நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

யூ.பி.ஐ ஆப்ஸ்!

யூ.பி.ஐ ஆப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
யூ.பி.ஐ ஆப்ஸ்!

கேட்ஜெட்ஸ்

கடந்த ஆண்டு நடந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப்பின், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான தேவை அதிகரித்துள்ளது. அப்போது அதிகம் பயன்படுத்தப்பட்ட சேவைகளில் ஒன்று யூ.பி.ஐ (UPI). நொடிப் பொழுதில் வங்கிகளுக்கிடையே பணப்பரிமாற்றம் செய்யவும், மொபைல் எண் மூலமாகப் பணம் அனுப்பவும் எளிதான வசதிகளில் ஒன்று யூ.பி.ஐ. அதைப் பயன்படுத்த இரண்டு ஆப்ஸ் இங்கே... 

யூ.பி.ஐ ஆப்ஸ்!

தேஸ் Tez

கூ
குள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பேமன்ட் ஆப்தான் ‘தேஸ்’. தனிநபர்கள், வணிகர்கள் என இருதரப்பினருக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது இந்த ஆப். 

யூ.பி.ஐ ஆப்ஸ்!



மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு எண் மூலம் இதில் வங்கிகளை இணைத்துக்கொள்ளலாம். பின்பு, மொபைல் எண் அல்லது யூ.பி.ஐ முகவரியைக் கொண்டு பணம் அனுப்பலாம்.வணிகர்கள், தங்கள் நிறுவனத்தை இதில் பதிவு செய்துகொண்டால் வாடிக்கையாளர் களிடமிருந்து உடனடியாகப் பணம் பெறலாம். இரண்டு மொபைல்கள் அருகருகே இருந்தால், முகவரிகள் ஏதும் இல்லாமல் QR கோடு அல்லது ஆடியோ QR கோடு மூலமாகவும் இதில் பணம் அனுப்ப முடியும். ஃபைல் ஒன்றை, ஒரு மொபைலிலிருந்து இன்னொரு மொபைலுக்கு அனுப்புவதுபோல, எளிதாகப் பணம் அனுப்ப முடிவதுதான் இதன் ஸ்பெஷல்.

இந்த ஆப் வெளியான முதல் நாளன்று, எந்த வங்கிக் கணக்கையும் இதனுடன் இணைக்க முடியாத அளவுக்குத் தொழில்நுட்பக் கோளாறு களுடன் இருந்தது; தற்போது அவை கொஞ்சம் சரிசெய்யப்பட்டிருந்தாலும், இன்னும் சில கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. வங்கிக் கணக்கு விவரங்களைப் பார்க்க முடியாதது, டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் பணம் அனுப்பும் வசதிகளெல்லாம் இதில் இல்லை. அவை விரைவில் இடம்பெறலாம்.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/2yj7zZa

யூ.பி.ஐ ஆப்ஸ்!

போன் பே Phone pe

மொபைல் மூலம் எளிதாகப் பணம் அனுப்ப உதவும் மற்றொரு பேமன்ட் ஆப் போன் பே. இன்ஸ்டால் செய்துவிட்டு மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும். 

யூ.பி.ஐ ஆப்ஸ்!



வங்கிக் கணக்கை இதனுடன் இணைக்காதவரை, போன் பே ஒரு வாலட்டாக மட்டும் செயல்படும். அப்போது இதில் பணத்தைப்போட மட்டுமே முடியும். வங்கிக் கணக்கை இதனுடன் இணைத்த பின்பே இன்னொருவருக்குப் பணம் அனுப்ப முடியும். மொபைல் எண் அல்லது வி.பி.ஏ (VPA) முகவரி மூலம் பணத்தை அனுப்பிக்கொள்ளலாம். வாலட் மூலமாக பில் தொகை செலுத்துவது, டிக்கெட் பதிவு செய்வது போன்ற அடிப்படையான விஷயங்களையும் செய்துகொள்ளலாம். நிறையத் தளங்களில் இந்த ஆப்புக்கென சிறப்புச் சலுகைகளும், தள்ளுபடிகளும் கிடைக்கின்றன.

இது ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பேமன்ட் ஆப் என்பதால், ப்ளிப்கார்ட், மிந்த்ரா, ஜபாங் உள்ளிட்ட தளங்களில் இந்த வாலட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம் (அமேசானில் பயன்படுத்த முடியாது). நிறைய ஆஃபர்கள் கிடைப்பதும், சிக்கலில்லாத, எளிதான செயல்பாடு களுமே இதன் ப்ளஸ்.

இந்த இரு ஆப்ஸ் தவிர, வங்கிகளின் யூ.பி.ஐ ஆப்கள், அரசின் பீம் ஆப் போன்றவையும் பயன் பாட்டில் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம்.

டவுன்லோடு செய்ய:
http://bit.ly/2clHGB7

- ஞா.சுதாகர்