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என இப்போதே கதற ஆரம்பித்திருக்கிறார்கள் விமர்சகர்கள். 

'அதே வசதிகள்... விலை 10000ரூபாய் கம்மி!" - மொபைல் மாற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு #POCOF1


பெர்பாமன்ஸ் :
தற்போதைக்கு மொபைல்களில் இருக்கும் அதிவேக புராசஸர் (கோல்கம் ஸ்நேப்டிராகன் 845), அதிவேக கிராபிக்ஸ் ( Adreno 630 ), அதிக பட்ச ரேம் ( 8 ஜிபி ), இன்டெர்னல் ஸ்டோரேஜ் (256 ஜிபி ) ... இவை அனைத்தையும் 29000 ரூபாய்க்குள் ஒரு மொபைலில் கொடுக்க முடியும் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த வகையில் POCOவுக்கு முதல் பாராட்டுக்கள்.

அஸ்பால்ட் 8 முதல் தற்போதைய வைரல் PubG வரை எல்லாமே 2 ஜிபி கேம்களையும் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்கிறது POCO. Snapdragon™ 845 புராசஸரை எப்போதும் கூல் மோடில் வைத்திருக்க LiquidCool டெக்னாலஜி என்பதைப் பயன்படுத்துகிறது POCO. ஆம், பாஸ் நிஜம் தான். ரெட்மி மொபைல் சூடாவதில்லை. ரெட்மி நோட் 5 ப்ரோவும் பெரிதாக சூடாவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

4000 mAh பேட்டரி திறனுடன், டைப் சி போர்ட்டுடன் கூடிய அதி வேக சார்ஜிங் வசதி இருப்பதால், பேட்டரி பிரச்னை இல்லை. சாதாரணமாக மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு 1.5 நாள் வரை மொபைல் தாங்குகிறது. கேமர்களுக்கும் 1 நாளுக்கான பேட்டரியை வழங்குகிறது POCO.

கேமரா :
ரியர் கேமராக்கள் சிறப்பான புகைப்படங்களைக் கொடுத்தாலும், லோ லைட்டில் நாய்ஸைக் கொட்டுகிறது POCO. அனைத்து பாக்ஸ்களிலும் டபுள் டிக் அடித்த POCO, ரியர் கேமரா செக்ஷனில் மட்டும் ஜஸ்ட் பாஸ் வாங்குகிறது. ஃபிரன்ட் கேமரா 20 மெகாபிக்ஸல் லென்ஸுடன் அசத்தலாக இருக்கிறது.

பல மொபைல்கள் ப்ரீமியம் ஃபீலுக்காக பின்பக்கம் முழுக்கக் கண்ணாடிக்கு மாறிவிட்டார்கள். ஆனால், POCO பிளாஸ்டிக் பாடியில் பின் பக்கத்தை வடிவமைத்து ப்ரீமியம் ஃபீலை கெடுத்து வைத்திருக்கிறார்கள். மொபைலின் விலையை கம்மி செய்ய அடுத்து ரெட்மி கை வைத்திருக்கும் இடம் கண்ணாடி. ப்ரீமியம் மொபைல்கள் அனைத்தும் கார்னில்லா கொரில்லா கிளாஸ் 5 வரை சென்றுவிட, POCO பழைய ஃபார்மெட்டான கார்னில்லா கொரில்லா கிளாஸ் 3ஐ ஸ்கிரினுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். முதலில் ஷியோமி, தான் ஒரு பட்ஜெட் மொபைல் என்ற எண்ணத்தில் இருந்து மாற வேண்டும் என்று தோன்றுகிறது. ' எப்படியும் கண்ணாடி மாடல்களுக்கு Case கேஸ் போடத்தான் போகிறார்கள். அதனால்தான் நாங்கள் பிளாஸ்டிக் ஃபினிஷிங் கொடுத்து விலைக் குறைப்புக்கு அதைப் பயன்படுத்தி இருக்கிறோம் என POCO சொல்லும் விளக்கம் "அடப்போங்க பாஸ்" நிலையில் தான் இருக்கிறது. ப்ரீமியம் செக்மென்ட்டிலும் மிட் பட்ஜெட் செக்மென்ட் போல் கொடிகட்டிப் பறக்கவேண்டுமெனில், ப்ரீமியம் ஃபீலை முதலில் கொடுக்க வேண்டும்.

'அதே வசதிகள்... விலை 10000ரூபாய் கம்மி!" - மொபைல் மாற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு #POCOF1

பிளஸ் :-
* சிறப்பான விலை
* அட்டகாசமான பேட்டரி
* லைக்ஸ் அள்ளும் செல்ஃபி கேமரா
* அதிவேக திறன்மைனஸ் :-
* வாட்டர் ரெசிஸ்டென்ட் இல்லை
* கீழ் பகுதியில் Bezels சற்று அதிகமாகவே இருக்கிறது
* ரியர் கேமரா இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்

விலை
6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி . விலை 20,999 ரூபாய்
6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரி . விலை 23,999 ரூபாய்
8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் மெமரி . விலை 28,999 ரூபாய்
8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் மெமரி (Armoured டிசைன் ) . விலை 29,999 ரூபாய்
 
ஒன்லைன் ரிவியூ :
ஆகஸ்ட் 29ந் தேதி மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட், MI தளங்களில் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது. மொபைல் மாற்றும் ஆர்வமிருப்பவர்கள், தாராளமாய் வாங்கலாம். ஏனெனில் 1 நிமிடத்துக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டது என்கிற Out Of Stock போர்டை இப்போதே ரெடி செய்து வைத்திருக்கிறதாம் ஷியோமி நிறுவனம் .

அடுத்த கட்டுரைக்கு